(Reading time: 24 - 47 minutes)

20. அமிழ்தினும் இனியவள் அவள் - ஜான்சி

Amizhthinum iniyaval aval

புதிதாய் உணர்ந்தேன்

பூவுலகும், ஆகாயமும்.

 

புதிதாய் நுகர்ந்தேன்

மழை மண்வாசமும், மலரின் சுகந்தமும்.

 

அலையாய் மிதந்தேன்

உன் காதலில் நானும்.

 

எனையே உணர்வேன்

எனக்கு அவகாசம் தருவாயா………..அன்பனே?!!

யிற்று மதிய நேரம் அதற்க்குள் எவ்வளவோ விஷயங்களைச் செய்து முடித்திருந்தான் ரூபன். தன்னுடைய ஃபேக்டரி விஷயமாக தொடபு கொண்டிருந்த சில பெரிய மனிதர்கள் , போலீஸ், வக்கீல் என தன்னிடமிருந்த தொடர்பு எண்களில் தன்னுடைய குடும்பத்தினர் முக்கியமாக அனிக்காவின் குடும்பத்தினருக்கு சம்பந்தப்படாத ஆட்களாக தெரிவுச் செய்து பட்டும் படாமல் விபரம் தெரிவித்து ஆலோசனைக் கேட்க அதில் ஒருவர் பரிந்துரைச் செய்த டிடெக்டிவ் ஏஜென்ஸியை அணுகினான். அவனுக்கு ஏற்கெனவே அந்தக் கூட்டத்திலிருந்த நபர்கள் யாராவது தவறானவர்களோ?! என்கிற சந்தேகம் இருந்ததால் பிறர் அறியாதவண்ணம் வெளிப்படையாக பேசாமல் பெரும்பாலும் மெஸேஜிலேயே தகவல் பரிமாற்றம் வைத்துக் கொண்டான்.

போன் கால்களில் பிறருக்கு புரியாதவிதமாய் நறுக்குத் தெரித்தார் போல பேசினான். அங்கிருந்த யாருக்கும் இரு குறித்து எதுவும் பெரிதாக தோண்றாதவாறு பார்த்துக் கொண்டான்.

உடனே விசாரிப்பது பலன் தரும் என்பதாலும் , துப்பறியும் நிறுவணத்தினர் அலுவலகம் அருகாமையில் என்றதாலும் வெகு விரைவாக வெகு சாதாரண உடையில் துப்பறியும் நிபுணர் வந்து விட்டிருந்தார். பார்க்க இளவயதாக இருந்ததால் பரேஷை அங்கு யாருக்கும் வித்தியாசமாக தெரியவில்லை.அதிலும் ஏற்கெனவே அவரை ஜீவனுடைய நண்பனைப் போல வரவழைத்து ரூபன் எந்த செயலிலும் தலையிடாமல் தம்பியை முன்னே விட்டு செயல் புரிந்துக் கொண்டிருந்தான்.

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

தேவியின் "பாயும் மழை நீயே..." - காதல் கலந்த தொடர்கதை...

படிக்க தவறாதீர்கள்..

அனிக்கா கடலில் மூழ்கிய போது அவளோடு கடலில் குழுவாக விளையாடிக் கொண்டு இருந்தவர்கள் மிக குறைவே என்பதால் ஜீவன் பரேஷைக் கூட்டிக் கொண்டு அவர்களை விசாரிக்க அழைக்கச் சென்று வந்தான். மிகவும் தோழமையோடு பரேஷ் பேசிய பாங்கில் யாருக்கும் நெருடலாக தோன்றவில்லை.

நடந்த சம்பவத்தை யாரும் அனிக்காவின் வீட்டிற்க்கு தெரிய படுத்தவேண்டாம் அவள் வீட்டினர் பயந்து விடுவார்கள் என்றுச் சொன்னதன் பேரில் அனிக்காவின் தோழமைகள் அனைவரும் அதை ஆமோதித்தனர். தாங்களாக எதுவும் சொல்ல மாட்டோம் என்று ஒத்துக் கொண்டனர். அவர்களைப் பொறுத்தவரையில் அனிக்கா கடலில் மூழ்கிய அந்நிகழ்வு மிக சாதாரணமே, டாக்டர் வேறு பயத்தில் மயங்கி இருக்கிறாள் என்றதும் யாருமே அதை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. பரேஷின் விசாரணைக் கூட அவர்கள் மட்டில் ஜீவன் அனிக்கா விஷயத்தில் அளவிற்க்கு அதிகமாக பதட்டப் படுவதாகத் தோன்றியது. அது அவர்களுக்கிடையேயான உரையாடலிலும் கூட வெளிப்பட்டது, மிக முக்கியமாக திவ்யாவிற்க்கு அவனுடைய செயல்கள் ஒன்றுமே சரியானதாக தோன்றவில்லை.

பரேஷ் விடைப் பெற்றுச் சென்றதும் திவ்யா ஜீவனிடம் வந்தாள்.

“இப்ப வந்தாங்களே அவங்க யாரு ஜீவன்?”

“அவனா அவன் பரேஷ்…”

“அவங்க பேர் தெரியும் ஆனா அவங்க எதுக்கு துளைச்சு துளைச்சு எங்கிட்ட கேள்வி கேட்டாங்க.?

“அவங்களுக்கு ஏதோ டவுட் அதான்…;

“எது நாங்க அவளை தள்ளி விட்டுருப்போன்னா?”

இதென்ன புது விதமாய் கதை போகிறது என்றெண்ணியவன் அவளை சமாதானப் படுத்திய எண்ணியவனாய் ,

“ஏ திவ்யா அப்படியெல்லாம் எதுவுமில்லை. அது சும்மா தான் கடற்கரைனா நீங்க மட்டுமா இன்னும் எத்தனை பேர் அதே நேரம் கடல்ல குளிக்கிறாங்க…….உங்களை சந்தேகப்பட்டு இல்லை. அது வேற யாராவது…………”

“அப்படி அவ பெரிய இவளா இருந்தா அவ வீட்டிலயே நீச்சல் குளம் கட்டி குளிக்க வேண்டியது தானே? எதுக்கு இங்க வந்து எங்க கழுத்தை அறுக்கணும்?”

ஏ நீ என்னச் சொல்ற அவ உன் ஃபிரண்ட் தான…..நீ ஏன் திடீர்னு இப்படில்லாம்…….

“அவ என் ஃபிரண்ட்னா யாரும் எதையும் வந்து என் கிட்ட விசாரிக்கிறதையெல்லாம் நான் எதுக்கு பொறுத்துக்கணும். நீயெல்லாம் அப்படித்தானே? அவ பணக்காரின்னு தானே அவ பின்னால சுத்துற………..”

கடகடவெனப் பேசி அங்கிருந்து நகர்ந்து விட்டாள். திகைத்துப் போய் நின்றிருந்தான் ஜீவன்.

சொல்லுங்க பரேஷ்……… போனில் ரூபன் பரேஷிடம் பேசிக் கொண்டிருந்தான்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.