(Reading time: 24 - 47 minutes)

சாப்பிட வருமாறு அவனை அழைத்தது அடுத்த மெஸேஜ்,

“பசியில்லை” என்று பதிலளித்தவனுக்கு அவளது அன்பான விசாரிப்பு மிகவும் இதமாக இருந்தது. இதற்காகத் தானே அவளை அவனுக்கு அவ்வளவாக பிடிக்கும். குறிப்பிட்ட ஒருவர் என்றில்லாமல் எல்லாரிடமுமாய், ஐந்தறிவு மிருகங்களிடமும், ஓரறிவு தாவரங்களிலும் எல்லாவிடமும் ஒரே போல அவள் காட்டும் அன்பும் அக்கறையும் என மனதில் அவளை சிலாகித்தவன் அவளை நேசித்ததற்காக புளங்காகிதம் கொண்டான் தன் மனதை அவளைத் தேர்வு செய்ததற்க்காக மற்றொரு முறை பாராட்டிக் கொண்டான். அவளைக் குறித்த எண்ணங்கள் அவன் முகத்தில் புன்முறுவல் கொண்டுச் சேர்க்க அப்படியே மறுபடியும் தலைச் சாய்த்துக் கண்ணயர்ந்தான்.

அனிக்காவிற்க்கு என்னச் செய்வது என்றுப் புரியவில்லை. முதலில் தன் பசிக்கு பதிலளிப்போம் என்றவளாக உணவை சாப்பிட ஆரம்பித்தாள். அதற்க்குள்ளாக அவள் மயங்கிய நேரத்தில் அவளை பரிசோதித்திருந்த அவர்கள் பள்ளிக்குழுவில் இருந்த அந்த மருத்துவர் வந்திருந்தார் கூடவே அவளது தோழியர் சிலரும் கூட, ஒருவேளை இவள் விழித்து விட்டதாக, அவள் சாப்பாடு வாங்கி வரும் நேரம் வெளியில் இருந்த யாரோ தகவல் சொல்லியிருக்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டாள். அவள் உடல் நலத்தை விசாரித்தவர்கள் அவள் சாப்பிட்டு முடிக்கும் வரை காத்திருந்தனர்.

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

மீராவின் "புத்தம் புது காலை..." - காதல் கலந்த குடும்ப தொடர்....

படிக்க தவறாதீர்கள்..

மறுபடி ஒருமுறை அவளை பரிசோதித்து விட்டு வலி நிவாரணி மட்டும் ஒன்று சாப்பிடச் சொல்லி மருத்துவர் விலகினார். அனைவருடைய அன்பில் கவனிப்பில் அவளுக்கு இதமாய் இருந்தது. ஜீவனை மறுபடியும் தொடர்புக் கொள்ள முயன்றும் ஏனோ அவன் தொடர்பு கிடைக்கவில்லை. ரூபனுக்கு உணவை அனுப்ப வேண்டுமே என்று அவள் மனம் முரண்டியது. வெளியே எட்டிப் பார்த்தால் அங்கு யாருமில்லை. தன்னை பார்க்க வந்த தோழியரும் மாத்திரைச் சாப்பிட்ட பின் மறுபடி அவள் உறங்கப் போகிறாள் என எண்ணியவர்களாக அவன் ஜீவனுக்கு போன் செய்ய முயலும் தருணம் திரும்பச் சென்றிருக்க அவர்களிடமாவது உணவை ரூபனிடம் சேர்ப்பிக்க உதவி கோரியிருக்கலாம் என்று மிக தாமதமாய் உணர்ந்தாள்.

பஸ் அருகில் தானே இருக்கிறது என்று எண்ணியவளாக ரூபனுக்காக தானே உணவை எடுத்துச் செல்ல கிளம்பினாள். காலையில் இருந்த கூச்சம் எங்கோ காணாமல் போய் தான் செய்ய எண்ணியவற்றை செய்யும் தீவிரம் மட்டும் அவளிடம் இருந்தது. சற்றுப் பின்னே யாரவன் இவர்கள் வயதை ஒத்த வாலிபன். ஒருவேளை நம் ஸ்கூலின் பழைய ஸ்டூடண்டாக இருக்குமோ? நமக்கு ஞாபகமில்லாத நபர் போலும் என்றெண்ணியவள்,

ஹாய் நீங்க xxx…..School & college Reunion Group தானா? எனக் கேட்டு புன்னகைத்தாள்.

ஆமாம் என அவனும் புன்னகைக்க………

இந்த லன்ச் ஐ அந்த பஸ்ல ரூபன்னு ஒருத்தங்க இருக்காங்க அவங்களுக்கு கொடுத்திருவீங்களா ப்ளீஸ்………

ஒ நோ….. நான் கொஞ்சம் அவசரமா அந்த பக்கம் போகணும் கடந்துச் சென்றான் அவன்.

அப்படின்னா நான் தான் போகணும் போல உள்ளத்து தயக்கத்தை மறுபடி வென்றவளாக முன்னேறினாள்.

அவளை இன்னொருவன் பின்தொடர அவனை சட்டென்று மறித்தான் அனிக்காவிடம் சற்று முன்பு பேசியவன்.

எஸ் சர்….

வாட்….

இந்த அட்ரஸ் எங்கிருக்குன்னு கொஞ்சம் சொல்ல முடியுமா சர்? என்றவனாக தன்னுடைய மொபைலிலிருந்த ஒரு அட்ரஸைக் காட்டி விசாரிக்க……..

திகைத்தவன் அங்கிருந்து நகரவும் இயலாமல் அவன் கேட்ட கேள்விகளுக்கு பதில்கள் சொல்லவும் இயலாமல் திகைத்தான். அதற்க்குள்ளாக அனிக்கா பஸ்ஸில் ஏறி விட்டிருந்தாள்.

ச்சே…என மனதிற்க்குள் சலித்தவனாய் , நான் இந்த ஏரியாவுக்கு புதுசு…..வேற யார்கிட்ட வேனும்னா கேளுங்க” என்றுச் சொல்லி அங்கிருந்து அகன்றான் விக்ரம்.

அவன் மனதிற்க்கும் மறுபடி கனல் வீச்சு,….

“ அது ஏனோ தெரியவில்லை ரூபன் விஷயத்தில் மட்டும் தான் எடுத்த காரியம் ஒன்றையும் முழுமையாக செய்ய முடியாமல் போவது நினைத்து அவனுக்கு மிக வேறுப்பாக இருந்தது. அதிகாலையிலேயே அவர்கள் பிக்னிக் வரும் மட்டும் பின்தொடர்ந்து வந்தது. சூரிய உதயத்தில் அவன் கண்கள் முன்னே நிகழ்ந்த ரூபனின் காதல் அரங்கேற்றம், அந்தப் பெண்ணின் கண்களின் வெட்கம் கூச்சம் எல்லாம் கண்டு அவன் வெந்துக் கொண்டிருந்தான்.

ஹாஸ்டலில் ஒரு போதும் ரூபனின் முகத்தில் புன்னகையைக் கண்டதில்லை அவன், அதுவே அவனுக்கு மிகவும் விருப்பமான ஒன்று இங்கென்னவென்றால் பூரித்து புன்னகைத்துக் கொண்டு ரூபன் மணிக்கணக்காக மெய் மறந்து இருக்கிறான்.

எனக்கு தீமைச் செய்தவன் என் பற்க்களை உடைத்தவன் தனக்கு பிடித்த பெண்ணோடு காதல் சொல்கிறான், மனம் விட்டுச் சிரிக்கிறான். ஆனால், என்னால் மட்டும் எந்த ஒரு பெண் முன்பும் மனம் விட்டு புன்னகைக்க முடியவில்லை. எவ்வளவுதான் நவீன முறையில் முன்பற்களை அவன் வடிவமைத்திருந்தாலும் அவன் மனம் விட்டு புன்னகைக்க இயலாமல் தாழ்வு மனப்பான்மை அவனைக் கொன்றுக் கொண்டிருந்தது. இவ்வளவுக்கும் அப்பழுக்கில்லாத ஆண்மை நிறைத் தோற்றம் அவனது. நிலாவின் களங்கம் போல, அவனுருவில் வாழ்நாளைக்குமாய் கருப்புப் புள்ளியாக அமைத்து விட்டான் ரூபன்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.