(Reading time: 7 - 13 minutes)

தொடர்கதை - சாத்திரம் பேசுகிறாய் .... கண்ணம்மா – 06 - ஜெய்

Saathiram pesugiraai kanamma

பாரதியும், சாரங்கனும் மறுநாள்  வாதிட வேண்டிய விஷயங்களை சந்திரனுடன் விவாதித்து விட்டு கிளம்பினர்.  இருவரும் வீட்டை அடைந்து யோசனையுடன் சாப்பிட்டு முடித்தனர்.   பாரதியின் யோசனையான முகத்தைப் பார்த்த  மகேஷ் தன் மனைவி ரூபாவை என்ன என்பதுபோல் பார்க்க, அவர் எனக்கும் தெரியாது என்று தோளைக் குலுக்கினார்.

“என்னடா பாரதி ஆச்சு.... சாப்பிடற சாப்பாட்டுல கவனம் இல்லாம இருக்க....”

“ஹ்ம்ம் இல்லைப்பா... நாளைக்கு ஒரு கேஸ் ஹியரிங் வருது... எதிர்கட்சி வக்கீல் சாட்சியைக் கலைக்க பார்க்கிறாரு.... அதுதான் என்ன பண்ணன்னு யோசிச்சுட்டு இருந்தேன்....”

“ரொம்ப முக்கியமான கேஸா பாரதி....”

“ஆமாம்ப்பா.... பன்னெண்டு வயசுப் பொண்ணை பக்கத்து வீட்டுப் பையன் ரேப் பண்ண பார்த்த கேஸ்....”

“ஆண்டவா... கேக்கவே பயங்கரமா இருக்கு....  சின்னக் குழந்தையை நாசம் பண்ண எப்படித்தான் மனசு வருதோ....”

“மனசா... இந்த மாதிரி ஆளுங்களுக்கு எல்லாம் அப்படி ஒண்ணை வைக்க ஆண்டவன் மறந்து போயிடறான் போல.....”

“கரெக்ட்ப்பா, நல்ல வேளையா அந்தப்பக்கம் வந்த ஆளால அந்தப் பொண்ணு தப்பிச்சுது....”

“ஓ அந்த ஆள்தான் சாட்சியா பாரதி...”

“ஆமாம்ப்பா.... இத்தனை நாளா நல்லா இருந்தவன் நாளைக்கு மாத்தி பேசிடுவான் போல தெரியுது....”

“உனக்கு ஏன் அப்படி தோணுது பாரதி....”

“நேத்து அவன் வீட்டுக்குப் போய் கேஸ் ஹியரிங் டேட் சொல்லிட்டு எதிர்க்கட்சி வக்கீல் கேக்கற கேள்விக்கு எப்படி பதில் சொல்லணும்ன்னு சொல்ல போய் இருந்தேன்.... அந்த ஆளோட நடவடிக்கை நான் போனதை விரும்பாத மாதிரியே இருந்துது... என்னை சீக்கிரம் வெளிய அனுப்பறதிலியே குறியா இருந்தான்..... எது சொன்னாலும் உடனே தலை ஆட்டி ஒத்துக்கிட்டான்.... கேள்வியை ஒழுங்கா கேட்டானான்னே தெரியலை...”

“ஓ... ஒரு வேளை அவனை மிரட்டி இருப்பாங்களோம்மா....”

“அப்படித் தெரியலைப்பா... பணம் வாங்கினா மாதிரிதான் தோணுது.... மிரட்டி இருந்தாங்கன்னா அவனோட பாடி லாங்குவேஜ் வேற மாதிரி இருக்கும்.... பயந்தா மாதிரியே இல்லை.... ரொம்ப தெனாவட்டா இருந்தான்....”

“ஹ்ம்ம் இப்போ என்னம்மா செய்யப் போறீங்க.... அவனைத் தவிர வேற சாட்சி இல்லையா....”

“இல்லைப்பா.... அவன் ஒருத்தன்தான் கண்ணால் பார்த்த நேரடி  சாட்சி....”

“ஓ நாளைக்கு காலைல வழக்கு வருது.... டைம்  ரொம்பக் குறைவா இருக்கே.... உங்களோட சீனியர் சந்திரன் என்ன சொல்றாரு...”

“அவருக்கும் என்ன பண்ணன்னு  தெரியலைப்பா.... சரிப்பா நான் சாரங்கன் வீட்டுக்குப் போயிட்டு வரேன்..... யோசிச்சு ஏதானும் வழி கண்டுபிடிக்கறோம்... அம்மா நான் ஒரு சாவி எடுத்துக்கறேன்.... நீங்க தாழ் போட்டுட்டு படுங்க.... நாங்க பேசி ஒரு முடிவுக்கு வர லேட் ஆகும்....”

“சரி பாரதி.... ரொம்ப நேரம் முழிக்காதீங்க..... அப்பறம் நாளைக்கு கோர்ட்டில  தூங்கிடப் போறீங்க....”

“நக்கல்ம்மா உனக்கு... நான் கிளம்பறேன்.....”, இருவருக்கும் இரவு வணக்கத்தை கூறி சாரங்கன் வீட்டிற்கு கிளம்பினாள் பாரதி.

வாம்மா பாரதி..... சப்பாத்தி இப்போதான் சூடா போடறேன்.... சாப்பிட உக்காரு வா....”

“இப்போதான்ம்மா சாப்பிட்டு வந்தேன்.... நீங்க ஹாட் பாக்ஸ்ல போட்டு வைங்க... கொஞ்ச நேரம் கழிச்சு சாப்பிடறேன்.....”

“மிஸ் பக்கி டின்னரை ஒரு நாளைக்கு ஒரு வாட்டிதான் சாப்பிடனும்..... மூணு வாட்டி சாப்பிடணும் அப்படின்னா அது ஒரு நாளைக்கு.... நீ ஒரு வேளைக்குன்னு தப்பா நினைச்சுட்ட போல”

“மிஸ்டர் சப்பாணி இப்போ நீங்க சொன்ன இந்த மொக்க ஜோக்குக்கு என்னால சாதாரணமா கூட சிரிக்க முடியலை... அதனால சீக்கிரமா உங்க சப்பாத்திக் கபளீகரத்தை முடிச்சுட்டு வர்றீங்களா, நாளைக்கு கேஸ் பத்தி பேசலாம்....”

“எதுக்குடா சாரங்கா, குழந்தையை கிண்டல் பண்ற.... நீ உக்கார்ந்து டிவி பாருடா பாரதி.... அம்மா உனக்கு மசாலாப்பால் எடுத்துட்டு வர்றேன்”, சாரங்கனின் அம்மா சொல்ல, பாரதி சாரங்கனுக்கு அழகு காட்டிவிட்டு டிவியில் நியூஸ் பார்க்க ஆரம்பித்தாள்.  சாரங்கன் இரவு உணவு முடித்து வர இருவரும் அவன் அறைக்கு சென்று பேச ஆரம்பித்தனர்,

“சாரங்கா  அந்த பையனை அர்ரெஸ்ட் பண்ணின  இன்ஸ்பெக்டர் இதுல இன்வால்வ் ஆகி இருப்பாரா? அவர் ஏதானும் சாட்சியை மிரட்டி இருக்க வாய்ப்பு இருக்கா?”

“அப்படித் தெரியலை பாரதி... நான் இன்ஸ்பெக்டர் மதிக்கிட்ட கேட்டேனே.... அந்தப் பையனை அர்ரெஸ்ட் பண்ணினவர் ரொம்ப நல்ல மாதிரியாம்.... இன்ஃபாக்ட் லஞ்சம் வாங்காம நேர்மையா  இருக்கறதாலேயே ஏகப்பட்ட வாட்டி ட்ரான்ஸ்ஃபர் ஆகி இருக்காராம்”

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.