(Reading time: 11 - 22 minutes)

பூர்வி, Resident Manager ஆக சேர்ந்ததால் அவளுக்கு  GMன் காபினுக்கு  அடுத்த காபினாக இருந்தது.........

அவளது வேலை அங்கு தங்க வரும் விருந்தினருக்கு, அவர்களது வசதிகளை பற்றி கேட்டரிவதும், அவர்களுக்கான சேவைகள், அவர்களை சென்றடைகிறதா என மேற்பார்வை இடுவதும்,  தினசரி அறைகளுக்கு அனுப்பபடும் பொருட்கள் சரியாக சென்றதா, இங்கு தங்குவதில் அவர்களது அனுபவம் பற்றி தெரிந்து கொள்வதுமாக இருந்தது.........

அதிக ஐரோப்பிய மொழிகளை கற்று வைத்திருந்ததாலும், தனது பேச்சு சாமர்த்தியத்தாலும், பயணியரின், நிறை , குறைகளை அறிந்து அவர்களுக்கு உதவ எளிதாக இருந்தது...........

ஹெலனா, Diving Centre கடல் ஓரமாக இருந்ததால் அங்கு சென்றாள். அங்கு வெளியே பெரிய தண்ணிர் தொட்டி , உள்ளே டைவிங் செல்வதற்கு ஏற்ற ரப்பர் உடைகள் எல்லா அளவுகளிலும் வரிசையாக தொங்க விட பட்டிருந்தது. ஆக்சிசன் சிலிண்டர்களும் அழகாக அடுக்கி வைக்க பட்டிருந்தது.

“ஹாய் ஐ அம் Hadwin “ என அங்கிருந்த, டைவிங் கோச் வந்து, கை குலுக்கினான்........

.” ஐ அம் Helana “ என அவளும் கை குலுக்கினாள். 

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

தீபாஸ்ன் "பெண்ணே என் மேல் பிழை" - காதல் கலந்த குடும்ப தொடர்....

படிக்க தவறாதீர்கள்..

அவனுக்கு கீழ் ஹெலெனா வேலை செய்ய வேண்டும்......... பார்பதற்கு நல்ல தேகபயிற்சி செய்த உடம்பாக இருந்தான்........... எளிதாக பழகவும் செய்தான்............ அங்கு வேலை செய்ய போவது சற்று எளிதாகவே இருக்கும் என ஹெலனா நினைத்தாள்.............

ஸ்ருதி, Food and Beverages ல் மேற்பார்வையாளராக சேர்ந்து  இருந்ததால் அவள் உணவு விடுதிக்கு சென்றாள்.   அவளது வேலை, அங்குள்ள ரெஸ்டாரண்ட்டில்  மூன்று வேலையும் உணவு அனைவருக்கும்  பஃவே முறையில் பரிமாறபடுவதால் அவற்றை கவனிக்கும் படியாக இருந்தது............

தீவின் நடுவில் அலுவலக அறைகளும், உணவு விடுதியும் , ஊழியர்களின் தாங்கும் விடுதிகளும், நீச்சல் குளம், ஜிம் , டென்னிஸ் கோர்ட், ஷட்டில் கோர்ட் என அணைத்து வசதிகளும் இருந்தது.

தீவின் ஓரம் ழுவதும், கடலை நோக்கி தனித் தனி விருந்தினர்  அறைகள் அமைந்திருந்தன. இவற்றை தவிர கடலுக்குள்ளும் மேடை அமைத்து தனித் தனி அறைகள் இருந்தன.........

இந்திய ரூபாயில் 45,000 ஒரு நாளைக்கு ஒரு அறைக்கு, இருவர் தங்க  வசூலிக்கின்றார்கள் . இந்தியாவில் இருந்து பெரும் பணக்காரர்களும், ப்ரைவசி அதிகம் இருப்பதால் சினிமா நடிகர்கள் மட்டுமே வந்து செல்கின்றனர். மற்றபடி அனைவரும் ஐரோப்பியர்களாகவே உள்ளனர்..........

மூவரும் வேலையை பற்றி அறிந்து திருப்தியாகவே அறைக்கு திரும்பினர்...........

ஸ்ருதி, “நம்ம மூனு பெரும் , சுவிஸ் போயிருந்தபோ, ஒரே ரூம் , அதனால் ஜாலியா இருந்தது............

பூர்வி, “ அது அப்போ,............இப்போ உனக்கு தனி ரூம் தான் பிடிக்கும், அப்ப தானே உன்னோட புருஷ் கூட தனியா ஸ்கைப்பில் நல்லா மொக்க போடலாம்”.......... 

“அதோட நாங்களும் உன்னோட மொக்கையிலிருந்து தப்பிச்சிட்டோம்........  சோ தாங்க்ஸ் டு GM”..............

பூர்வி கூறியதற்கு , பூர்வயும் , ஹெலனாவும், ஹை பை கொடுத்து கொண்டனர்.........

இவ்வாறாக ஒரு வாரம் இனிதே கழிந்தது.........மூவரும் அவரவர் பணியில் நன்றாக பொருந்தியும் போயினர்...........

ரு அழகிய மாலை நேரத்தில், சூரியன் கடலுக்குள் மறையும் அழகை ரசித்தபடி பூர்வி பீச்சில் நின்றிருந்தாள். பெரிய ஆரஞ்சு பழமே கடலுக்குள் மூழ்கி அங்குள்ள நீரை எல்லாம் பழரசமாக மாற்றியது போல், கடல் நீரும் ஆரஞ்சு நிறத்தில் மாறியிருந்த அழகை ரசித்து கொண்டிருந்தாள்.  

அன்று ஜெனிவாவிலிருந்து  விமானத்தில் வருபவர்களின் பெயர் பட்டியலுடன் அவர்களை வரவேற்க, போட் வந்து நிற்கும் இடமான  ஜெட்டிக்கு வந்த போது, சரியாக உல்லாச படகும்  வந்து சேர்ந்தது........

வந்து இறங்கியவர்களை சரியாக ஒன்பது பேர் என கணக்கிட்டு அவர்களை வரவேற்று, வரவேற்ப்பு பானத்தை பணியாளர் சரியாக கொடுக்கிறார என மேற்பார்வையிடும் பொழுது............,

பத்தாவதாக இறங்கிய உருவத்தை லேசாக பார்த்த பொழுது............. ஒரு நிமிடம் மூச்சே நின்று போனது பூர்விக்கு .......... இங்கு எப்படி?   வந்தவர் பட்டியலில் அவன் பெயர் இல்லையே ..........  அவ்வளவு எளிதாக யாரும் இங்கு நுழைந்து விட முடியாது...............

குழப்பத்தில் பூர்வியும், அவளுடன் நாமும் !!!!!!!!!!!!!!!

தொடரும்

Episode 02

{kunena_discuss:1103}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.