(Reading time: 14 - 28 minutes)

வீட்டிற்கு வந்து ஹாலில் அப்படியே அமர்ந்து கண் மூடி கொண்டான் கார்த்திக்..என்னண்ணா ரொம்ப வொர்க்கா என்று ஷரவந்தி பாவமாய் கேட்க..

ஹே அதெல்லாம் ஒண்ணுமில்லம்மா..வேலைலா இல்ல சேகர் சார் பொண்ணு சென்னைக்கு புதுசு அவங்களுக்கு சில புக்ஸ் வாங்கனும்னு கூப்டாங்க அதான் போய்ட்டு வந்தேன்..

யாரு நம்ம K.C யா??புக்ஸ் படிப்பாங்கலா??

அது என்னடா KC??

நீதானண்ணா சொன்ன குட்டிசாத்தான்..அதோட ஷாட் ஃபாம்தான்..

இத மட்டும் அவங்க கேட்டாங்க நிஜமா குட்டி சாத்தானா மாறி உன்ன ஒரு வழி ஆக்கிடுவா என்று சிரிக்க அதற்குள் மற்றவர்களும் அந்த உரையாடலில் வந்து கலந்து கொண்டனர்..சிறிது நேரம் பேசிவிட்டு அறைக்கு வந்தவன் அந்த புத்தகத்தை டேபிளில் வைத்துவிட்டு நகர நினைக்க ஏனோ மறுபடியும் அதை கையில் எடுத்தான்..அவளிட்ட கையெழுத்தை பார்க்க அவள் முகமே மனதில் வந்தது அவன் புத்தகம் வேண்டாம் என்றதும் வாடிய அவள் முகம்..

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

மதுவின் "மார்பில் ஊறும் உயிரே..." - காதல் கலந்த குடும்ப தொடர்...

படிக்க தவறாதீர்கள்..

இனிதே நாட்கள் நகர அவர்கள் நட்பும் அழகாய் மலர்ந்து கொண்டிருந்தது..அதன்பின் அவர்களிருவரும் வெளியே செல்லவில்லை எனினும்,கார்த்திக் அவள் வீட்டிற்கு செல்லும் நேரங்களில் பேசிக் கொள்வர்..அவனின் மொபைல் நம்பர் சஹானாவிடமிருப்பதால் எதாவது பார்வேட் மெசெஜ்..காலைமாலை வணக்கங்கள் என அனுப்புவாள்..அவனோ பத்து மெசெஜ்ஜிற்கு ஒரு பதில் அனுப்புவான்..இவ்வாறாக இருந்த நேரத்தில் ஒரு நாள் வழக்கம் போல் கார்த்திக் ஆடிட்டிங் விஷயமாக சேகர் வீட்டிற்கு வந்தான்..இப்போதெல்லாம் இங்கு வரும்போதே அவனறியாமல் ஒரு பீதியோடு தான் நுழைவான் இன்னைக்கு என்ன பண்ணுவாளோ என்ற பயம்தான்..அதே போல அன்றும் நுழைய வரும் போதே தலை தெறிக்க ஓடிவந்தவள் அவன் மேல் முட்டி நின்றாள்..எதிர்பாராமல் நடந்ததில் தன் தலையை பிடித்து நின்றுவிட்டான்..அவனுக்கு பின்புறம் நின்று கொண்டவள்,கார்த்திக் கார்த்திக் ப்ளீஸ் காப்பாத்துங்க..

என்னது உங்கள காப்பத்தனுமா??எப்பவுமே உங்ககிட்ட இருந்து தான யாரையாவது காப்பாத்த வேண்டியிருக்கும்..

அய்யோ மொக்க போடாதீங்க..அந்த தடிமாடு கிட்ட இருந்து என்ன காப்பாத்துங்க பர்ஸ்ட்..என்று முடிப்பதற்குள் சிவா அங்கு வந்து சேர்ந்தான்..தேங் காட் கார்த்திக் அந்த குட்டிசாத்தான கொஞ்சம் புடிச்சுக்கோங்கோளேன் ப்ளீஸ் ப்ளீஸ்..சித்தி வாங்க அந்த எருமமாடு சிக்கிருச்சு..

ஏய் மாடு கீடுநு சொன்ன கொன்னுருவேன் உன்ன..

ஆமா ஆமா உன்ன மாடுநு சொல்லி அத இன்சல்ட் பண்ண கூடாதுல..மறந்துட்டேன்..

ஜோக்கா..முடில நாளைக்கு சிரிக்குறேன் என கார்த்திக்கை பிடீத்து கொண்டே வம்பிழுக்க..சித்தி சீக்கிரம்..கார்த்திக் விட்டுறாதீங்க..துளசியை அழைக்கிறான் என்றால் இவதான் ஏதோ பண்ணி வச்சுட்டு வந்துருக்கா..அப்போ கோழிய அமுக்கிற வேண்டியதுதான் என்று சற்று விலகி அவள் கையை இறுக பற்றி கொண்டான்..

ஐயோ கார்த்திக் என்ன பண்றீங்க ப்ளீஸ் விட்டுருங்க இனி உங்ககிட்ட எந்த வம்பும் பண்ணமாட்டேன்..அதற்குள் கையில் டம்ளரோடு துளசி வந்து சேர்ந்தார்..ஏண்டி கொஞ்சமாவது பெரிய பொண்ணு மாறி நடந்துக்கிறியா நீ..சின்ன பாப்பாநு நினைப்பு..ஒரு கசாயத்தை குடிக்க இவ்ளோ ஆர்பாட்டமா பண்ணுவ இந்தா குடி,கார்த்திக்கை முறைத்தவாறே அதனை கையில் வாங்கினாள்..அங்க என்ன லுக்கு குடி போ என்றான் சிவா..

என்னது கஷாயமா??-கார்த்திக்..

ஹா ஹா ஆமா மேடம்க்கு ரெண்டு நாளா பீவராம்..அதுக்குதான் கஷாயம்..ரெண்டு நாளும் சித்தி போராடிருக்காங்க ஒண்ணும் நடக்கல இன்னைக்கு நா வந்தவுடனே என்ட்ட சொன்னாங்க..கரெக்ட்டா நீங்களும் வந்துட்டீங்க..என்று சிரிக்க ஐயோ என்று மனதில் தன்னை தானே நொந்து கொண்டான்..ஏதேதோ இருக்கும்நு நினைச்சா கடைசில ஒரு கஷாயத்துக்கா இவ்ளோ அலப்பர..

ஹேய் கார்த்திக் இப்போலயிருந்து நா உங்க எனிமி போங்க இப்படி மாட்டிவிட்டுடீங்கள்ள..என கத்த தொடங்க..அய்யய்ய எப்போ பாத்தாலும் மீன் மார்கெட் மாறி கத்திட்டேயிருக்காதீங்க..இப்படியே போச்சுனா கூடிய சீக்கிரம் எனக்கு புது ஆடிட்டர்ர தான் பாக்கனும்..கார்த்திக் சொல்லாம கொள்ளாம ஓடிருவான்..டேய் சிவா நீயெல்லாம் வக்கில்நு சொல்லிக்காத சின்னபுள்ளதனமா அவளோட மல்லுக்கு நிக்குற என்றபடி வந்து அன்றைய கலகத்திற்கு முற்று புள்ளி வைத்தார் சேகர்..

மறுநாள் ஞாயிற்றுகிழமை ஆதலால் கார்த்திக் குடும்பத்தோடு வெளியே செல்லலாம் என்று முடிவு செய்தான்..அதைபற்றிய யோசனையில் இருந்தவனை அழைத்தாள் சஹானா..1000 வாலா காலிங் என்று திரையீயில் ஒளிர்ந்ததை பார்த்து இன்னைக்கு எங்க கூப்டுறாலோ தெரிலயே..சமாளிப்போம்..

ஹலோ சொல்லுங்க

கார்த்திக் இன்னைக்கு நீங்க ப்ரீயா??நிஜமாவே அவிஷியலா பேசதான் கூப்ட்டேன்..

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.