(Reading time: 24 - 47 minutes)

ப்பொழுதும் அளவாக யோசித்து சிரிக்க வேண்டிய நிர்பந்தம். நெருங்கிப் பழகிய பின் .உண்மைத் தெரிந்து அது ஏன், எப்படி என்றுக் கெட்கும் போதெல்லாம் அவன் சிறு வயதில் தான் கீழே விழுந்து விட்டதாக கட்டுக் கதைகள் கூறி சமாளிப்பான். ஆனாலும் எப்படியாவது ஒரு சில முறை உண்மைத் தெரிந்து அவனிடமே சிலர் நேரடியாக கேட்டிருக்கின்றனர்..... தான் தன்னுடைய குறைகளை பெரிது படுத்தும் வரை மட்டும்தான் பிறரும் தன்னை எள்ளி நகையாட முடியும். தனக்கு தன்னுடைய குறைகள் நிறையாக தோன்றுமானால் அல்லது அவற்றை பெரிது படுத்தாமல் அலட்சியம் செய்தோமானால் தன்னை யாராலும் எவராலும் அவமானப் படுத்த இயலாது என்னும் உண்மையை உணராதவனாக தினம்தோறும் பழியுணர்ச்சியில் துடித்துக் கொண்டிருந்தான் அவன். தன்னை ஆயுளுக்கும் சிரிக்க முடியாமல் செய்து விட்டு இவனுக்கெதற்கு இந்த சிரிப்பு?

உன்னையும் என்னைப் போல ஆயுளுக்கும் சிரிக்க முடியாதபடி செய்கிறேன் பார்? எனச் சூளுரைத்தவன் பிறர் அறியாமல் ரூபனுடன் கடற்கரையில் கண்ட அந்த பெண் இருக்கும் கடல் பகுதி நோக்கிச் சென்றான். அவனுடைய நீச்சலின் உபயத்தால் யாரும் அவனைக் கண்டுக் கொள்ள இயலவில்லை. சம்பவம் நிகழ தான் குறித்த சற்று நேரம் முன்பு சில அடிகள் தூரம் நின்று தன் வேட்டைப் பொருளைக் கண்ணுற்று கணக்கிட்டவன் கடலினுள் நீச்சலடித்து மூழ்கி, அலை ஆவேசமாய் அவர்களைக் கடந்துச் செல்லும் சில நொடி நேரம் வாகாக அவளின் கால்களை கடல் நீரினுள்ளே இழுத்து சில அடிகள் தள்ளி இழுத்து மூழ்கும் போது மூச்சுக்கு திணறிய அவளின் முதுகில் தன் முழுப் பலத்தைக் கூட்டி தண்ணீருக்குள் அமிழ்த்தினான்.

சட்டென்று ஏதோ தவறாய் தோன்றிட தன் வேட்டையை பாதியில் விட்டுச் செல்லும் மிருகமாய் ஏமாற்றத்தோடு அவளை விட்டுத் தள்ளிச் சென்றான். சற்றுத் தள்ளி நின்ற ஆடவர் குழுவில் தானும் நின்றுக் கொண்டு அங்கு நிகழ்கின்றவற்றைக் கவனிக்க ஆரம்பித்தான்.

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

சுபஸ்ரீயின் "கிருமி" – காதல் கலந்த விறு விறு தொடர்...

படிக்க தவறாதீர்கள்..

ஆச்சரியம் மேலிட்டது… ரூபன் தான்…., இவ்வளவு சீக்கிரமாய் எப்படி வந்திருப்பான் அவன்? அவனுடைய விழிகளின் தேடல், உடல் பாவனை அத்தனையும் தெரிவித்தது அவளுக்கான அவனின் உணர்வுகளை. அப்போதும் அவள் அவனுக்கு கிடைக்க கூடாது என்றே மனதிற்குள் கொக்கரித்தான் இவன். கடைசியில் கண்டு பிடித்து விட்டானே? இப்போதும் என்னைத் தோற்கடித்து விட்டான்………… அவனறியாமலே மறுபடியும் தோல்வியை விக்ரமிற்க்கு அளித்திருந்தான் ரூபன். அதன் காரணமாக அவனுக்குள் எழுந்த உக்கிரமான பழியுணர்ச்சி மீண்டும் பற்றி எரிந்தது.

அதன் பின்னர் நடந்த நிகழ்வுகள் ஒவ்வொன்றும் ரூபனுக்கு தண்டனைக் கொடுக்க வேண்டுமானால் தான் அந்த பெண்ணிற்க்கு தண்டனைக் கொடுப்பது மட்டுமே போதுமானது என்ற முடிவிற்க்கு வரவழைத்து இருந்தது. அன்றே தான் எண்ணியவற்றை ஈடேற்ற எண்ணினான் விக்ரம், அதற்காக தகுந்த நேரத்திற்காக காத்திருந்தான். அவனுக்கு அங்கு நிகழ்ந்துக் கொண்டிருந்த ஓரிரு நிகழ்வுகள் ஏதோ உணர்த்தின. ஆனாலும். அவனுக்கு தெளிவாக ஒன்றும் புரியவில்லை. அந்த பெண் மறுபடி வந்தால் யாருமில்லாத இடத்திற்க்கு கூட்டிச் சென்று ரூபனுக்கு எத்தனை துன்பம் தர வேண்டுமென்று எண்ணியிருக்கின்றானோ அத்தனையும் அவளுக்கு பரிசளித்து கடலில் நிறைவேற்ற இயலாத தன்னுடைய வேலையை முடிவுக்கு கொண்டு வரவேண்டுமென்று காரை மறைவில் நிறுத்திக் காத்துக் கொண்டிருந்தான்.

ஆனால், தான் அவளை அணுகும் முன் தடுத்தாற்கொண்டு தன் எதிரில் வந்த அந்த நபர் யார்?........... அந்த அட்ரஸ் கேட்டவன்? நிச்சயமாய் அது சாதாரண நிகழ்வு அல்ல. அவளுக்கு முற்றும் முழுவதுமாய் பாதுகாப்பிற்க்கு ஏற்பாடு செய்து விட்டுதான் தான் அமைதியாக இருக்கின்றான் இந்த ரூபன். நான் உன்னை சாதாரணமாக நினைத்துக் கொண்டிருந்தேன் ரூபன், நீ அப்படி இல்லை போலிருக்கிறது……….சபாஷ் அதையும் பார்க்கலாம், எனக்கு சமமாய் சவால் விடும் உன்னிடம் மோத எனக்கும் மிக பிடித்திருக்கின்றது. பார்ப்போமா நீயா நானாவென்று? காரின் மேல் சாய்ந்திருந்தவன் கண்களில் வெறி துலங்க , பற்கள் நெறிபட அகோரமாய் இளித்தான்.

ஸ்ஸிற்க்குள் வந்து விட்டிருந்தாள் அனிக்கா, கையோடு கொண்டு வந்திருந்த உணவையும் தண்ணீரையும் நடுப் பகுதியில் இருந்த சீட் ஒன்றில் வைத்து விட்டு அவனைத் தேடினாள். பாதுகாப்பற்ற குழந்தைப் போல சற்றுப் பின்னதான சீட்டில் தனக்குள்ளே ஒடுங்கியவனாக களைத்தவனாய் கண்கள் மூடிக் கிடந்தான் ரூபன்.

அத்தான்………..

சட்டென்று எழும்பி அமர்ந்தவன் தன் கம்பீரம் அனைத்தையும் ஒரு நிமிடத்தில் மீட்டெடுத்தான்.

என்னம்மா….என்னாச்சு……அவளுக்கு ஏதோ ஒன்று என்பது போல அவளை தலை முதல் கால் வரை ஆராய்ந்தான். பார்வையில் விகல்பம் இல்லையெனினும் அவளுக்குத் தான் சங்கடமாகப் போயிற்று. அவன் இன்னும் அவளை உணர்வில்லாதவளாக பார்த்த நினைவினின்று வெளியே வர முடியாமல் தவித்துக் கொண்டிருப்பது அவளுக்கு புரிந்தது. அவன் முன் அமர்ந்தாள்.

எனக்கு ஒண்னுமில்ல அத்தான், தூங்கி எழுந்ததும் ஃப்ரெஷ் ஆயிட்டேன்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.