(Reading time: 12 - 24 minutes)

டேய்.. எனக்கு அவகிட்ட பிடிச்சதே, அந்த குழந்தைத்தனமும், குறும்பும் தான். அவளோட கேரக்டர்க்கு அவ நிச்சயம் அவங்க அப்பா, அம்மா மனச கஷ்டபடுத்தக் கூடாதுன்னு தான் நினைப்பா.. நான் லவ் சொல்லும்போது அவ தப்பா எடுத்துகிட்டா, அப்படியே இல்லைனாலும் எங்கிட்ட பேசறத குறைச்சிட்ட என்ன பண்றது. எல்லாத்தையும் விட அவள் இன்னும் தன்னுடைய லைப் partner பத்தி நினைச்சே பார்க்கல.. அப்படி இருக்கும்போது அவள நான் force பண்ண விரும்பல.. அதான் நான் எதவும் அவகிட்ட சொல்லல..”

“அப்படின்னா உன் வீட்லேயும், அவ parents கிட்டயும் பேசி arranged marriage ஆ மாத்தலாமே..?”

“கண்டிப்பா.. அப்படித்தான் பண்ணுவேன்.. அது எப்போ என்றால் அவள் தன்னுடைய லைப் partner பத்தி யோசிக்கும்போது.. “

“சரி.. இப்போ என்ன சொல்ல வந்த?”

“அதுவா..” என்று மறுபடியும் சிரித்தவன்,

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

தெய்வாவின் "காதல் கீதம்" - காதல் கலந்த குடும்ப தொடர்....

படிக்க தவறாதீர்கள்..

“அவ கேட்ருக்கா.. ஏன் கேப்டன்.. லவ் பண்றவங்க face லே மட்டும் ஒரு தனி அசட்டு களை தெரியுதே .. எப்படின்னு போன வாரம் கேட்ருந்தா..?

“நான் அதுக்கு அது அவங்களோட சந்தோஷத்தின் வெளிப்பாடு..ன்னு சொல்லிட்டு .. நீ யாரை பார்த்தே அப்படின்னு கேட்டேன்..”

“அதுக்கு அவ.. உங்க தோஸ்த், என்னோட பாசமலர் ரெண்டு பேரும்தான் .. என்றாள்.. எனக்கு புரியாதோன்னு அதுக்கு விளக்கம் வேற.. என்னோட பாசமலர் பச்சை கலர் சிங்குச்சான்னு சட்டைய போட்டுகிட்டு எங்க பின்னாடி சுத்தும் போதே நினைச்சேன்.. அதோட நான் அப்பா வீட்லேர்ந்து கிளம்பி ட்ரைனிங் வரும்போது உங்க தோஸ்த் என் friend கீமா கிட்ட கடலை வறுக்கும் போது பார்த்தேன்.. எதுக்கு இப்போ இந்த அசட்டு மூஞ்சின்னு.. பார்த்தா ரெண்டும் லவ் பண்றேன்னு சொல்றாங்க.. அது ஏன் பாஸ் அப்படின்னு கேட்டாடா ? இன்னிக்கு உன்னை பார்த்ததும் அந்த நியாபகம் வந்தது..” என்று முடிக்க,

“அது எப்படி டா.. நீங்க ரெண்டு பேரும் இப்படி இருக்கீங்க.. மத்தவங்களை கலாயிக்கனும்னா வரிஞ்சு கட்டிட்டு வருவீங்க.. அது சரி நீ இப்போ எந்த டிசைன் லே இருக்க.. same டிசைன் தானே.. “

“மச்சி.. அது அவளுக்கு தெரியாதே.. நாங்க தான் கெத்த விடலியே..”

“அந்த ஏத்தம் தாண்டா.. உனக்கு.. ? சரி நீ என்ன பதில் அனுப்பின?”

“ஏன் உன்கிட்ட யாரும் அந்த மாதிரி வழியலையா அப்படின்னு கேட்ருக்கேன்.. அவ பதில் இன்னும் வரல..”

“சரி மச்சி.. உனக்கு ஒரு சாக்கு... அவகிட பேச.. எங்கள கலாயிச்சி நீ நல்லா  என்ஜாய் பண்ணு.. ஆல் தி பெஸ்ட் மச்சி..”என்ற படி கிளம்ப,

“பாய் டா.. “ என்று வழி அனுப்பி வைத்தான்.

சுபத்ரா அந்த JCB ட்ரைனிங் சென்டர் வந்து கிட்டத்தட்ட ஆறு மாதங்கள் கடந்து விட்டது. அவளின் ட்ரைனிங்கோடு , அவள் parade லீட் செய்தும் இருப்பதால், அதிலும் முதல் பெண்கள் அணிக்கு என்பதால் அவளுக்கு அங்கே நல்ல மதிப்பு இருந்தது.

அங்கே RAW சம்பந்தப்பட்ட பயிற்சிகளே அதிகம். அடிக்கடி CIA of USA , இஸ்ரேல் intellegence பூல் இங்கிருந்து எல்லாம் ஆபீசர்ஸ் வந்து செமினார் வகுப்புகள் எடுப்பார்கள். இதில் சுபத்ராவிற்கு கம்ப்யூட்டரில் அதிகம் நோண்டும் தன்மை இருப்பதால் அவள் அதிகம் லேபில் தான் செலவழிப்பாள்.

ஒருமுறை USA lecturer வெப்சைட் வழியாக எப்படி தகவல்கள் பரிமாறிக் கொள்வார்கள் என்பதை பற்றிய வகுப்பு எடுக்க, அதை உன்னிப்பாக கவனித்த சுறா, அன்றிலிருந்து அவளே சில வெப்சைட் சென்று அதை encrypt செய்ய ஆரம்பித்து இருந்தாள். அது அவளின் ட்ரைனிங்கோடு கூடிய பொழுது போக்கு.

அவள் தொடர்ந்து ஒரு வெப்சைட்டில் சில மெசேஜ் பார்த்தாள். அது வெறும் url code ஆக மட்டும் இருந்தது. பொதுவாக சைட் activate ஆகாமல் இருக்கும் போதுதான் அந்த code display ஆகும்.. ஆனால் இந்த சைட் டில் ஒரு கார்நேரில் மட்டும் அந்த code இருந்தது.. முதல் நாள் அது ஏதோ ad filling space என்று எண்ணி சாதாரணமாக விட்டாள். ஆனால் ஏதோ தோன்ற அந்த லைன் மட்டும் தன் நோட் படில் குறித்து வைத்தாள். அடுத்த இரண்டு நாட்களும் அதே போல் அந்த corner url code இருந்தது.. ஆனால் வேறு ஏதோ மாறி இருந்தது. இவளுக்கு சந்தேகம் ஏற்பட்டு தன்னுடைய instructor இடம் சொன்னாள். ஆனால் அவர் அப்படி எல்லாம் பப்ளிக்காக எந்த மெசேஜ் உம பாஸ் பண்ண மாட்டார்கள்.. அது எதாவது code ஆக தான் இருக்கும் என்று விட்டார்.

இதை மனதில் வைத்துக் கொண்டு யாரிடம் சொல்வது என்று புரியாமல் இருந்தாள். நான்காம் நாள் பார்த்தாள் அங்கே நிஜமாகவே ad மெசேஜ் ஓடிக் கொண்டு இருந்தது.  தன் ஊகம் தான் தவறோ என்று எண்ணினாள். ஆனால் எதற்கும் அடிக்கடி அந்த வெப்சைட் சென்று பார்த்துக் கொண்டு இருந்தாள்.

ஒரு வாரம் சென்ற நிலையில் மீண்டும் அதே மாதிரி மெசேஜ் வந்தது. இப்போதும் அவள் superior இடம் சொல்ல அவர் அதை பெரிது படுத்த வில்லை. அவள் இதே யோசனையாக இருந்தாள்.

அவ்வப்போது பரத் வந்து அவளை விசாரித்து விட்டு செல்வான். அவளுக்கு அவனின் வேலை பற்றிய விவரம் தெரியாது. அதனால் அவன் ட்ரைனிங் கேப்டன் என்று மட்டும் எண்ணியிருந்தாள்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.