(Reading time: 11 - 22 minutes)

ஷ்யாமளா,” இந்த வயசிலும் உங்க ரொமான்ஸ்  அட்டகாசம் அம்மா..... உங்க ரெண்டு பேர்க்கும் சுத்தி போடணும்”. என் கண்ணே பட்டிடும் போல் இருக்கு”........ என கூறி கொண்டே தனது செல்லில் ஒரு செல்பி எடுத்தாள்............

இதை போல் தனக்கு வரும் கணவனும் இவ்வளவு அன்பாக நடந்து கொள்வானா? என நினைக்கும் பொழுதே சட்டென அவன் முகம் மன கண் முன்  தோன்றி மறைந்தது.......... எவ்வளவோ மறக்க நினைத்தாலும், மறக்க மறுக்கும் அவனது கருணையான கண்களும் , கம்பீரமான  உருவமும் ........

இந்த மூன்று வருடத்தில் , அவன் என்னை மறந்தே போய் இருப்பான். நான் தான் இப்படி, வர போகிற கணவன் என்ற சொல்லுக்கே சொந்தக்காரன் அவன் தான் என்பது போல் அவனை நினைக்கிறேன்............  சே ..... இனி அவனை நினைக்க கூடாது என தீர்மானித்து , ஊருக்கு கிளம்ப, தனது சாமான்களை எடுத்து பெட்டியில் அடுக்க ஆரம்பித்தாள்.

கிளம்பும் தினத்தில், அப்பா, அம்மா, என வீட்டிலுள்ள அனைவரிடமும் ஏர்போர்டில் வைத்து விடை பெறும் பொழுது ,

பீஷ்மர் , “ பூர்வி, அங்கு சேர்ந்தவுடன் வாட்ஸ் அப்பில் பேசு, நீ ஆசை பட்டியேனு தான் உன்னை வேலைக்கு அனுப்பறேன், இந்த ஒரு வருடம் முடிந்ததும், நான் ஆசை படர உன் கல்யாணத்திற்கு நீ சம்மதிக்கணும்.......

பூர்வி, “ அப்பா, ஒரு வருஷம் நிம்மதியா இருக்கேனே, அதுக்கு அப்புறம் இந்த பேச்சு பேசலாம்.........

சரோஜினி, “ ஜாக்கிரதையாக இரு பூர்வி,....... உனக்கு பிடிக்கலைன்னு எப்போ நினைத்தாலும் உடனே கிளம்பி வந்துடு”..........

பூர்வி, “ கவலை படாதிங்கமா, நான் பத்திரமாக இருப்பேன்”.......என கண் கலங்க கூறினாள்...........

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

மீராவின் "புத்தம் புது காலை..." - காதல் கலந்த குடும்ப தொடர்....

படிக்க தவறாதீர்கள்..

ரு வழியாக அனைவருக்கும் கை அசைத்து விடை பெற்று , தனது தோழிகளுடன் சேர்ந்து விமானம் ஏறினாள்.

தோழிகளுள், ஒருத்தியான ஸ்ருதி , அம்மா, அப்பா, அண்ணன், அண்ணி , அவர்களின் குட்டி பையன் ஆதர்ஷ் என , “நல்லதொரு குடும்பம் , பல்கலை கழகம் என வாழ்பவள்.

இதில் அண்ணியின் தம்பி புருஷோதமனோடு காதல்........

அண்ணி மூலமாக அண்ணாவிற்கும், அண்ணா மூலமாக அம்மாவிற்கும், பின் இப்படியே அப்பாவிற்கும் தெரிந்து, இவர்கள் அனைவரின் மூலமாக புருஷ் வீட்டிற்கும் தெரிந்து நல்லபடியாக அனைவரும் ஒத்துக் கொண்டனர்.

புருஷும் , இரண்டு வருட ஒப்பந்தத்தில் துபாய்க்கு வேலைக்கு சென்றிருக்கிறான்.  அதில் இன்னும் ஒரு வருடம் மீதி  இருப்பதால் , அது முடிந்த பின் திருமணம் என நிச்சியக்கபட்டு  பாதி புருஷனாக ஸ்கைப்பில் தினமும் வீடியோ சாட்டில் ஸ்ருதியுடன்   காலம் கழித்து கொண்டிருக்கிறான்..............

ஹெலனா, ஆங்கிலோ இந்திய குடும்பத்தில் பெற்றோர் காப்ரியல் , செலினா தம்பதியருக்கு  ஒற்றை மகளாய், சுதந்திர காற்றை அதிகம் சுவாசித்து, வளர்ந்தவள். படிப்பில் படு சுட்டியாக இருந்த பொழுதும், நீச்சலில் அதிக கவனம் செலுத்தி ஸ்குபா டைவிங்கில் டிப்ளமோ வாங்கி, அதற்க்கு தகுந்த இடம், இது தான் என Maldives ஐ தேர்ந்த்தெடுத்து இங்கு  வேலைக்கு சேர்ந்து இருக்கிறாள்.

மற்ற இருவருக்கும், நீச்சல், கல்யாணத்திற்கு காத்திருத்தல் என வேலையில் சேர காரணம் இருந்த பொழுது.............

பூர்விக்கு  மட்டும், கல்யாணத்திலிருந்து தப்பிக்கவே இந்த இடத்தை, இந்தியாவிலிருந்து அதிக தூரத்தில் இல்லாமலும் ,  ஆனால் பாஸ் போர்ட்டு இருந்தால் மட்டுமே,  வரமுடியும் என நிலையில் உள்ள Maldivesஐ தேர்ந்த்தெடுக்க காரணமாக இருந்தது..........

மூவரும் தமது கல்லூரி கால நினைவுகளை பேசி சிரித்தவாறு Hulule Airport வந்து இறங்கினர். விமான நிலைய சடங்குகள் முடிந்து வெளியே வந்த பொழுது, அங்கு தனி தனியே எல்லா ரேசர்ட் டெஸ்க்குகள் இருந்தன........

அதில் Paradaise Resort டெஸ்க்கை கண்டுபிடித்து அங்கு சென்று அங்கிருந்த டூர் கைடிடம் தாங்கள் வேலைக்கு வந்த காரணத்தை கூறினர். அவரும் அங்கிருந்து அவர்களை ஸ்பீட் போட்டில்  ரேசாடிர்க்கு அழைத்து சென்றார்.

15 நிமிடத்தில் ரெசாட்டை வந்தடைந்தோம். அது ஒரு அழகிய தீவு , எங்கு திரும்பினாலும் பசுமை. தென்னை மரங்கள் அதிகம் காணப்பட்டது. வருகிற யாத்ரிகர்களுக்கு அதிலிருந்தே இளநீர் வெட்டி கொடுக்கின்றனர்.

ஜெட்டியில் இறங்கியவுடன் எங்கள் மூவறது பெட்டிகளை மட்டும் ஏற்றி கொண்டு பாட்டரி கார்கள் சென்றன. நாங்கள் நடந்தே எங்கள் மூவருக்கும் ஒதுக்க பட்டிருந்த அறைகளுக்கு சென்றோம்.

முதலில் ஜி ஏம் (G M ) நாஷிதை, சந்தித்தோம். அவரும் அங்குள்ள தினசரி வேலைகளை பற்றி கூறிவிட்டு, ஒரு வருட ஒப்பந்தத்தில் கையெழுத்திட கூறினார்...........

இதுவும் ஒரு வகையில் தனக்கு நன்மையாக  இருப்பதாகவே பூர்வி நினைத்தாள். நடுவில் அம்மாவும் ஏதும் வரன் வந்தது, ஜாதகம் மிக பொருத்தம் என எது கூறினாலும், இந்த ஒப்பந்தத்தை பற்றி கூறியே தட்டி கழிக்கலாம், என தனக்கு சாதகமாகவே நினைத்தாள்..............

இதுவே தனக்கு ஒரு நாள் பாதகமாக போவது தெரியாமல் !!!!!!!!!!.........

அவரிடம் விடை பெற்று , அவரவர் துறை சார்ந்த அலுவலகத்துக்கு சென்றோர்கள்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.