(Reading time: 23 - 46 minutes)

'மாம் அவ ஒத்துக்க மாட்டாளே.. பிரச்சனை பண்ணுவா..' ஸ்ருதி இறங்கி ஒலித்தது அஸ்வினியின் குரல்.

'அது மட்டுமில்லை இந்த கல்யாணத்தை நிறுத்தறதிலே இன்னொரு பிரச்னையும் இருக்கு'

'என்னது???'

'விஷ்வா கல்யாணம்...' அவள் கண்களை பார்த்து சொன்னான் பரத்..

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

தெய்வாவின் "காதல் கீதம்" - காதல் கலந்த குடும்ப தொடர்....

படிக்க தவறாதீர்கள்..

'வாட்???'

'எஸ்..' என்றான் பரத். விஷ்வாவையும் இந்துஜாவையும் பற்றி விளக்கினான் அவளுக்கு. விக்கித்து போனாள் அஸ்வினி. சில நொடி நிசப்தம் அவளிடம்.

பின்னர் சொன்னாள் அவள். 'அதுவும் நல்லபடியா நடக்கணும்தான். ஆனா அதுக்காக அபர்ணாவை அருணோட அனுப்ப முடியாது பரத்...ஏதாவது செய்யணும் ப்ளீஸ்...'

சில நொடிகள் மௌனமாய் கடக்க யோசித்தபடியே இருந்தவன் சட்டென சொன்னான் 

'செய்வோம்.. அதிலே நீதான் எனக்கு ஹெல்ப் பண்ண வேண்டியிருக்கும்..' 

'சொல்லுங்க செய்யறேன்.

'இந்த கல்யாணத்தை அருண்தான் நிறுத்தணும். அவனேஇதை விட்டு விலகணும். அப்போ விஷ்வா கல்யாணத்திலே பெருசா எந்த பிரச்னையும் வராது. ஸோ...அதுக்கு என்ன செய்யணும்னா  .' என. தனது மனதில் இருக்கும் திட்டத்தை அவளுக்கு சொன்னான் பரத்.

பேசத்தோன்றவில்லை அவளுக்கு. இரண்டு நிமிடங்கள் மௌனத்தின் அரசாட்சியே அங்கு நடக்க, பின்னர் மௌனத்தை உடைத்தாள் பெண்.

'ஒரு பொண்ணா, ஒரு தங்கையா இதை செய்யறது ரொம்ப கஷ்டம் பரத். ஆனா இதுதான் சரியான வழி.. இதை தவிர வேறே எதுவும் செய்ய முடியாதுன்னு தோணுது.. சரி எப்போ செய்யணும் சொல்லுங்க...'

இப்போ வேண்டாம் கல்யாணம் நெருங்கட்டும்..' என்றான் பரத்.

நாட்கள் நகர்ந்துக்கொண்டிருக்க வந்த எல்லா இரவுகளுமே தூக்கமில்லா இரவுகளாகவே கழிந்தன பரத்துக்கு.

நான்கு நாட்கள் கடந்திருக்க திருமணதிற்கு இன்னும் நான்கு நாட்கள் இருந்த நிலையில்

அபர்ணா வீட்டில் திருமண வேலைகள் பரபரப்பாக நடந்துக்கொண்டிருந்தன..

அன்று மதியம் மருத்துவமனையில் தனது அறையில் இருந்தான் விஷ்வா. பரபரப்பாக அவன் நோயாளிகளை பரிசோதித்துக்கொண்டிருக்க, அடுத்த பேஷண்டாக அம்மாவின் உதவியுடன் உள்ளே வந்தாள் இந்துஜா.

அவனை பார்த்ததும் பூரித்து போகிறது அவள் முகம். அவளது கையில் ஒரு பூச்செண்டு. தனக்காகத்தான் இருக்கும் என புரிகிறது விஷ்வாவுக்கு.

ஏதோ ஒரு காரணத்தை சொல்லி அம்மாவை கொஞ்ச நேரம் வெளியில் இருக்க சொல்லிவிட்டு, அவளின் எச்ஸ்ரேக்களை பரிசோதிக்க துவங்கினான் விஷ்வா. அங்கே பரவிக்கிடந்த அந்த நிசப்தம் கூட அழகாக இருப்பதைப்போல் ஒரு எண்ணம் விஷ்வாவுக்கு.

'ஃபைன். நல்ல இம்ப்ரூவ்மெண்ட் இருக்கு. நாம பிளாஸ்டர் ரிமூவ் பண்ணி பார்க்கலாம்.. என்றபடி கத்திரிக்கோல், கத்தி இத்தியாதிகளுடன் அவன் அருகில் வர ஒரு குறும்பு சிரிப்புடன் அந்த பூச்செண்டை நீட்டினாள் அவனிடத்தில்.

ஒற்றை பார்வையில் இப்படி என்னை ஈர்த்து போடுகிறாயே பெண்ணே எப்படி??? பூச்செண்டை வாங்காமல் அவளையே பார்த்திருந்தான் அவன்.

மனதில் தோன்றிய நொடியில் உணர்வுகளை வார்த்தையில் வெளிப்படுத்தி விட முடியாத குறை ஒன்று உன்னிடம் இருந்த போதும், அதையும் தாண்டி உன் முகத்தில் ஓடும் தன்னபிக்கையும், புன்னகையும்,  இதில் தானடி நான் விழுந்து போகிறேன்.

புன்னகையுடன் வாங்கிக்கொண்டான் பூச்செண்டை..

'டாக்டர் விஷ்வான்னு சொன்னதும் நான் ஏதோ பெரிய டாக்டர்ன்னு நினைச்சேன். கடைசியிலே இவர் எப்போ பார்த்தாலும் கையிலே சுத்தியலும், கத்திரிக்கோலும் வெச்சுகிட்டு மெக்கானிக் மாதிரி...இதிலே இவர்தான் எனக்கு மாப்பிளையாம்!!!! ஆண்டவா..' அவள் கையெழுத்தில் சின்னதாய் ஒரு செய்தி அதில்.

கண்களில் குறும்பு தெறிக்க அவள் அவனை பார்த்திருக்க,

'நான் அன்று அவள் நாட்டியத்தை கேலி செய்ததற்கான பதிலா இது??? சிரித்துக்கொண்டான் விஷ்வா.

'சரி அப்போ வேறே மாப்பிள்ளை பார்த்திடுவோம்..' அவன் சொல்லியே விட சட்டென அவன் கை பற்றிக்கொண்டாள் இந்துஜா.

'சும்மா விளையாட்டுக்கு..' என சொல்லும் தவிப்பான பாவம் அவளிடத்தில்.

அழகானதொரு சிரிப்புடன் அங்கே நாற்காலியில் அமர்ந்திருந்தவளை கைகளில் அள்ளி அங்கே இருந்த மேஜையில் படுக்க வைத்து விட்டு கட்டுகளை பிரிக்க துவங்கினான் விஷ்வா.

ஏதேதோ எண்ண ஓட்டங்கள் அவனுக்குள்ளே.. 'இந்த பெண் மனதிற்குள் ஆசையை வளர்த்துக்கொள்ள ஆரம்பித்து விட்டதே. என் திருமணம் நடக்குமா???'

கட்டுக்களை பிரித்துவிட்டு அவன் அவள் காலை சற்றே அசைத்துப்பார்க்க வலி உயிர் போனது. கண்களில் நீர் கட்டிக்கொள்ள அவள் தோளை இறுக்கமாக பற்றிக்கொண்டாள் அவள்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.