(Reading time: 23 - 46 minutes)

வளையே பார்த்திருந்தான் அவன். மறுபடியும் மாலையில் நடந்த நிகழ்வு அவனது மனத்திரையில்!!!!

'எதற்கடி பெண்ணே கண்ணீர்??? இப்படி கண்ணீருடன் அந்த திருமணத்தில் நுழைய வேண்டிய எந்த கட்டாயமும் உனக்கில்லை. நீயெல்லாம் மகாராணியாக வாழ வேண்டியவள். வாழவைக்கிறேன் நான்..' கடைசியாக ஒரு முறை அந்த மோதிரத்தை சுண்டி விளையாடி பிடித்தான் பரத்.

அதை அங்கே இருந்த டீப்பாயின் மீது வைத்துவிட்டு வெகு இயல்பாக அந்த பத்திரிக்கையை வாங்கிக்கொண்டான் அவன்..

'நானே உன்கிட்டே கேட்டு வாங்கணும்னு நினைச்சேன். என்னைக்கு கல்யாணம்? எத்தனை மணிக்கு கல்யாணம் எந்த மண்டபத்திலே கல்யாணம் இதெல்லாம் எனக்கு கரெக்டா தெரியணுமே அதுக்காக !!! தாங்க்யூ..'  என்றான் சின்ன புன்னகையுடன்.

அந்த புன்னகை அவளுக்கு சற்றே வியப்பை கொடுத்தது. அதே நேரத்தில் அவன் அதை இயல்பாக எடுத்துக்கொண்டது சந்தோஷமாகவும் இருந்தது. அதை அவன் பிரித்து பார்த்துக்கொண்டிருக்க

'கண்டிப்பா வந்திடுங்க பரத்...' சொன்னாள் அபர்ணா.

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

தேவியின் "பாயும் மழை நீயே..." - காதல் கலந்த தொடர்கதை...

படிக்க தவறாதீர்கள்..

சொல்வதா வேண்டாமா என்று யோசித்து யோசித்துதான் சொன்னாள் அவள். 'என்னதான் இருந்தாலும் என் கழுத்தில் தாலி ஏறும் நிமிடம் அவனுக்கு ரொம்பவும் வலிக்குமே!!!'

'கண்டிப்பா வருவேன்...' என்றான் அவள் கண்களுக்குள் பார்த்து. 'இன்னும் பத்து நாள்தானே இருக்கு. உன் கல்யாணம் முடியற வரை நான் சென்னை விட்டு போறதாவே இல்லை. நான் இல்லாம உன் கல்யாணம் நடக்காது க..ண்..ண..ம்..மா..' அந்த 'கண்ணம்மாவை' பரத் அழுத்தம் திருத்தமாக உச்சரிக்க சர்வமும் குலுங்கியது அவளுக்குள்ளே.

'இது என்ன திடீரென கண்ணம்மா???' அவள் உள்ளுணர்வு எதையோ உணர்த்த அதற்குள் இயல்புக்கு நகர்ந்துக்கொண்டு அவளை கலைத்தான் பரத்.

'ரெடியா.. அபர்ணா.. ஃபங்ஷன் டைம் ஆச்சு நாம கிளம்பலாம்..' பத்திரிக்கையை பேன்ட் பாகெட்டுக்குள் திணித்துக்கொண்டு அவன் நடக்க எதுவும் பேச தோன்றாமல் அவன் பின்னால் நடந்தாள் அபர்ணா.

சை வெளியிட்டு விழா

அவர்கள் இருவரும் சென்று இறங்க அவர்களை பூச்செண்டு கொடுத்து அழைத்து சென்றாள் ஸ்ரீஜா.

இது போன்ற விழாக்களை அபர்ணா டி.வியில் பார்த்ததுதான் அதிகம். அன்று அந்த விருது வழங்கும் விழாவில் கீழே அமர்ந்து பார்த்துக்கொண்டிருந்தாள். ஆனால் இன்று மேடை மேலே!!! மாலை முதலே மனதை மூடிக்கொண்டிருந்த குழப்ப மேகங்கள் சற்றே விலகி நின்றது போல் தோன்றியது அவளுக்கு.

அவள் டி.வி.யில் மட்டுமே பார்த்திருந்த சில சினிமா பிரபலங்களிடம் அறிமுக படுத்தி வைத்தான் பரத். ஒரு சில இயக்குனர்கள், நடிகர்கள், இசையமைப்பளர்கள் என எல்லாருமே வந்திருந்தனர்.

ஒரு பெரிய இயக்குனர் குறுந்தகடை வெளியிட இந்த திரைப்படத்தின் இயக்குனரும் இசையமைப்பாளர் ஸ்ரீஜாவும் பெற்றுக்கொள்ள, அரங்கம் கைதட்டலில் நிறைய, எல்லா நிகழ்ச்சிகளையும் ஆர்வம் பொங்க பொங்க பார்த்திருந்தாள் அவள்

அடுத்த சில நிமிடங்களில் நிகழந்தது அது. திரையில் அந்த திரைப்படத்தின் சில காட்சிகள் ஓட அங்கே ஒலிக்க ஆரம்பித்தது இவர்கள் இருவரும் பாடிய பாடல்..

உன் தோள் சாய்ந்து கண்மூடும்  வரம் மட்டும் வேண்டும் ....

உன் தோட்டத்து மழையாகும் சுகம் மட்டும் போதும்...

தேனாய் கரைந்து ஓடுகிறது அவள் குரல். 'நான் தானா?? ஒலித்துக்கொண்டிருப்பது என் குரலா??? அவளாலேயே இதை நம்ப முடியவில்லை!!! அவள் உடல் முழுதும் பரபரத்து சிலிர்த்தது.

அரங்கத்தில் இருந்தவர்கள் எல்லாரும் பாடலை ரசித்துக்கொண்டிருக்க, எல்லாரிடமும் ஒரு இனிதான புன்னகை தேங்கி இருக்க, மூச்சுகூட தடைபட்டு தடைபட்டு கிடைத்துக்கொண்டிருந்தது அவளுக்கு.  இப்போது பரத்தின் பார்வை இவள் மீதே என்று தனியாக சொல்ல வேண்டியது இல்லை!!!

புது பாடகி என்று அவளை மேடையில் ஸ்ரீஜா அறிமுக படுத்தி வைக்க அரங்கமே கைதட்டலில் நிறைய திக்கு முக்காடிப்போனாள் அபர்ணா.

'இது என்ன??? இப்படி ஒரு நிறைவான ஆனந்தம். அந்த மென்பொருள் நிறுவனத்தில் எத்தனை தேடினாலும் கிடைக்காத ஒரு அற்புதமான சந்தோஷம் அல்லவா இது!!!'

விழா இனிமையாக நிறைவடைந்திருக்க மேடையை விட்டு இருவரும் இறங்க...

'என்னோட அடுத்த படத்திலே நீங்க ரெண்டு பேரும்தான் பாடறீங்க. இந்தாங்க அட்வான்ஸ் செக்..' அவர்கள் இருவருக்கும் அருகில் வந்து செக்கை நீட்டினார் அவர்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.