(Reading time: 23 - 46 minutes)

வார்த்தை தவறிவிட்டேன் கண்ணம்மா - 16 - வத்ஸலா

 

Varthai thavari vitten kannamma

பர்ணாவின் வீட்டுக்கு வந்து சேர்ந்திருந்தனர் அபர்ணாவும் பரத்தும். வீட்டில் அவர்களை தவிர யாருமில்லை.

அந்த நிகழ்வு நடந்து பல நிமிடங்கள் கடந்திருக்க அவள் சற்றே இயல்புக்கு திரும்பி இருந்தாள் என்றே சொல்ல வேண்டும். ஆனால் பரத்தின் நிலையிலும், அவன் எடுத்த முடிவிலும், அருண் மீதிருந்த தீராத கோபத்திலும் துளியிலும் துளி  அளவு கூட மாற்றமில்லை.

'நீ போய் ஃபிரெஷ் ஆகிட்டு டிரெஸ் மாத்திட்டு வா அபர்ணா. நானும் கொஞ்சம் ரெடி ஆகிட்டு வரேன்..' அவன் சொல்ல...

அவள் தலை அசைத்து விட்டு உள்ளே செல்ல, அப்போதும் அந்த காட்சியே அவன் கண் முன்னே வந்து வந்து போய்க்கொண்டிருந்தது.

சில நிமிடங்கள் செல்ல அவன் தயாராகி ஹாலுக்கு வந்து சேர்ந்தான். அவள் இன்னும் வந்திருக்கவில்லை.

அலையடிக்கும் மனதை திசை திருப்பிக்கொள்ள ஏதாவது ஒரு புத்தகத்தை தேடி அவன் அந்த மேஜைக்கு அருகில் சென்றிருக்கவும் வேண்டாம்!!! அது கண்ணில் பட்டு தொலைத்திருக்கவும் வேண்டாம்!!!

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

ஜான்சியின் "அமிழ்தினும் இனியவள் அவள்..." - அவனுக்கு அவள் கிடைப்பதற்கரிய அன்புச்சுரங்கம் அவளுக்கோ அவன்...?

படிக்க தவறாதீர்கள்..

பட்டுத்தொலைத்தது அது!!! அன்று அருண் அபர்ணாவுக்காக வாங்கி வந்த மோதிரம்!!! அவன் தூக்கி எறிந்த அந்த மோதிரம்!!! அதை யாரோ எடுத்து மேஜையின் மீது வைத்திருக்கிறார்கள். பத்து நாட்களாக இங்கேயே கிடக்கிறது போலும்..

கையிலெடுத்தான் அதை. நிச்சயதார்த்த நிகழ்வுகள் மனதிற்குள் ஊர்வலம்.. தீகங்காக மாறிப்போனது உள்ளம்.

'போதும்!!! எல்லாம் போதும்!!!' அந்த மோதிரத்தையே பார்த்தபடி அவன் நின்றிருக்க தயாராகி வந்து சேர்ந்தாள் அபர்ணா.

'கிளம்பலாமா...' என்றபடி அவள் அவனை பார்க்க அவனது கையில் இருந்த அந்த மோதிரமும் அவனது கோபமான  முக பாவமும் அவளுக்கு ஏதேதோ விளக்க முனைந்தன.

'நாம கிளம்பலாம் பரத்..' என்றாள் அவனை அந்த மனநிலையிலிருந்து நகர்த்தும் விதமாக..

அந்த நினைவுகளிலிருந்து வெளி வராதவன் போலவே காரம் பரவிய குரலில்.கேட்டான் பரத். 'ஒருவேளை உன் ஜாதகத்திலே புத்திர பாக்கியம் இல்லாமல் இருந்திருந்தா என்ன ஆகி இருக்கும்???..' இன்னமும் அந்த மோதிரத்திலிருந்து விழி அகற்றவில்லை அவன்.. அவன் வார்த்தைகளில் ஒரு நொடி துணுக்குற்றது அவள் இதயம்.

'என்ன? என்ன ஆகி இருக்கும்???' குரலில் கொஞ்சம் நடுக்கம் பரவ கேட்டாள் அபர்ணா.

பதில் மொழி கூறாமல் அந்த மோதிரத்தை சுண்டி தூக்கி போட்டு பிடித்து விளையாட ஆரம்பித்திருந்தான் பரத்.

என்னவாகியிருக்குமாம்??? ஒரு வேளை அருண் என்னை வேண்டாமென்றிருப்பனோ??? அப்படி எல்லாம் சொல்லி விடுவானா என்ன??? கொஞ்சம் தவிப்பும், லேசான கோபமும் பரவியது அவளுக்குள்ளே!!!

'அப்படி எல்லாம் ஒண்ணும் ஆகியிருக்காது...' அவளே தொடர்ந்தாள் 'புத்திர பாக்கியம் இல்லைனா ஒரு வேளை குழந்தை பிறக்காதோன்னு ஒரு பயம் அவங்களுக்கு அவ்வளவுதான்..' குரல் அடித்தளத்தில் ஒலிக்க தரையை பார்த்தபடி சொன்னாள் அவள். அவனிடத்தில் அருண் குடும்பத்தை விட்டுக்கொடுத்து விட முடியவில்லை அவளால்.

'பிறக்கலைன்னா என்ன இப்போ??? தேவையில்லை!!! என்னை பொறுத்தவரை நீ எப்பவும் நல்லா இருக்கணும். சிரிச்சிட்டே இருக்கணும். அதுதான் முக்கியம். உன்னை உனக்காக மட்டுமே நேசிக்கறதுக்கு பேர்தான் காதல். மத்தது எல்லாம் வியாபாரம்.' சுறசுறுவென எகிறி வெளி வந்தன அவன் வார்த்தைகள்.

அவள் திடுக்கென நிமிர இன்னமும் அவன் கையை தாண்டி பறந்து பறந்து அவன் கைக்கே திரும்பிக்கொண்டிருந்தது அந்த மோதிரம்.

காதல் என்று வந்துவிட்டால் பல நேரங்களில் அறிவை பேச விடாமல் அழுத்தி பிடித்துக்கொண்டு பிடிவாதம் பிடிக்கிறது நம் மனம்!!! இதுதான் என் காதல்.!!! இதை விட சொர்க்கம் வேறில்லை என முரட்டு பிடிவாதம் பிடிக்கிறது. இதை தாண்டி வேறே உலகம் இருக்கிறது என்பதை நம்ப மறுக்கிறது அது!!!

அப்படித்தான் நிகழ்ந்துக்கொண்டிருந்தது அபர்ணாவுக்கும். சட்டென மேஜை அருகில் சென்றவள் அங்கே இருந்த அவளது திருமண பத்திரிக்கைகளில் ஒன்றை  எடுத்து, அதில் அவன் பெயர் எழுதிக்கொண்டு அவன் அருகில் வந்தாள். கண்கள் தரையை பார்த்துக்கொண்டிருக்க, அவனை நோக்கி நீட்டினாள் அந்த பத்திரிக்கையை!!!

கொஞ்சம் திடுக்கிட்டுப்போய் அவளை பார்த்தான். பரத் 'என்ன சொல்ல வருகிறாளாம் அவள்??? எனக்கு அருண்தான் கணவன் என்றா??? அவனை பற்றி நீ விமர்சிக்காதே என்றா??? எது நடந்தாலும் என் முடிவில் எந்த மாற்றமும் இல்லை என்றா???

இதுவரை நடந்தது எல்லாம் கூட மன்னிக்கலாம், சற்றுமுன் நிகழந்ததை கூடவா ஜீரணித்துக்கொண்டாள்??? பத்திரிக்கையை வாங்காமல் அவளை யோசனையுடனே பார்த்திருந்தான் அவன்.

மெதுவாக நிமிர்த்தினாள் விழிகளை. அவள் கண்ணீர் கூட அவள் பேச்சை கேட்பதாக இல்லை. அவன் கண்களை அவள் விழிகள் சந்தித்த மாத்திரத்தில் ஓடி வந்து முன்னால் நின்றுக்கொண்டது. அது!!! ஏன் அப்படி வந்தது என அந்த நேரத்தில் புரிந்துக்கொள்ளவே முடியவில்லை அவளால்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.