(Reading time: 23 - 46 minutes)

'டுத்த வாய்ப்பா??? உடனேவா??? அருணிடம் இதை சொல்ல வேண்டுமே!!! எப்படி எடுத்துக்கொள்வான் தெரியவில்லையே!!!' மனதில் குழப்பம் சேர செய்வதறியாது திகைத்துப்போனாள் அபர்ணா.

தமிழ் திரை உலகின் பிரபலமான இசையமைப்பாளர் அவர். அவர் பாடல்களை பல முறை ரசித்து கேட்டிருக்கிறாள் இவள். அவர் கொடுக்கும் பெரிய வாய்ப்பை எப்படி மறுப்பது???

'என்னமா யோசிக்கறே' என்றார் அவர். 'சும்மா வாங்கிக்கோ. உங்க ரெண்டு பேர் குரலும் ஒண்ணோட ஒண்ணு ரொம்ப அழகா பொருந்துது. உங்க ஜோடி பெரிய ஹிட் ஆகும். தைரியமா வாங்கிக்கோ..' அவர் கட்டாயப்படுத்தி சொல்ல அதற்கு மேல் மறுப்பதற்கு எதுவுமே இல்லை என்று தோன்றியது அவளுக்கு.

'தாங்க்யூ சார்..' அவள் செக்கை வாங்கிக்கொள்ள, அவனும் வாங்கிக்கொண்டான். மனதார இருவரையும் வாழ்த்தி பாராட்டிவிட்டு நகர்ந்தார் அவர். என்னதான் எதையுமே வெளிக்காட்டிக்கொள்ளவில்லை என்றாலும் இந்த திடீர் வாய்ப்பில் அவளது அடி மனதில் சந்தோஷ பூக்கள் நிறையவே பூத்திருந்தன.

வழி நெடுக அதிகம் பேசிக்கொள்ளவில்லை பரத்தும் அபர்ணாவும். அவளை வீட்டில் விட்டுவிட்டு  வீடு வந்து சேர்ந்தான் பரத். இந்த விழாவினால் கொஞ்ச நேரம் மறைந்திருந்த அழுத்தமும் கோபமும் மறுபடியும் வந்து சேர,

அதே உணர்வுகளுடனே வீட்டுக்குள் பரத் வர எதிரே வந்தான் விஷ்வா. அவனை பார்த்ததும் சடாரென தலைக்குள்ளே சுத்தியலால் அடி வாங்கிய உணர்வு பரத்துக்கு.

'நான் அருணை எதிர்த்து அபர்ணாவை கைப்பிடித்தால் அதன் பின் விஷ்வா - இந்துஜா திருமணத்தில் சிக்கல்கள் வராதா??? அந்த பெண்ணை நம் குடும்பத்துக்கு எப்படி கொடுப்பார்கள். இவன் ஆசைகள் தரைமட்டம் ஆகி விடாதா???

'என்ன ப்ரதர் ஃபங்ஷன் நல்ல படியா முடிஞ்சதா???' விஷ்வா கேட்க

'ஆங் முடிஞ்சது விஷ்வா' அவன் முகம் பார்க்காமல் சொல்லிவிட்டு அறைக்குள் புகுந்துக்கொண்டான் பரத்.

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

பிந்து வினோத்தின் "மலர்கள் நனைந்தன பனியாலே..." - காதல் என்பது இரு மனமுடிச்சு... εїз!

படிக்க தவறாதீர்கள்..

ரண்டு நாட்கள் கடந்திருக்க திருமணதிற்கு இன்னும் எட்டு நாட்களே இருந்த நிலையில்...

பலநூறு குழப்பங்களுடன் அவன் உழன்றுகொண்டிருந்த வேளையில் அன்று காலையில் பரத்தின் கைப்பேசிக்கு வந்தது அந்த அழைப்பு...

'நான் அஸ்வினி பேசறேன்..'

'ஹேய்.. சொல்லுமா...' என்றான் பரத் குரலில் உற்சாகத்தை பொருத்திக்கொண்டு 'எப்போ டியூட்டி ஜாயின் பண்ண போறே நீ??? இன்னும் சென்னையிலேயே சுத்திட்டு இருக்கே???

'அக்கா கல்யாணம் முடிஞ்ச அப்புறம்தான்..' அவள் தொனியில் இத்தனை சோர்வு படிந்திருந்து  அவன் பார்த்தே இல்லை 'நீங்க எங்கே இருக்கீங்க?' என்றாள் மெதுவாக.

'சென்னையிலேதான்மா இருக்கேன்..'

'எனக்கு ரெண்டு நாளா மனசே சரியில்லை பரத். உங்ககிட்டே கொஞ்சம் பேசணும். எங்கேயாவது தனியா மீட் பண்ணுவோமா???'

அடுத்த அரை மணி நேரத்தில் அந்த ஹோடேலில் அமர்ந்திருந்தனர் இருவரும்.

'என்னமா ஏதாவது பிரச்சனையா???'

'ம்... அக்கா கல்யாணம் பத்திதான்..'

'அதுக்கு என்ன??? பத்திரிகை எல்லாம் அடிச்சாச்சு. எல்லாம் சரியா தானே போயிட்டு இருக்கு..' கேட்டான் எனக்கு ஒன்றுமே தெரியாது என்பதைப்போல்!!!

'ரொம்ப அழகா நடிக்கறீங்க..' என்றாள் பட்டென 'எல்லாம் சரியா தான் போயிட்டிருக்கு. இந்த கல்யாணம் நல்ல படியா நடக்கட்டும்னு நீங்க மனசார சொல்வீங்களா???'

'உன் கேள்வி புரியலை எனக்கு ..' என்றவனின் பார்வை அஸ்வினியை தவிர்த்து அவன் எதிரே இருந்த மெனு கார்டின் மீதிருந்தது.

'டேய்... பொறுக்கி ராஸ்கல்... என்ன தைரியம்டா உனக்கு!!! அருணை பார்த்து இப்படித்தானே கத்தினீங்க அன்னைக்கு மொட்டை மாடியிலே...

'திடுக்.!!!' அதிர்வலைகள் பரத்தினுள்ளே.

'ஏன் நீங்க மட்டும் தான் மாடிக்கு போகணுமா. அப்போ நானும் வந்தேன் அங்கே. பார்த்தேன் அந்த கேவலமான காட்சியை..'

பதில் பேசாமல் தனது எதிரில் இருந்த தண்ணீரை எடுத்து அருந்தினான் பரத்.

'அவ எப்படி இதையெல்லாம் சகிச்சிட்டு இருக்கான்னு தெரியலை. கல்யாணத்துக்கு முன்னாடியே இப்படின்னா கல்யாணத்துக்கு அப்புறம் இன்னும் என்னென்ன நடக்குமோ? கற்பனை பண்ணி பார்க்கவே பயமா..இருக்கு.....' படபட குரலில் சொன்னாள் அஸ்வினி.

.................................................

'பேசாம இருந்தா என்ன அர்த்தம்??? அந்த பிரச்சனைக்கு அப்புறம் நீங்க எதாவது பெரிய முடிவு எடுத்திருப்பீங்கன்னு எனக்கு தெரியும். உண்டா இல்லையா???'

'ஆம்..' என மெதுவாக தலை அசைத்தான் பரத்.

'அப்போ நடந்ததை எல்லாருக்கும் சொல்லி இந்த கல்யாணத்தை நிறுத்திடலாமா..' என்றாள் அஸ்வினி அவசரமாக 'அதே மூகூர்த்ததிலே நீங்க தாலி கட்டிடுங்க..'

கலகலவென சிரித்தான் பரத் 'ஆமாம். உடனே மத்தவங்க எல்லாரும் சரின்னு சொல்லிடுவாங்க. .அப்படியே உங்க அக்கா கழுத்தை நீட்டிடுவா.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.