(Reading time: 12 - 24 minutes)

கொஞ்ச நாட்கள் கழித்து பரத் அவளை சந்திக்க வந்து இருக்க, அவளிடம் “ஏன் சுபா.. ஏதோ யோசனை ஆவே இருக்க ? “ என்று வினவினான்.

“அண்ணா , எனக்கு சில சந்தேகம் இருக்கு.. என்னுடைய instructor சரியான பதில் சொல்ல வில்லை.. நான் யாரிடம் கேட்டு தெரிந்து கொள்ளலாம்.. “ என்று வினவினாள்.

“எதை பற்றி சுபா ?”

“அது.. சொன்னால் தவறாக எடுத்துக் கொள்ள மாடீர்களே.. ? இது secret மெசேஜ் போன்றது.. நான் ரா சம்பந்தப்பட்ட யாரிடமாவது சொன்னால் தான் சரியான பலன் கிடைக்கும்.. யாரை பார்க்கலாம்.. ?”

சற்று யோசித்த பரத், “நீ நாளை உன்னோட மெசேஜ் எடுத்துக் கொண்டு ரெடிஆ இரு.. நான் உன்னை ஒரு இடம் அழைத்து போகிறேன்.. அவரிடம் சொல்..” என,

“தேங்க்ஸ் அண்ணா. எத்தனை மணிக்கு ?”

“நாளை சண்டே தான் இல்லியா.. உனக்கு ட்ரைனிங் எதுவும் இருக்காது.. ஹ்ம்ம்.. அப்படி என்றால் ஒரு பத்து மணிக்கு போகலாம்..” என,

சுபாவும் தலையசைத்தாள்.

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

ஜெய்யின் "சாத்திரம் பேசுகிறாய் .... கண்ணம்மா" - சமூக அக்கறையுள்ள குடும்ப தொடர்...

படிக்க தவறாதீர்கள்..

றுநாள் சொன்ன நேரத்தில் தயாராகி நின்றவளை பரத் CIA சீப் ஜெனரலிடம் அழைத்து போனான். அவர் வீட்டிற்கே அழைத்து சென்றவன், அவரை பார்த்ததும் salute வைக்க, சுபாவும் salute வைத்தாள்.

அவரும் பதில் salute வைத்த பின் “என்ன.. பரத் ... என்ன விஷயமா என்னை பார்க்க வந்தீங்க.. ?” என்று வினவ,

“ சீப்.. இவங்க சுபத்ரா.. JCB லே trainee .. இவங்க சில details சொல்லனும்னு சொல்றாங்க..”

“எப்பவு\ம் நீங்களே இது எல்லாம் final பண்ணிட்டு எங்கிட்ட வருவீங்க.. இன்னிக்கு என்ன புதுசா ?” என்று வினவ,

அப்போது தான் பரத் ரா ஆபீசர் என்று புரிந்து கொண்ட சுபா தன் கண்களை விரித்து பார்த்தாள். அவர்கள் இருவரின் குரல் கேட்கவும் மீண்டும் அவர்கள் பேச்சில் கவனம் வைத்தாள்.

“இல்லை சீப்.. எனக்கு கிடைத்த சில தகவல்கள் ரொம்ப ரகசியமானவை.. கிட்டத்தட்ட இவங்களுக்கும் அதே தகவல் கிடைச்சு இருக்கும்னு நினைக்றேன்.. அத நீங்க நேரடியா கேட்டு தெரிஞ்சிக்கிறது நல்லதுன்னு தோணிச்சு.. அதோட அவங்க trainee இருக்கிறதால இவங்க தகவல்கள் அவங்க superior நம்ப யோசிக்கிறார்ன்னு தோணுது. அதான் நேரடியா உங்க கிட்ட கூட்டிட்டு வந்துட்டேன்..”

“எஸ்.. மிஸ்.சுபத்ரா.. உங்களுக்கு என்ன தெரியும்..? அதுக்கு முன்னாடி எப்படி தெரியும்.? இது ரெண்டும் சொல்லுங்க..?”

“சீப்.. இப்போ எனக்கு கிடைத்த தகவல் எல்லாம் நெட் லே கிடைச்சது. அதாவது வெறும் url code மாதிரி இருக்கு.. ஆனால் அதில் ஏதோ தகவல் இருக்குன்னு என் மனசுக்கு தோணுது..”

“ஏன் அப்படி சொல்ற”

“இதிலே உள்ள தகவல்கள் எல்லாமே ஒரு பொருளோ என்னவோ பர்டிகுலர் ஒரு இடத்திற்கு போய் சேர்ந்து விட்டதுன்னு இருக்கு.. அது code லே இருந்தாலும்.. அதோட கன்டென்ட் இதுதான்.”

“ஏனம்மா . ஒரு secret மெசேஜ் ஆ இப்படி நெட் லே பப்ளிக் போடுவாங்களா?”

“அங்கே தான் எனக்கு டவுட் சார்.. இது மாதிரி மெசேஜ் பொதுவா பிரைவேட் ஆ தானே போடுவாங்க.. சம்பந்தபட்ட இன்பாக்ஸ் லே போறமாதிரி.. ஆனால் இப்படி பப்ளிக் ஆ போட்டா சந்தேகம் வராது .. அதே சமயம் அந்த ரெண்டு messenger உம unknown பெர்சன். அதுதான் அவங்களுக்கு instruction சம்பந்தப்பட்ட வெப்சைட்லே பார்க்க சொல்லி இருக்கும்னு தோணுது.. “

“ஹ்ம்ம்.. அது எப்படி அவ்ளோ உறுதியா சொல்ற?”

“first மூணு நாள் வேற வேற மெசேஜ் இருக்கு.. அப்புறம் கொஞ்ச நாள் எந்த மெசேஜ் இல்ல.. திருப்பி ஒரு வாரம் , பத்து நாள் கழிச்சு அதே method லே வேற மெசேஜ் வருது.. அதுதான் எனக்கு ரொம்ப டவுட் வந்தது..”

“ஓகே.. உனக்கு கிடச்ச மெசேஜ் எல்லாம் எடுத்து வச்சிருக்கியா? “

“ஆமாம் சார்.. “ என்றவள்  அதை தனி போல்டெர் போட்டு கொண்டு வந்ததை கொடுத்தாள். அவளின் அந்த நேர்த்தியில் சீப் வியந்தார்.

அதே போலே பரத்திடம் திரும்பி,

“உன்னோட மெசேஜ் கொடு “ என,

அவனும் அதே போல் போல்டேரில் கொடுக்க, இரண்டையும் படித்து பார்த்த சீப்

“ஒஹ் .. god.. ஹொவ் இஸ் இட் possible? “ என்று வியந்தவர்,

“பரத், சுபத்ரா ரெண்டு பேரும் கொடுத்த information unrest situation .. இப்போ நான் உடனே PM கூட மீட்டிங் போட்டாகனும்.. இந்த ரெண்டு file உம எங்கிட்ட இருக்கட்டும்.. உங்ககிட்ட காபி இருக்கா..?”

இருவரும் தலையாட்டவும், “அதை பத்திரமா வச்சுக்கோங்க.. எக்காரணம் கொண்டும் என்னை தவிர வேறு யாரிடமும் அதை பற்றி பேச வேண்டாம்.. & பரத் நான் எப்போ கூப்ட்டாலும் சுபத்ராவோட நீ வரணும்.. என்னோட லெட்டர் டு சுபத்ரா department க்கு ஒரு காபி உனக்கு வச்சுக்கோ.. இன்னொன்னு அவங்க கிட்ட கொடுத்துடு.. வில் சி யு சூன்” என்றபடி இருவரும் கிளம்பினார்களா என்று கூட பார்க்கமால் அவர் போன் எடுத்துக் கொண்டு போய் விட்டார்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.