(Reading time: 24 - 47 minutes)

ச்சீ…………

ஹேய் லெக் பீஸ் வேணுமான்னு கேட்டா , நான் இதை தரப் போறேன்னு அர்த்தமில்லை., இது என்னோடதாக்கும். உனக்கு வேணும்னா வேற லெக் பீஸ் அங்க போயி வாங்கி தரேன்னு சொன்னேன். அதுக்கென்ன ச்சீ……….ன்னு சொல்ற என...... அவள் பேச்சை அலட்சியப் படுத்தியவனாக தன் சாப்பாட்டை ஒரு பருக்கையும் மிச்சம் வைக்காமல் மொக்கினான். எதிரில் இருந்த திவ்யாவிற்க்கு தான் சாப்பிட முடியவில்லை, கொஞ்ச கொஞ்சமாக கொரித்துக் கொண்டிருந்தாள்.

சாப்பிட்டு முடித்து கை கழுவி வந்தவன் அவள் முழுவதும் சாப்பிடும் வரை பொறுமையாக காத்திருந்தான். அவளோ சாப்பிட்டு முடித்ததும் அவனை அலட்சியம் செய்தவளாக கடற்கரையோரம் நடைபயிலச் சென்றாள்.

அவளையே பின் தொடர்ந்து வந்த ஜீவனைப் பார்த்து அவளுக்கு எரிச்சல் எரிச்சலாக வந்தது. தான் பேசியது தவறோவென ஏற்கெனவே மனம் உறுத்திக் கொண்டிருக்க, அவனோ எருமை மாட்டில் மழை பெய்தது போல ஒன்றையும் கண்டுக் கொள்ளாமல் அவளிடம் பேச முனைவதை என்னச் சொல்ல?

இப்போ எதுக்கு என் பின்னாலயே வர்ற நீ?

உன்கிட்ட பேசணும்……………

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

தெய்வாவின் "காதல் கீதம்" - காதல் கலந்த குடும்ப தொடர்....

படிக்க தவறாதீர்கள்..

என்கிட்டயா எதுக்கு?

நீ நிறைய விஷயம் தப்பு தப்பா புரிஞ்சு வச்சிருக்க அதான்…….

……………

அனிக்கா என்னோட சைல்ஹுட் ஃப்ரெண்ட்………

……………

நாங்க ரெண்டு பேரும் கேஜிக்கும் முன்னாடியே க்ளோஸ்………ஏன்னா நாங்க ஃபைட்டிங்க் ஃப்ரண்ட்ஸ்…….எப்படிச் சொல்லு?

அவ என் ரிலேட்டிவ், என்னோட அத்தை மக…….

திவ்யாவின் முகத்தில் சற்றாக ஏமாற்றம் சூழ்ந்ததோ…………..

அவக்கிட்ட நான் கேர் எடுத்துக்கிறது அவ பணக்காரிங்கிறதால இல்லை...

அவன் வார்த்தையால் அடிப்பட்டவளாய் கேட்டுக் கொண்டிருந்தாள், சொன்ன வார்த்தை திரும்ப வரும் போது எப்படி வலிக்கும் என்று அப்போது அவளுக்கு அப்போது புரிந்தது. மன்னிப்பை யாசிப்பவளாக அவன் கண் பார்த்தாள். அவனோ அவள் மீது கவனமில்லாதவனாக தொடர்ந்தான்.

நான் அவளை விட பெரியவன் ………..கொஞ்சம் தான் அதிகமில்லை புன்னகைத்தவன்………… அதான் அவளை நான் நல்லா பார்த்துக்குவேன்னு வீட்ல எல்லோருக்கும் நினைப்பு. அத்தை எப்ப பாரு அவக் கூட எங்க போனாலும் “அனிய பார்த்துக்கன்னு” சொல்லாம இருந்ததில்லை அதனால தான் நான் அப்படி......அண்ட் அதனாலத்தான் எங்களை அப்படிப் பார்த்துக்கிட்டிருந்த உனக்கு அப்படி தோணிருக்கும்னு நினைக்கிறேன்.

பேசி முடித்தவன் அவள் கண் பார்த்தான் அவளின் கண்களில் இருந்த மன்னிப்பின் யாசிப்பை பார்த்து புன்னகைத்தவன் ,

நீ கேட்ட மாதிரி என்கிட்ட ஒரு சிலர் கேட்டிருக்காங்க, நான் அவங்களுக்கெல்லாம் பதில் சொன்னதில்லை. சொல்ல தேவையுமில்லை, எங்க ரெண்டு பேர் ஃப்ரண்ட்ஷிப்பை அப்படித்தான் ப்ரூவ் பண்னனும்னு அவசியமும் இல்லைனு அதையெல்லாம் அலட்சியப் படுத்திடுவேன், ஆனா, ஏனோ நீ என்னை தப்பா நினைக்கிறது எனக்கு பிடிக்கலை. அதான் சொல்ல நினைச்சேன்.

என்னச் சொல்வதென்றே தெரியாத நிலையில் இருந்தாள் திவ்யா, சென்ற இடம் தெரியாமல் அவள் டெமோன் எங்கேயோ காணாமல் போயிருந்தது.

நான் எதுக்கு இப்பவே வந்து உன்கிட்ட இவ்வளவு எக்ஸ்பிளனேஷன் கொடுத்துக் கிட்டு இருக்கேன்னா.......... எனக்கு உன் கிட்ட ஹெல்ப் தேவை அதான், இல்லைன்னா நாளைக்கு தான் உன் போன் நம்பர் வாங்கி பேசறதா இருந்தேன். 

................

ஏதுடா நல்லவன் மாதிரி பேசினது ஹெல்ப் கேட்கத்தானான்னு நீ நினைப்பியா இருக்கும். இந்த ஹெல்ப் எனக்கில்ல என் அண்ணனுக்காக, அவனுக்கு அனி கடலில் மூழ்கினதுல யாராவது அதுக்கு பின்னால காரணமா இருக்காங்களோன்னு ஒரு சந்தேகம். பரேஷ் அவன் ஏற்பாடு செஞ்ச ஆள்தான்.

……………..

அண்ணாக்கு நம்ம ஃபிரண்ட்ஸ் எல்லோரும் அவ்வளவு பரிச்சயம் இல்லைன்னதும்தான் பரேஷை உங்க கிட்ட பேச வைக்கிறதுக்கு என் கிட்ட உதவி கேட்டாங்க , நானும் உதவி செஞ்சேன்.

அண்ணாவா? ஆச்சரியமாய் அது ஏன் என்கிற கேள்வி அவள் கண்களில் தொக்கி நிற்க,

ஆக்சுவல்லி நான் இப்போ இங்கே இதுக்கு ரீசன் சொல்லாம விடலாம், இல்லை பொய்யாக் கூட ஏதாச்சும் சொல்லலாம் ஆனா மறுபடிச் சொல்றேன், நீ என்கிறதால என்னால அப்படிச் சொல்ல முடியலை. அவளருகே வந்தவன்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.