(Reading time: 14 - 28 minutes)

ஹா..சாரிங்க இன்னைக்கு பேமிலியோட வெளிய போறோம் சோ நெக்ஸ்ட் வீக் பாக்கலாமா??

தட்ஸ் நைஸ்..யு கேரி ஆன்..இஃப் யூ டோன்ட் மைண்ட் எங்கநு தெரிஞ்சுக்கலாமா??

பெசண்ட் நகர் பீச்க்கு போய்ட்டு அப்படியே டின்னர் போலாம்நு யோசிச்சுருக்கேன்..

ஓ..ஓ.கே கார்த்திக் பாய்..

ஈவ்னிங் ப்ளான் செய்த்ததுபடி குடும்பத்தோடு பீச்சில் அமர்ந்திருந்தான் கார்த்திக்..பலதரப்பட்ட மக்கள்..விதவிதமான கடைகள்..குளிர்ந்த கடல் காற்று இவை தரும் சுகமே தனிதான்..அவன் தந்தை மோகன் எப்போதுமே அமைதியானவர்..கீதாவோ அதற்கு நேரெதிர்..பிள்ளைகளுக்கு சரிசமமாய் பேசுபவர்..இப்படியே சில நேர அரட்டைக்கு பின் கிளம்ப எத்ததனிக்க,

ஹாய் கார்த்திக்..குரல் வந்த திசைக்கு முதுகுகாட்டி நின்றவனுக்கு பார்க்காமலேயே புரிந்தது வந்திருப்பது யாரென்று..அய்யோ குட்டிசாத்தான்..மனம் அதுவாகவே அலறியது..

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

மீராவின் "மருவக் காதல் கொண்டேன்..." - காதல் கலந்த குடும்ப தொடர்...

படிக்க தவறாதீர்கள்..

ஹாய் சஹானா என்ன இந்தபக்கம்??

வீட்ல போர் அடிச்சது அதான் அப்பா அம்மாவோட கோவிலுக்கு வந்தேன்..அவங்க உள்ள போய்ருக்காங்க..சரி கொஞ்ச நேரம் பீச்ல நின்னுட்டு வரலாமேநு வந்தேன்..என்ன பேமிலி ஔட்டிங்கா??

அவர்கள் பேசி கொள்ளும்போதே கீதாவின் மனம் அந்த பெண்ணையே சுற்றி வந்தது..அழகான நீள்முகம்,பேசும் போது துறுதுறுவென்று அலைபாயும் கண்கள்..ஒல்லியும் குண்டுமில்லாத உடாலமைப்பு..தலைமுடியை விரித்துவிட்டு சென்டர் கிளிப் போட்டிருக்க தோள்களில் தவழுகிறது முடிகற்றை..அழகான வெள்ளைநிற லாங் ஸ்கர்ட்டும்,பிங்க் வண்ண டாப்புமாய் நின்றவளை பார்க்க கண்களுக்கு நிறைவாய்தான் இருந்தது..அதன் முக்கிய காரணம் அவளருகில் நிற்கும் தன் மகனுக்கும் அவளுக்குமான பொருத்தம்..தன் அன்னையை கண்ட ஷரவந்தி அம்மா..போதும் அண்ணாக்கு பொருத்தம் பாக்க ஆரம்பிச்சுட்டியா..

ஹே நிஜமாவே நல்லாயிருக்குலடீ..

ஐயோ அம்மா மொதல்ல யாருநு கேளு..

கார்த்திக் அவனே அனைவரிடமும் அறிமுகப்படுத்தினான்..இவங்க சேகர் சார் பொண்ணு சஹானா..பெங்களுர்ல இருந்து வந்திருக்காங்க..அனைவரையும் பார்த்து பொதுவாய் சிரித்தவள்..மோகன் கேட்ட சில கேள்விகளுக்கு அந்த நல்லவளே நாதான்ங்கிற ரேஞ்சுல பதில் கூறி கொண்டிருந்தாள்..கார்த்திக்கோ என்ன ப்ளான்னோட வந்துருக்காநு தெரிலயே..இவ இப்படி இருக்குற ஆள் இல்லையே..என தன் மூளையை கசக்கி பிளிந்து கொண்டிருக்க..அதற்குள் அவள் அனைவரிடமும் விடைபெறுவது தெரிந்தது..ஷப்பா கிளம்பிட்டா என சின்னதாய் சந்தோஷப்பட இரண்டடி முன் வைத்தவள் மீண்டுமாய் இவனை நோக்கி வந்து,

சாரி கார்த்திக் இது இங்க பேசுற விஷயமில்ல தான்..இருந்தாலும் இதவிட்டா டைம் கிடைக்காது..அது வந்து..நீங்க ஒரு பொண்ணு நம்பர் கொடுத்தீங்களே..அவங்ககிட்ட பேசினேன்..நீங்க ரெண்டு பேரும் பார்க்ல பேசிட்டு இருந்தத அவ அண்ணண் பாத்துட்டாங்களாம்..சோ இப்போ ஹவ்ஸ்ரஸ்ட் ஆக்கிட்டாங்களாம்..அவ உடனே உங்களை வீட்டுக்கு வந்து பாக்க சொன்னா..ரொம்ப பாவமா இருந்தது..எவ்ளோ சீக்கிரம் முடியுமோ போய் பாருங்க என பாவமாய் கூறிவிட்டு நகர அவன் அப்பா பார்த்த பார்வையில் தான் நடப்பது கனவில்லை என்றுணர்ந்தான்..அவன் பேச வாய்திறந்த நேரம் மெசெஜ் அவள் தான்..சாரி கார்த்திக் அந்த கஷாய மேட்டர்க்கான சின்ன ரிவெண்ஜ்..என்ஜாய்…கோவத்தையும் மீறி அதை படித்வனுக்கு சிரிப்புதான் வந்தது..

என்னடா அந்த பொண்ணு என்னலாமோ சொல்லிட்டு போறா??-கீதா..

ம்மாமா நீ வேற அவ பொய் சொல்றாம்மா..

நல்ல பொண்ணா இருக்கா அவ ஏன்டா பொய் சொல்ல போறா??-மோகன்..

வாய தொறக்கத அப்பாவயே பேச வச்சுட்டாளே பாவி..இவளலா பெத்தாங்களா இல்ல அண்டால போட்டு செஞ்சாங்களாநு தெரில..வீட்டில வச்சு வளர்க்க வேண்டிய ஜீவனேயில்ல இது என அள்ளி அள்ளி அர்ச்சனை செய்து கொண்டிருந்தான்..

என்னடா பதிலயே காணோம்..

ஐயோ நாதான் சொன்னேனேமா இவ இவ்ளோ அமைதியா பேசிட்டு போனப்பவே டவுட்டுதான்..அன்னைக்கு அவங்க வீட்டுக்கு போய்ருந்தப்போ என ஆரம்பித்து கஷாய விஷயத்தை உணர்வுபூர்வமாய் கூறி முடிக்க,அப்பா அவனை முறைத்தவாறே நகர்ந்துவிட்டார்..மற்ற மூவரும் வழக்கம்போல அவனை பலிகடாவாக்கி சிரிக்க..அவனும் அவர்களோடு கலந்து கொண்டான்..ஆனா அண்ணா சான்ஸ்லெஸ் கரெக்டர் போ..உனக்கு அப்படியே ஆப்போஸிட்..என ஷரவன் சிரிக்க கீதாவின் மனமோ மகனின் சிரிப்பை ரசித்தவாறே வேறு கணக்கு போட்டது..

அழகாக நாட்கள் நகர..அன்று காலை ஷரவந்தி வீட்டையே அமர்களப்படுத்தி கொண்டிருந்தாள்..தூக்க கலக்கத்தோடு வந்த ஷரவன்,ஏண்டி காலங்காத்தால இப்படி கத்துற..மனுஷன தூங்கவிடுறியா..

டேய் தடியா இப்படி தூங்கிட்டேயிருந்தா எப்படிடா காட்டுல போய் அனிமல்ஸ்ஸ போட்டோ எடுப்ப உன்ன வேலைய விட்டு தூக்கிறமாட்டாங்க.??

ஹேய் என்ன காலைலயே ஏதோ உளரிட்டு இருக்க??நா எந்த வேலைக்கு போறேன் என்ன வெளிய அனுப்புறதுக்கு..

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.