(Reading time: 24 - 47 minutes)

ந்த இன்சிடெண்ட் நடந்தப்போ கொஞ்சம் எர்லி டைம்ங்கிறதுனால கடல்ல நிறைய ஆட்கள் இல்லை பெரும்பாலும் உங்க க்ரூப் ஆட்கள் தான். அதில திவ்யான்னு ஒரு பொண்ணு அவங்க கடல்ல விளையாடிட்டு இருக்கப்போ சம்பவம் நடக்கிறதுக்கு கொஞ்சம் முன்னாடி ஒருத்தரைப் பார்த்ததா கொஞ்சம் அங்க அடையாளம் எல்லாம் சொன்னாங்க.

……………….ம்ம்

முகத்தை சரியா பார்க்கலைன்னு சொன்னாங்க. நான் கொஞ்சம் அதிகமா கேள்விக் கேட்டது அவங்களுக்கு பிடிக்கலை போலிருக்கு.……….அதுக்கப்புறம் அவங்க வாயை திறக்கவே இல்லை. முடிஞ்சா அவங்க கிட்ட விபரம் கேட்டுச் சொல்லுங்க, அவங்க பார்த்த நபரை ஸ்கெட்ச் வரைய உதவி செய்வாங்களான்னும் கேட்டு சொல்லுங்க.

……….ம்ம்.. வேற க்ளூ ஏதாவது………..

குறிப்பிட்டுச் சொல்ற மாதிரி க்ளூ கிடைக்கலை. இது பப்ளிக் ப்ளேஸ், அப்ப இருந்ததுக்கு இப்ப பார்த்தீங்களா எவ்வளவு கூட்டமா இருக்கு. இதில யார் யாரை எல்லாம் சந்தேகப் படுறது. இதில பாதிக்கப்பட்ட அந்த பெண் கிட்டயும் பேசித் தெரிஞ்சுக்கணும். அவங்க தூங்கிட்டு இருக்காங்கன்னு சொன்னதால இப்ப புறப்படறேன். அவங்களுக்கு சரியானதும் என் கூட பேசச் சொல்லுங்க. நான் கிடைச்ச விபரங்களை வைச்சு அடுத்து என்னச் செய்யணும்னு யோசிச்சுட்டு சொல்றேன்.

பரேஷ் அந்த இன்சிடெண்ட் நடந்தப்போ நான் ஸ்பாட்ல இருந்ததாலச் சொல்றேன் இது கொலை முயற்சியா தான் இருக்கணும். எனக்கு இதுக்கொரு தீர்வு கிடைச்சாதான் கொஞ்சம் ரிலாக்ஸா இருக்க முடியும். எனக்கு தெரிஞ்ச வரை நான் எல்லா விஷயத்தையும் சொல்லிட்டேன்.உங்களுக்கு வேற என்ன உதவி வேணும்னாலும் சொல்லுங்க. …என்றான் ரூபன்.

நீங்க கவலையே பட வேண்டாம் , சீக்கிரமே நான் உங்களுக்கு கண்டுபிடிச்சு சொல்றேன் சார்.

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

பிந்து வினோத்தின் "மலர்கள் நனைந்தன பனியாலே..." - காதல் என்பது இரு மனமுடிச்சு... εїз!

படிக்க தவறாதீர்கள்..

பரேஷிடம் பேசி முடித்ததும் ஜீவனிடம் வந்தான் ரூபன். ஜீவன் இன்னும் திவ்யா வீசிய வெடிகுண்டு பாதிப்பிலிருந்து வெளிவரவில்லை. ரூபன் ஜீவனிடம் பரேஷ் கூறியவற்றை தெரிய படுத்தினான். அதைக் கேட்ட ஜீவன் தான் எப்படியாவது திவ்யாவிடம் பேசி ஸ்கெட்ச் வரைய சம்மதம் வாங்கி விடுவதாக உறுதிப் படச் சொன்னான். இன்னும் அண்ணனின் முகம் தெளியாததைக் கண்டு என்னவென விசாரிக்க,

“இல்ல நாம வீட்டுல யாருக்கும் இந்த விஷயத்தை தெரிவிக்காம செய்றது சரியான்னு யோசிக்கிறேன்?”

“இது சரிதாண்ணா.... முதல்ல இது நீங்க நினைக்கிறமாதிரியா இல்லை ஒன்னுமே இல்லாத ஒரு விஷயத்தை நாம பெரிசாக்குறோமான்னு க்ளியர் பண்ணிக்கனுமே………

……………… பதில் சொல்லாமல் தன்னைப் பார்த்துக் கொண்டடிருப்பவனிடம்

நீங்க சொல்றதை நான் நம்பறேன், ஆனா பொதுவா யாருமே இதை ஒரு பெரிய விஷயமா எடுத்துக்கலை, அனி மேல யாரும் இவ்வளவு கோபம் வச்சிருக்க வாய்ப்புமில்லை, நான் அதை வச்சிச் சொன்னேன் அதுக்கு உங்களை நம்பலைன்னு அர்த்தம் இல்லை. இப்போதைக்கு இதை வீட்டில தெரிய படுத்தாம இருக்கிறது தான் நல்லது. சொன்னா வீட்ல எல்லோரும் பயந்திடுவாங்களே அண்ணா..

ம்ம்.. எல்லோரும் பயந்திடுவாங்கதான். தம்பியின் இரண்டாவது கருத்தை ஆமோதித்த ரூபன், தன்னுடைய உள்ளுணர்வை ஜீவனோ இல்லை யாருமோ நம்பினாலும் சரி இல்லை நம்பாவிட்டாலும் சரி, இந்த விஷயத்தில் முடிவு தெரியும் வரையிலும் முடிந்தவரை அனிக்காவின் பாதுகாப்பை கவனமெடுக்க தீர்மானித்துக் கொண்டான்.

பிக்னிக் வந்த எல்லோரும் சிறு சிறு குழுவாக விளையாட்டுகளில் ஈடுபட்டிருக்க மதியவேளைச் சாப்பாட்டு நேரமும் ஆரம்பித்து இருந்தது. அனிக்கா இன்னும் தூக்கத்தினின்று விழித்திருக்கவில்லை. ரூபன் உணவு உட்கொள்ள மனமின்றியே கடற்கரை நீளத்தை அளந்தவாறு நடைப் பயின்றவன் நட்ட நடு வானத்தில் ஏறி நின்று, வெயிலால் சுட்ட பகலவனால் களைத்துப் போக தான் வந்த பஸ்ஸில் ஏறி ஆலரவமற்று வெறித்துக் கிடந்த பஸ்ஸின் பின்பகுதியில் சென்று இளைப்பாற இடம் தேடினான்.

அதே நேரம் "பந்திக்கு முந்து" என்கிற பழமொழியை மிக கண்ணும் கருத்துமாக பின்பற்றும் ஜீவன் தன்னுடைய கையில் உணவை ஏந்தியவனாக திவ்யாவைத் தேடி அவள் அருகில் அமர்ந்தான். அவள் அவனைக் கண்டு வெடுக்கென்று எழும்பி முன்னேச் செல்ல அவனும் அவளைப் பின்தொடர்ந்தான். அவள் தோழிகள் அவனை விசித்திரமாக பார்த்தனர். சலித்துப் போய் கொஞ்சம் கடைசிப் பகுதியில் ஓரமாக இருந்த டேபிளில் திவ்யா தன் உணவைக் கொண்டுச் சென்று அமர்ந்தாள். தன்னெதிரே அமர்ந்து தன்னை பார்த்துக் கொண்டிருக்கும் ஜீவனைப் பார்த்து முறைத்தாள்.

என்னை நிம்மதியா சாப்பிட கூட விடமாட்டியா நீ?

இப்போ நான் என்னச் செஞ்சேன், உன் தட்டையா பிடுங்கினேன். சும்மா சீன் போடாத உட்காரு. எழும்பி இன்னும் போய்ட்டிருந்தா கடற்கரைக்கு போகணும், இல்லன்னா பின்னே கடலுக்கு நடுவில தான் சாப்பிடப் போகணும்.

சீன் போடறேனா? திவ்யாவிற்க்குள் இருந்த டெமோன் விழித்துக் கொண்டிருந்ததை அறிந்தும் அலட்சியப் படுத்தியவனாக சிக்கன் லெக் பீஸை கர்ம சிரத்தையாய் ரசித்து, ருசித்து சாப்பிட்டுக் கொண்டிருந்தான்.

என்ன பார்க்கிற? லெக் பீஸ் வேணுமா? என நீட்டியவனிடம்………..

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.