(Reading time: 24 - 47 minutes)

நான் சொல்லப் போற இந்த விஷயத்தை நீ நம்ம க்ரூப்பில யார்கிட்டயும் சொல்லக் கூடாது, அனிக்கா கிட்டயும் இது பற்றி பேசக் கூடாது……………ஒ கே………. பிராமிஸ் வாங்க கை நீட்டியவனாய்............"என் அண்ணா அனிக்காவை லவ் பண்ணுறான்" அதான் என்றான்.

திவ்யாவிற்க்கு பேச்சே எழவில்லை தான் எத்தனை அவசரமாய் தப்பு தப்பாக தன்னுடைய மனதில் எண்ணி இருக்கிறோம். தான் பேசிய வார்த்தைகள் எவ்வளவு தவறு....... என்று மனசாட்சி அவளை இடித்துரைக்கவே மற்றெல்லாவற்றையும் தள்ளி வைத்து விட்டு அவன் கையில் உறுதி மொழி கூறும் விதமாக தன் கையை வைத்தாள். ஜீவனோ அவளின் உள்ளங்கையின் மென்மையைச் சற்று பரிசோதித்த பின்னரே கரத்தை விடுவித்தான்.

சரி இப்ப சொல்லுங்க......என்கிட்ட அண்ணாக்கு என்ன ஹெல்ப் வேணும் ? காற்றிறங்கிய பலூனாக ஒலித்தது திவ்யாவின் குரல்.

நீ அனிக்கா மூழ்கிறதுக்கு முன்னாடி உங்க பக்கத்தில யாரோ இருந்ததாகவும், அவரை பக்கவாட்டு தோற்றமா பார்த்ததாகவும் சொன்னேன்னு பரேஷ் சொன்னார், உன்னோட ஹெல்ப் இருந்தா ஸ்கெட்ச் வரையலாமேன்னு அவங்க அபிப்ராயம். உனக்கு அதுக்கு சரிவருமா? அப்படின்னா எந்த நேரம் உனக்கு வசதிப் படும்ன்னு சொல்லு?

ம்ம்…சொல்றேன்…….. என்றுக் கூறியவளை மேலும் சங்கடப் படுத்தாத விதமாக பேச்சை தொடர்ந்தான். அவளை சகஜமாக்க ஒரு சில மொக்கை ஜோக்குகளை பேச்சினூடாக போட்டு தாக்கினான். முன் போல பட பட பட்டாசாக அவள் மாற ஆரம்பித்ததை உணர்ந்தான்.

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

ஜெய்யின் "சாத்திரம் பேசுகிறாய் .... கண்ணம்மா" - சமூக அக்கறையுள்ள குடும்ப தொடர்...

படிக்க தவறாதீர்கள்..

நீ இப்படி இருந்தா தான் நல்லாயிருக்கு திவி……..என்று மனதில் எண்ணிக் கொண்டவன் விடைபெற யத்தனித்த போது,

ஜீவன் எனக்கு ஒரே ஒரு டவுட்டு………….

டவுட்டா…….நியாயமா உன் மூளையை யோசிக்க விடக் கூடாதே? அது எனக்கு ஆபத்தாச்சே? என கேட்காதவாறு நகர முனைய……………

மரியாதையா பதில் சொல்லிட்டுப் போ என அதிகாரமாய் கேட்டவளுக்கு வெகு அப்பாவியாக முகத்தை வைத்துக் கொண்டு திரும்பினான் ஜீவன்.

சொல்லு திவ்யா…….

இல்லை நீ அடிக்கடி எங்கிட்ட பேசும் போது “நீ என்கிறதால மட்டும் உன்கிட்ட உண்மைச் சொல்லுறேன்னு” ன்னு குறிப்பிட்டியே அதுக்கு என்ன அர்த்தம்?

அதுவா?............கொஞ்சம் இடைவெளி விட்டான் ஜீவன், ஏனென்றால் பொருத்தமாக வாக்கியம் கோர்த்தாக வேண்டுமே?

அது தான்………..

அது என்னன்னா?...........

ம்ம்………

ஏன்னா நீ ஒரு நல்லவ, வல்லவ, நாலும் தெரிஞ்சவ………

அவன் வார்த்தையால் டைப் அடிப்பதை அக்கினியாய் கொதிக்கும் கண்களோடு நின்றிருந்தவளுக்கு அருகில் சென்றவன்……..ஏன்னா?

……………….

ஏன்னா நீ டெமோன் திவ்யாவாச்சே……..எனக்கென்னவோ பேய்னாலே பயம் அதனாலத் தான் எனச் சொல்லி அங்கிருந்து ஓட்டம் பிடித்தான்.

அவன் செய்கையில் அவள் கோபம் எங்கோ போயிருக்க தன்னை மறந்து சிரித்து விட்டிருந்தாள் திவ்யா.

அனிக்கா தூக்கத்தினின்று எழுந்தாள். அவளருகே யாரும் இல்லை. வேளியே வந்தாள். உணவை பரிமாறிக்கொண்டிருந்தவர்கள் இவளைக் கண்டதும் அருகே வந்தனர்.

வா அனி, இப்போ உடம்புக்கு பரவாயில்லையா? கடல் அலை பெரிசா வந்ததும் ரொம்ப பயந்திட்டியா?இப்போ பரவா இல்லையா?

ஆம் என தலையசைத்தவள், இப்போ சரியாயிடுச்சு…..என்றாள்.

உன் சாப்பாடு இங்க இருக்கு எடுத்துக்கோ........ சாப்பிடு, ரூபன் அண்ணாவும் சாப்பிடலை வேற எல்லாரும் சாப்பிட்டாச்சு, நீ அவங்களுக்கு கொடுத்திடுறியா? நாங்க மறுபடியும் கடலுக்கு போகப் போறோம்.

சரிண்ணா……..

இருவருடைய உணவையும் கொண்டு அறையில் வைத்தவள் ரூபனுக்கு அழைக்க கூச்சம் தடுக்க, ஜீவனுக்கு அழைத்து ரூபனை சாப்பிட கூப்பிடலாமென்று விழைந்தாள்.

ஜீவனுடைய போன் நாட் ரீச்சபிள் காண்பிக்கவே வேறு வழியில்லாமல் ரூபனுக்கு தயக்கத்தோடு அழைத்தாள். அவன் பஸ்ஸில் சென்று அமர்ந்து பலப் பல சிந்தனைகளில் களைத்தவன் அப்போதுதான் அரைத் தூக்கத்தில் இருந்தான். போன் ரிங்க் முழுவதும் அடித்து முடித்தபின் தான் கண்விழித்து போனை எடுத்தான்.

அனியா? என்னவாக இருக்கும்? கொஞ்சம் பதற்றம் இருந்தாலும் மறுபடி கால் செய்ய விசையை அழுத்து முன் சட்டென்று மெஸேஜ் வந்து அவன் இன்பாக்ஸில் குதித்தது………." அத்தான், நீங்கள் எங்கே இருக்கிறீர்கள்?" என்ற சாதாரணமானதொரு மெஸேஜ் அவளுக்கு எதுவும் பிரச்சினை இல்லை என்பதை உணர்த்த ஆசுவாசமாய் ,

“பஸ்ஸில்” என்று பதிலளித்தான் சுருக்கமாய்……..

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.