(Reading time: 12 - 24 minutes)

சந்தின் கார் அரண்மனை போன்ற அந்த வீட்டின் வாசலில் நின்றது. வசந்தும் ஜெசிகாவும் சிறிது நேரம் இமைக்க மறந்தனர்.

எவ்வளவு அழகு! எத்துணை பெரிய நிலப்பரப்பு! சொர்க்கத்தைக் காணாதவர்கள் ஒரு முறை அந்த இடத்திற்கு வந்து பார்த்துக்கொள்ளலாம். பார்க்கப் பார்க்க திகட்டாத அழகு மேலும் மேலும் இழுக்கிறது.

வந்த விஷயம் கூட அவர்களுக்கு மறந்துவிட்டது. அவ்வளவு பெரிய கதவிற்கு இரண்டு மூன்று வாட்ச்மேன்கள் நின்றுகொண்டிருந்தனர். காரைக் கண்டதும் அதில் ஒருவன் காரை நோக்கி வந்தான். வசந்த் தன் காரின் கண்ணாடியை கீழிறக்கினான்.

"எதுக்காக வந்திருக்கீங்கன்னு தெரிஞ்சிக்கலாமா?"

"மிஸ்டர் ஃபிளெம்மிங்கை பாக்கணும்" என்றாள் ஜெசிகா.

வாட்சமேனின் கண்கள் ஜெசிகாவைத் துளாவின. "உங்ககிட்ட அப்பாயிண்ட்மெண்ட் இருக்கா?"

ஜெசிகா அப்பாயிண்ட்மெண்ட் லெட்டரை  நீட்டினாள். அதைப் பெற்றுக்கொண்ட வாட்ச்மேன், அதை சில நொடிகள் பார்த்தான்.

"கொஞ்ச நேரம் வெயிட் பண்ணுங்க" என்று கூறி, கதவைத் திறந்து உள்ளே சென்றவனை வசந்த் பார்த்தபடி இருந்தான்.

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

ஜான்சியின் "அமிழ்தினும் இனியவள் அவள்..." - அவனுக்கு அவள் கிடைப்பதற்கரிய அன்புச்சுரங்கம் அவளுக்கோ அவன்...?

படிக்க தவறாதீர்கள்..

"ரொம்ப பெரிய ஆளா இருப்பாரு போல?"

"இந்த இடத்தை எல்லாம் பார்த்தா நாம நினைச்சதை விட பெரிய ஸ்பான்சர் தான்"

"எனக்கு சந்தேகமா இருக்கு"

"ஏன்?"

"இவர் கிட்ட அப்பாயிண்ட்மெண்ட் கிடைச்சதே பெருசு. இவரு கண்டிப்பா நம்மள விட பெரிய பெரிய டேலண்டான நிறைய பேர பாத்திருப்பாரு, நமக்கு சான்ஸ் கிடைக்குமா?"

"எதையும் முயற்சி பண்ணாமலேயே முடிவு பண்ணிட்டா எப்படி வசந்த்?"

உள்ளே சென்ற வாட்ச்மன் திரும்பி வந்தான்,

"சார் உங்களை பார்க்க விருப்பபடுறாரு நீங்க தாராளமா போகலாம்" என்று கூறி கதவைத் திறக்கும்படி சமிக்ஞை  செய்தான். கதவு திறக்கப்பட்டது.

கார் உள்ளே சென்று மாளிகையின் வாசலில் நின்றது. கதவைத் திறந்து வசந்தும் ஜெஸிகாவும் கீழிறங்கினார்கள். மாளிகையைப் பராமரிப்பவன் அவர்களிடத்தில் வந்தான்.

"சார் வர பத்து நிமிஷம் ஆகும். அதுவரைக்கும் உள்ளே வெயிட் பண்ணுங்க"

"நாங்க இந்த புல்வெளியை சுத்திப் பாக்கலாமா?" ஜெசிகா கேட்டாள்.

"தாராளமா மேடம்" என்று ஒதுங்கினான் மாளிகையைப் பராமரிப்பவன்.

ஜெசிகா புல்வெளியில் நடந்தாள். வசந்தும் பின்தொடர்ந்தான்.

"ரொம்ப அழகா இருக்குல்ல வசந்த். புற்களோட பச்சை வாசனைய அனுபவிச்சு ரொம்ப நாளாச்சு. இந்த இடம் லொகேஷன்க்கு சூப்பரா இருக்கும்"

"எங்கே போனாலும் லொகேஷன் பத்தியே பேசுறியே, உனக்கே போரடிக்கலியா?"

"அதான என் தொழில்".

"அதுக்கு? எல்லா நேரத்துலயுமா வேலை பத்தின நினைப்பு இருக்கும்"

"எதையும் விரும்பி செஞ்சிட்டா அதுவே நமக்கு சந்தோசம் குடுக்கும்"

வசந்த் எதையோ பேச முற்பட்டான். அவனது செல்போன் சிணுங்கலால் அவனது பேச்சு தடைபட்டது.

"ஒரு நிமிஷம் ஜெசிகா" என்று கூறி விட்டு சில அடிகள் முன்னால் சென்று போன் எடுத்து பேசினான்.

ஜெசிகா மீண்டும் அவ்விடத்தின் அழகை ரசிக்கத் தொடங்கினாள்.

"ரொம்ப நேரம் உங்களை வெயிட் பண்ண வச்சிட்டேனா?" என அவள் பின்னால் ஒரு குரல் கேட்டது.

ஜெசிகா திரும்பினாள்.

தடித்த உருவம். உயரம் நிச்சயம் ஆறடி தாண்டி இருக்கும். கையில் கோல்ப் குச்சியோடு நின்றிருந்த அந்த உருவத்திற்கு வயது ஐம்பது இருந்தாலும் பார்ப்பதற்கு அவ்வாறு தோன்றவில்லை. ஜெசிகாவிற்கு முதலில் அடையாளம் தெரியவில்லை. பிறகு தான் அவளுக்குப் புரிந்தது, அவர் தான் ஸ்பான்சர் ஃபிளெம்மிங் என்று.

"மிஸ்டர் ஃபிளெம்மிங்..?"

அவர் முகத்தில் புன்னகை உருவானது.

"சாரி சார், நான் உங்களை நெறைய தடவை பாத்திருக்கேன். ஆனா இந்த மாதிரி உடையில பாத்தது இல்லை"

ஃபிளெம்மிங் சிரித்தார். "எல்லா நேரத்திலேயும் கோட் சூட் போட்டுட்டே இருக்கமுடியுமா என்ன?"

"உங்களை பார்த்தது எனக்கு ரொம்ப சந்தோசம் சார்" என்று அவருடன் கை குலுக்கினாள். "வசந்த் !அங்க என்ன இன்னும் பேசிட்டு இருக்க? சீக்கிரம் வா" என கத்தினாள்.

"அவர் பேசட்டும். ஏன் தொந்தரவு பண்ணுறீங்க?" என்று கூறி புல்வெளியில் சிறிது தூரம் நடந்து அங்கே போடப்பட்டிருந்த  நாற்காலியில் அமர்ந்தார் ஃபிளெம்மிங்.

"உட்காருங்க மிஸ்.....?!"

"ஜெசிகா"

"ஓ..உட்காருங்க ஜெசிகா"

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.