(Reading time: 26 - 52 minutes)

கிந்தனுக்கு என்ன முயன்றும் தூக்கத்தை வரவழைக்க முடியவில்லை கவிழையாவிடம் மதியம் தான் நடந்துகொண்டவிதத்தினால் அவள் தன்னைப்பார்த்து பயந்து பின்னால் நகர்ந்ததும், காரில் தன் சட்டையைப்பிடித்து கதறியதும் ,மருத்துவமனையில் மயங்கிச்சரிந்ததும் திரும்பத்திரும்ப நினைவில் வந்து அவனை படுத்தியது,

ஒரு பெண்ணிற்காக் தான் இந்த அளவு தவிப்பதை நினைத்து அவனுக்கே ஆச்சரியமாக இருந்தது . ஆனால் ஒன்றை மட்டும் அவன் உறுதியாக நம்பினான் தன்னால் கவிழையாவை மறக்கவும், யாருக்காகவும் விட்டுக்கொடுக்கவும் முடியாது என்பதையும் அவன் புரிந்துகொண்டான்.

எவ்வளவு சீக்கிரம் அவளை தன் பக்கத்தில் நிரந்தரமாக வைத்துக்கொள்ள முடியுமோ அதற்கான வேலைகளை உடனே செயல் படுத்த முடிவுசெய்தான்.

இனி அவளை தனியாக விட்டுவைப்பதால் தன் குடும்பத்தைச் சேர்ந்தவர்களால் ழையாவிற்கு ஆபத்து ஏற்படுத்த வசதியாகபோயவிடும் என அஞ்சினான்.

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

சிவாஜிதாசனின் "அமேலியா" - காதல் கலந்த குடும்ப தொடர்....

படிக்க தவறாதீர்கள்..

ஸ்வர்யாவை அவள் அம்மா வசவால் குளுப்பாட்டிக்கொண்டு இருந்தார்கள் உன் பேச்சை கேட்டு நான் சம்மந்தி வீட்டிற்க்குச் சென்று உங்கள் பையனின் லட்சனத்தைப்பாருங்கள் என்று சுபத்ராவின் முன் மாப்பிளையை மட்டம் தட்ட பார்த்தேன்.

அன்று நிச்சயத்தின் போது சுபத்ரா கோவைசரளாவின் பாணியில் என் மஹிந்தனுக்கு இரண்டு மில்லைக் கொடுத்து பெண்கொடுப்பதாக கூறினார்கள், கப்பல்கொடுத்துப் பெண்கொடுப்பதாக கூறினார்கள், பெரியகம்பெனி கொடுத்து பெண்கொடுப்பதாக் கூறினார்கள் ஆனால் என் நேரம் இங்கதான் பெண் எடுக்கும் படி ஆகிவிட்டது என்று அலட்டிக்கொண்டாள்.

அந்த நேரத்தில் நான் ஏதாவது சொன்னாள் நிச்சயதார்த்தம் நின்று விடுமோ என பயந்து பேசவில்லை. ஏனெனில் இது போன்ற பரம்பரை கோடீஸ்வரரர்களின் சம்மந்தம் நமக்கு கிடைப்பதைப் பார்த்து பொறாமை பட்டவர்களுக்கு முன் உன் கல்யாணம் நல்லபடி முடியம் வரை அடக்கி வாசிக்க முடிவெடுத்தேன் என்றாள்.

அதனால் நீ இந்த போட்டோக்களை காட்டியதும் அங்குபோய் போட்டோக்களை காண்பித்து பார் உன் மகனின் லட்சனத்தை என்று மட்டம் தட்டிவிட்டு உன் மகனைத் திருந்தியிருக்கச்சொல். இந்த ஒருதடவை அவன் செய்த தப்பை மன்னித்து திருமணத்திற்கு சம்மதிகிறோம் என்று கூறி. அவர்களை மட்டம் தட்டலாம் என்றுதான் அங்கே போனேன்.

ஆனால், உன் கிரகம் வலிய போய் உன்னால் திரும்பவும் அவமானப்ப்படும்படி ஆகிவிட்டது .

ஏன்டீ இப்படி அந்த செம்பட்டை முடி அஜய்யுடன் "சுற்றாதே என்று சொன்னால்” கேட்க மாட்டாயா? என்று ஐஸ்வர்யாவின் மேல் கோபம் கொண்டாள் அவள் அம்மா .

அம்மா அவன் எவ்வளவு செலவு செய்து அவன் முடிக்கு கலரிங் பண்ணியிருக்கிறான் நீ அதைப்போய் செம்பட்டமுடி என்று பேசுகிறாயே என்று கூறினாள் .

அவள் கூறியதை கேட்ட அவள் அம்மா, ஏண்டி நான் இம்புட்டு நேரம் உன் கல்யாணத்தைப்பற்றி கவலை பட்டு பேசியபோது சும்மா இருந்துட்டு அந்த அஜய்யை நான் குறைபேசியதற்கு மட்டும் பதில் பேசுகிறாய் என்றாள்.

அடியே ஐஸ்வர்யா அதென்னடி அவனுடன் போட்டாவில் கட்டிபிடிப்பது முத்தம் கொடுப்பது என்று புருஷன் பொண்டாட்டி போல நிற்கிறாய் .வேறெதுவும் அத்துமீறி அவனுடன் கூத்தடிச்சு கல்யாணத்துக்முன் வயித்தில் வாங்காம்ல் இருந்தால் சரி என்றாள் .

அம்மா அவ்வாறு சொல்லவும் ஒரு முறை மனதுக்குள் திடுக்கென்றது ஐஸ்வர்யாவிற்கு எதற்கும் டாக்டரிடம் போய் ஒரு தடவை டெஸ்ட் பன்னிடனும் என்று மனதிற்குள் நினைத்துக் கொண்டாள் ஐஸ்வர்யா.

ஆனால் வெளியே அப்படியெல்லாம் வந்து உன்னிடம் நிற்க மாட்டேன் நீ கொஞ்சம் சத்தம் போடாமல் என்னை நிம்மதியாக டி.வி பார்க்கவிடு என்று கூறியபடி தன் கால் நகத்திற்கு வண்ணம் பூசிக்கொண்டு இருந்தால் ஐஸ்வர்யா .

அதற்கு அவள் அம்மா, ஆமா நீ பாட்டுக்கு உட்கார்ந்து கொண்டு இரு அந்த கவிழையா பாட்டுக்கு அந்த மஹிந்தனை தட்டிட்டு போய்விடப்போகிறாள் .யாரு டீ அவ தொடச்சு வச்ச குத்துவிளக்காட்டம் எவ்வளவு அழகாக இருக்கிறாள் என்று கேட்டாள்.

அவளை தன் முன்னால், அழகு என்று தன் அம்மா சொல்லவும் கோபத்தில் ஐஸ்வர்யா தான் காலை தூக்கி வைத்து கொண்டு நெயில்பாலிஸ் போட்டுக்கொண்டிருந்த காலால் கால் வைத்திருந்த டீபாயினை உதைத்து தள்ளிவிட்டாள்

பின் சத்தமாக அம்மா அந்த மிட்டில் கிளாஸ் பொண்ணை என்முன்னால் எப்படி அழகாக இருக்கிறாள் என்று சொல்லலாம்?, எனக்கு எதிரில் நிற்கவே தகுதியில்லாத அவள், எனக்கு போட்டியாக என் வாழ்க்கையில் நுழைய பார்பதற்கு எப்படியெல்லாம் அனுபவிக்கப்போகிறாள் பாருங்கள் என்றாள்.

தொடரும்

Episode # 06

Episode # 08

{kunena_discuss:1081}

The above article / story / poem is a copyright material and is published with the consent of the author. If you find any unauthorized content do let us know at This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it.. All the copyright content at chillzee.in are protected by national and international laws & regulations. We are against plagiarism! If you find our site's content copied in any other website or being broadcasted in audio / video format, we request you to let us know at This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it..
Chillzee is an entertainment website and all the content published here are for entertainment purpose only. Most of the content are fictional work and should be treated accordingly. Information on this website may contain errors or inaccuracies; we do not make warranty as to the correctness or reliability of the site's content. The views and comments expressed here are solely those of the author(s) in his/her (their) private capacity and do not in any way represent the views of the website and its management. We appreciate your high quality of listening to every point of view. Thank you.

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.