(Reading time: 12 - 23 minutes)

04. நானும் அங்கே உன்னோடு... - பூஜா பாண்டியன்

NAU

ரவு உணவின் பொழுது அவர்களது மேசையில் ஒரு நாற்காலி மட்டும் காலியாகவே இருந்ததை பூர்வி முதலில் கவனிக்கவில்லை. அவளுக்கிருந்த விரல் வலியில் எதையும் கவனிக்கும் நிலைமையில் அவள் இருக்கவும் இல்லை........

“நவைலா, பாஸ் எங்க? அவரோட ரூமில் சாப்பிடரரா? என ஸ்ருதி கேட்க

“இல்லை, அவர் “Full Moon Resort க்கு  கிளம்பி போய்ட்டார்....... என  நவைலா கூறினாள்.........

“ஒ, அங்க தான் எப்பவும் இருப்பாரா?

இல்லை, அங்கேயும் போயிட்டு தலைமை அலுவலகத்திற்கு போய்டுவார்.........

இவை அனைத்தையும் கேட்டு கொண்டிருந்த பூர்விக்கு தான் என்னவோ போல் இருந்தது......... ஏன் இந்தர் திடீர் என்று கிளம்பி சென்றான் என்று உறுத்தியது....... அவளால் அதற்கு மேல் சாப்பிடவும் முடியவில்லை.........

“நான், நம்ம அறைக்கு போறேன், நீங்க ரெண்டு பேரும் சாப்பிட்டு முடிச்சு வாங்க, என் விரல் ரொம்ப வலிக்குது என கூறி கிளம்பினாள் பூர்வி........

சாரி பூர்வி, இங்க பக்கத்துக்கு தீவிலிருந்து உள்நாட்டு மருத்துவர் இடம் இருந்து உன் காயத்துக்கு போட மருந்தை பாஸ் வரவழைச்சு இருக்கார். ரொம்ப வலிக்குதா? அந்த மருந்து இங்குள்ள கடல் பாசியில் இருந்து தயாரிக்கிறார்கள். அந்த மருந்த வைத்து கட்டு போட்டால் உடனே வலி போய்டும் என நவைலாவும் கூறினாள்............

தனக்காக மருந்தெல்லாம் வாங்க தெரிந்தவனுக்கு செல்வதற்கு முன் சொல்லிட்டு போகணும்னு மட்டும் தெரியலை...... என நினைத்த தன் மனதை தானே நிந்தித்து கொண்டாள். இந்தர் அவளுக்கு பாஸ், அவன் ஏன் அவளிடம் சொல்லி செல்ல வேண்டும்? என தனது மனதின் போக்கை எண்ணி பூர்வியும் குழப்பத்தில் யோசித்து கொண்டு இருந்தாள்.........

ஸ்ருதியும் அந்த மருந்தை வாங்கி பூர்வியின் விரலில் வைத்து கட்டு போட்டாள்.

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

புவனேஸ்வரியின் "மூங்கில் குழலானதே" - காதல் கலந்த குடும்ப தொடர்...

படிக்க தவறாதீர்கள்..

று நாள் காலை எழுந்த பொழுது விரலில் இருந்த வலி மாயமாக மறைந்திருந்தது. கடவுளின் படைப்பை நினைத்து பூர்விக்கு ஆச்சரியமாக இருந்தது...........  காயம் ஏற்படுத்தும் இடத்திலேயே அதற்கு மருந்தும் வைத்துள்ளார்........ கடவுளின் நினைப்புடன் இந்தரின் நினைப்பும் வரத்தான் செய்தது....... இவ்வாறாக ஒரு வாரம் இந்தர் இல்லாமலே கழிந்த பொழுது.........

மதிய உணவு நேரத்தில் , நவைலா இவர்கள் மூன்று பேரிடமும் மதியம் மூன்று மணிக்கு கடல் விமானத்தில் (Sea plane) ஒரு ரவுண்டு போயிட்டு அப்படியே “மாலே”வையும் சுத்தி பார்த்திட்டு இரவு விரைவு படகில் ரெசார்ட் திரும்பிவிடலாம் என கூறினாள்.

அது என்ன “மாலே”? என ஹெலனா வினவினாள்.

அது தான் மால்டிவ்ஸ்ன் தலை நகரம். அங்க தான் சிட்டி டூர் போக போறீங்க.........

பூர்விக்கு புது இடங்களை பார்க்க பிடிக்கும் என்பதால் அவளும் சந்தோசமாகவே கிளம்பினாள். ஸ்ருதி ஸீ பிளேனில் செல்வது குறித்து மிகவும் மகிழ்ச்சி அடைந்தாள்.

அவர்களுடன் இன்னும் ஆறு ஐரோப்பிய விருந்தினரும் உடன் வந்தனர்........

அனைவரும் ஒரு படகில் கிளம்பி சிறிது தூரத்தில் இருந்த மிதக்கும் மேடையில் இறங்கினர். சிறிது நேரத்தில் கடல் விமானம் பறந்து வந்து கடலில் இறங்கியது. இவர்கள் நின்றிருந்த மிதக்கும் மேடையருகில் வந்து நின்றது.........

பார்பதற்கு சிறியதாக அழகாக இருந்தது. உள்ளே ஏறினால், விமான ஒட்டியே நம் பார்வையில் படும் படி இருந்தார். ஒரு ஓரத்தில் ஒரு இருக்கையும் அடுத்த ஓரத்தில் இரண்டு இருக்கையுமாக , ஆறு வரிசையாக மொத்தம் 18 இருக்கைகளே இருந்தன..........

அனைவரும் ஏறியதும் விமானம் கிளம்பியது. விமான ஓடு தளத்தில் ஓடி பின் மேலே எழும்புவது போர்லவே கடலில் நீரை கிழித்து கொண்டு ஓடி மேலே எழும்பியது.... அதிக உயரம் செல்லாமல் தாழ்ந்தே பறந்ததால் வழியில் இருந்த தீவுகள் மற்றும் ரேசொர்டுகளை பார்க்க முடிந்தது. குட்டி குட்டியாய் பார்க்கவே அழகாக இருந்தது.........

சிறிது நேரத்திலேயே ஏர்போர்டை அடைந்து விட்டோம். எங்களை அழைத்து செல்ல மாலே அலுவலகதிலிருந்து “ஹுசைன் “ என்ற டூர் கைடு வந்திருந்தான். பார்பதற்கு 25 வயதில் துரு துருவென பேசி கொண்டே வந்தான்......

அங்கிருந்து கம்பெனி படகில் ஏறி மாலே வந்தடைந்தோம். மாலே பார்பதற்கு பில்டிங் செட்டால் கட்ட பட்ட சிறிய ஊராக இருந்தது.....நடந்தே ஊரை சுற்றி பார்க்க முடிந்தது....... மிகவும் சுத்தமாக இருந்தது.....

ஹுசைன் எல்லாவற்றையும் அழகாக விளக்கி சொல்லி கொண்டு வந்தான்...... அங்கிருந்த பெரிய மாஸ்க் , லோக்கல் மார்க்கெட், செயற்கை கடற்கரை, மியுசியம்  என அனைத்தையும் காண்பித்து முடித்து , இரவு எழு மணிக்கு படகில் ஏறி கிளம்ப படகு துறைக்கு அழைத்து வந்தான்........

அன்றைய விமானத்தில் வந்திருந்த விருந்தினர் அதிகம் இருந்ததால் ஆறு பேர் ஏறவே அந்த படகில இடம் இருந்தது....... இவர்களுடன் வந்த ஆறு பயணிகளை மட்டும் அந்த படகில் ஏற்றி அனுப்பி வைத்தான் ஹுசைன்.......

அவர்களது அலுவலகத்திற்கு போனில் அழைத்து பேசிய பொழுது வேறு படகு தற்பொழுது இல்லை என்றும் இவர்கள் மூவரையும் இன்று இரவு சில்வர் லீப் (silver leaf) ல் தங்க வைக்குமாறு உத்தரவு வந்தது.

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.