லூசு நா ப்யூசர பத்தி பேசுறேன்டா..
ஓரே நொடி விஷயம் புரிந்தவனுக்கு கால் தரையில்லில்லை..நிஜமாவா ஷரவ்..
ஆமா டா நிஜமாதான் நீ அப்ளை பண்ண ஸ்டுடியோல இருந்து ஆபர் வந்துருக்கு பர்ஸ்ட் ட்ரெய்ணிங் அப்பறம் புல் டைம் ஜாப் எப்பூடி..என இருவரும் குதித்து கொண்டிருக்க..கீதாவும் மோகனும் அவர்களின் உற்சாகத்தில் கலந்து கொள்ள..அடுத்து வந்த கார்த்திக்கை கட்டிக் கொண்டான் ஷரவன்..
தேங்க்ஸ்ண்ணா..உன்னாலதான் இதெல்லாம் நடந்துருக்கு..ரொம்ப சந்தோஷமாயிருக்கேன்..
டேய் இது உன் திறமைக்கு கிடைச்ச பபரிசுடா..இதுல நா ஒண்ணும் பண்ணல ஹேப்பியா வேலை பாரு..ஹரவந்தி மா உனக்கு ஒரு சர்ப்ரைஸ் இந்தா..
தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -
உஷாவின் "புதிர் போடும் நெஞ்சம்..." - காதல் கலந்த குடும்ப தொடர்....
படிக்க தவறாதீர்கள்..
அவன் கொடுத்த கவரை பிரித்தவளை ஆர்வமாய் அவன் பார்க்க படித்தவளோ அருகிலிருந்த சோபா மேல் ஏறி ஆட ஆரம்பித்துவிட்டாள்..
ஏய் என்னடி இது வயசுக்கேத்தமாறியா இருக்க இறங்கு கீழ..-கீதா..
அதற்குள் அவள் கையிலிருந்ததை வாங்கி பார்த்த ஷரவனோ..அம்மா இப்போ நீ என்ன சொன்னாலும் அவ காதுல விழாது..மேடம் இன்டர்வியூ போன ஸ்கூல்ல இருந்து அப்பாய்ண்மெண்ட் லெட்டர் வந்துருக்கு மேடம்ம இனி டீச்சர்நு தான் எல்லாரும் கூப்பிடனும்..மோகனுக்கு அதை கேட்டதுமே முகமெங்கும் பூரிப்பு ..கீதாவோ உடனே சமையலறைக்கு சென்று உப்பு மிளகாயோடு வந்தார்..அனைவரையும் உக்கார வைத்து சுத்தி போட்டு இன்னைக்கு போலவே என் புள்ளைங்க என்னைக்கும் சந்தோஷமாயிருக்கனும் கடவுளே என மனமார வேண்டினார்..
தம்பி தங்கை வேலைக்கு சேர்ந்து ஒரு வாரமாகியிருக்க..வார விடுமுறையில் அனைவரையும் அழைத்து கார்த்திக் பேசினான்..அப்பாக்கு 60வது பிறந்தநாள் வரபோகுதேம்மா என்ன ப்ளான்ல இருக்கீங்க??
என்னடா ப்ளான்..எப்பவும் போலதான்..வடை பாயசத்தோட சாப்பாடு பண்றேன் உங்களுக்கு லீவுன்னா கோவிலுக்கு போய்ட்டு வருவோம்..வேறென்ன??
என்னம்மா இப்படி சொல்லிட்ட சஷ்டியப்த்தபூர்த்தி பண்ண வேண்டாமா??
அதெல்லாம் ஒண்ணும் வேண்டாம் ராம்..குழந்தைகளுக்கு கல்யாணம் பண்ணி பேரன் பேத்தி எடுத்து கடமை முடிச்சாதான் பண்ணணும் எங்களுக்கு இன்னும் எவ்ளோ பொறுப்பு இருக்கு..
அப்பா அப்படியெல்லாம் ஒரு கண்டீஷனுமில்ல..இதோ மூணு பிள்ளைங்களும் நல்ல நிலைமைக்கு வந்துருக்கோமே அது போதாதா..அண்ணா சொல்றபடி பண்ணிரலாம்..-ஷரவன்..
டேய் சொன்னா கேளு,
அப்பா இந்த விஷயத்துல நாங்க சொல்றத தான் நீங்க கேக்கனும்..அண்ணா நீ ஏற்பாடு பண்ணு கல்யாண பொண்ணு மாப்ளைய நா ரெடி பண்றேன்..-ஷரவந்தி..
தன் தாய் தந்தையை பார்த்தவன் அவர்களின் நிலையறிந்து சரி க்ராண்ட்டா இல்லாம நம்ம க்ளோஸ் சர்க்கிள் மட்டும் கூப்ட்டு பண்ணுவோம்..இந்த மொமெண்ட்லா திரும்ப கிடைக்காதுப்பா சோ நோ சொல்லாதீங்க..-கார்த்திக்..
அவர்களும் அரைமனதாய் சம்மதம் தெரிவிக்க அதற்கான வேலைகளில் மும்மரமாய் இறங்கினர் மூன்று சிங்க குட்டிகள்..
வணக்கம் மக்களே,.பர்ஸ்ட் எபிக்கு உங்களோட கமெண்ட்ஸ் பாத்து ரொம்ப சந்தோஷமா இருந்தது..இந்த எபியும் உங்களோட எதிர்பார்ப்பை பூர்த்தி செஞ்சுருக்கும்நு நம்புறேன்..கண்டிப்பா கருத்துக்களை பகிர்ந்துக்கோங்க..
தொடரும்
{kunena_discuss:1097}
The above article / story / poem is a copyright material and is published with the consent of the author. If you find any unauthorized content do let us know at
Chillzee is an entertainment website and all the content published here are for entertainment purpose only. Most of the content are fictional work and should be treated accordingly. Information on this website may contain errors or inaccuracies; we do not make warranty as to the correctness or reliability of the site's content. The views and comments expressed here are solely those of the author(s) in his/her (their) private capacity and do not in any way represent the views of the website and its management. We appreciate your high quality of listening to every point of view. Thank you.