(Reading time: 12 - 24 minutes)

28. பாயும் மழை நீயே - தேவி

Paayum mazhai neeye

சுபத்ராவிற்கு நிஷா அளவிற்கு இங்கே நெருங்கிய friend யாரும் இல்லை. இரவுகளில் தங்கள் வீட்டிற்கு போன் பேசுபவள், வாரத்தில் இருநாட்கள் தன் நண்பர்களுக்கு பேசுவாள். ஆனால் ஏனோ இன்று வரை அர்ஜுன்க்கு மெசேஜ் மட்டும் தான் அனுப்புவாள்.

இங்கே பரத்தின் மூலம் உதவிகள் செய்ததற்கு நன்றி தெரிவித்து அன்று அவனுக்கு மெசேஜ் செய்தாள். அதன் பின் தினமும் காலையில் குட் morning, இரவில் குட் நைட்  மெசேஜ் அர்ஜுன் அனுப்ப ஆரம்பித்தான். இதற்கு சுபத்ராவும் பதில் அனுப்பினாள். ஒரு மாதம் சென்ற நிலையில் , அவன் இருக்கும் இடத்தில கடும் பனி சூழ, கிட்டத்தட்ட மூன்று நாட்கள் தகவல் தொடர்பு முற்றிலும் துண்டிக்க பட்டது. முக்கியமான ஆர்மி கேம்ப் போன் மட்டும் எந்த நிலையிலும் வேலை செய்யுமாறு higher டெக்னாலஜி மூலம் உருவாக்கப்பட்டு இருந்தது . மற்ற அணைத்து தொலை தொடர்பு சாதனங்களும் வேலை செய்யவில்லை.

இந்த நாட்களில் தான் சுபத்ரா தன் மனதை உணர ஆரம்பித்தாள். முதல் நாள் அர்ஜுன் மெசேஜ் வரவில்லை என்றவுடன் ஏதோ வேலை என்று எண்ணிக் கொண்டாள். இருந்தாலும் மனதின் ஓரத்தில் வெறும் மெசேஜ் தானே அது கூட முடியாதா என்றும் தோன்றியது. இரவு சரியான தூக்கம் இல்லை அவளுக்கு.

மறுநாள் காலையிலும் அவன் மெசேஜ் வரவில்லை என்றவுடன் அவளுக்கு லேசான பயம் தோன்றியது. எல்லையில் இப்போது அவசர நிலை எதுவும் இல்லையே .. பின் ஏன் அவன் தகவல் இல்லை என்று யோசித்து கொண்டிருந்தாள். பின் அவளின் வேலை நேரத்தில், அங்கே உள்ள நிலவரம் பற்றி எதாவது தகவல் தெரிகிறதா என்று அலசும் போது பனி மூட்டம் பற்றி தெரிய வந்தது. இரண்டு நாட்கள் அவ்வப்போது நெட் செக் செய்வதும், மொபைல் செக் செய்வதுமாக இருந்தாள்.

மூன்றாம் நாள் காலை சுறா அங்குள்ள நிலைமை மெல்ல சீரடைவதை தெரிந்து கொண்டாள். மொபைல் எப்போது வேலை செய்யுமோ என்று எண்ணிய சுறா, அர்ஜுன்க்கு ஒரு ஈ-மெயில் அனுப்பினாள்.

எந்த விதமான formalities உம இல்லமால், நேரடியாக

“கேப்டன்.. அங்கே உள்ள climate சரி ஆய்டுச்சா.. ? சரி ஆனா உடனே ஒரு மெசேஜ் அனுப்புங்க” என்று மட்டும் மெயில் செய்தாள்.

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

பிந்து வினோத்தின் "மலர்கள் நனைந்தன பனியாலே..." - காதல் என்பது இரு மனமுடிச்சு... εїз!

படிக்க தவறாதீர்கள்..

ன்று இரவு லடாக்கில் தகவல் தொடர்பு வந்ததும், அர்ஜுன் தன் மொபைல் ஆன் செய்தான். உடனே ஒரு மெயில் notification வரவும், தன் அப்பா அல்லது மிதுன் ஆக இருக்கும் என்று எண்ணி ஓபன் செய்தவன் சுபத்ரா மெயில் என்றவுடன் வாவ் என்று துள்ளினான்.

இங்கே வருவதற்கு முன் சுராவிடம் மெயில் id கொடுத்து இருந்தாலும் இருவரும் மெயில் அனுப்பிக் கொள்வது இதுதான் முதல் முறை. உடனே அவளுக்கு பதில் அனுப்பினான்.

“ஹாய். சுபா..இங்கே எல்லாம் கிளியர்.. டோன்ட் வொர்ரி.. “ என்று அவனும் பதில் மெசேஜ் அனுப்பினான். கையேடு sms உம அனுப்ப சுபத்ராவிற்கு நிம்மதியாக இருந்தது.

அதற்கு பின் வாரம் ஒருமுறை அர்ஜுன் சற்று detail ஆக மெயில் அனுப்ப ஆரம்பித்தான். லடாக்கில் உள்ள climate , உலக விவகாரங்கள், இருவரின் நட்பு வட்டம் பற்றிய செய்திகள் என பகிர்ந்து கொள்ள ஆரம்பித்தான்.

சுராவும் கொஞ்சம் கொஞ்சமாக அவள் ட்ரைனிங் , பரத், தன் பெற்றோர் என்று செய்திகள் பரிமாறிக் கொள்ள ஆரம்பித்து , இப்போது இருவரின் ரசனைகள் பற்றிய பகிர்தல் நடந்து கொண்டு இருந்தது.

லடாக் எல்லை பகுதியாக இருப்பதால் அங்கே அந்த வேலியை ஒட்டி தினமும் வீரர்கள் ரோந்து வருவார்கள். அதில் ஒரு end இல் ராகுல் , அடுத்த end இல் அர்ஜுன் பொறுப்பேற்று இருந்தனர். இருவரும் அடிக்கடி சந்திக்க முடியவில்லை. எதாவது மீட்டிங் போது சந்திப்பார்கள்.

அப்படி ஒருமுறை சந்திக்கும் போது அன்றைக்கு அர்ஜுனின் முகம் முழுதும் சிரிப்பாக இருக்கவே ராகுல் என்னவென்று வினவினான்.

“ ஒன்னும் இல்லை மச்சான்.. உன் பாச மலர் ஒரு அறிவாளி question கேட்டு இருக்கா? அத நினைச்சு சிரிச்சேன்..”

“ஹேய்.. சுறா கிட்ட நீ உன் லவ் சொல்லிட்டியா..?”

“நான் எங்கேடா அப்படி சொன்னேன்..?”

“இப்போ கேட்டா சொன்னியே..? போன்லே பேசரளா? சாதாரணமா பேச மாட்டாளே..?”

“அட போடா.. இப்போ தான் அவ என்னை மிஸ் பண்ணவே ஆரம்பிச்சு இருக்கா.. அதுக்குள்ளே அவ பேசி நான் எங்கே லவ் எல்லாம் சொல்றது..?”

“அப்போ இப்போ சொன்னது..?”

“அதுவா.. அவ மெயில் அனுப்பிருக்கா.. “

“ஏண்டா.. அவனவன் இப்போ facebook, whatsup, instagram ன்னு லைப் , லவ் ரெண்டும் develop பண்ணிட்டு இருக்கான்.. நீ இப்போதான் sms, ஈமெயில் ன்னு ரீல் சுத்திட்டு இருக்க.. உனக்கு பின்னாடி லவ் பண்ண ஆரம்பிச்ச நான் இப்போ அல்மோஸ்ட் engaged ஆயிட்டேன்.. நீ ஏண்டா இப்படி இருக்க?”

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.