(Reading time: 7 - 13 minutes)

அப்போ அவருக்கு ஃபோனைப் போட்டு, அங்க என்ன நிலவரம்ன்னு கேளு....”,பாரதி கூற சாரங்கன் இன்ஸ்பெக்டருக்கு அழைத்தான்.

“சொல்லுங்க சாரங்கன், என்ன இந்த நேரத்துல கூப்பிட்டு இருக்கீங்க...  நாளைக்குத்தானே உங்க வழக்கு வருது...”

“ஆமாம் சார்.... அது விஷயமா பேசத்தான் கூப்பிட்டேன்...”

“சொல்லுங்க ஏதாவது விஷயம் தெரியணுமா.....”, இன்ஸ்பெக்டர் கேட்க, பாரதி சென்று அந்த சாட்சியை சந்தித்து வந்ததைக் கூறினான் சாரங்கன்.

“நான் இதை எதிர்பார்த்தேன் சாரங்கன்... ஏன்னா இங்கயும் இந்த ரெண்டு, மூணு நாளா அவன் கொஞ்சம் திமிராத்தான் திரியறான்..... ஒரு நாலு நாள் முன்னாடி அவனோட மாமான்னு சொல்லிட்டு ஒரு ஆள் வந்து பார்த்தாரு... அதுக்கப்பறம்தான் அவனோட நடவடிக்கைல மாற்றம் வந்தது....”

“ஓ அவர் யார்  என்ன விவரம்ன்னு விரிவா சொல்ல முடியுமா இன்ஸ்பெக்டர்....”

“எனக்கு ஒரு பத்து நிமிஷம் கொடுங்க சாரங்கன்... நான் விசிட்டர்  புக் செக் பண்ணிட்டு சொல்லுறேன்....”,இன்ஸ்பெக்டர் போனை வைக்க அவரிடம் பேசிய விஷயத்தை பாரதியிடம் கூறினான் சாரங்கன்.

“சாரங்கன், வந்தது அந்தப் பையனோட மாமா.... அவரோட பேரு, விலாசம், போன் நம்பர் எல்லாம் தரேன்..... குறிச்சுக்கோங்க...”, அனைத்து விவரங்களையும் இன்ஸ்பெக்டர் தர அதைக் குறித்துக் கொண்டு அவருக்கு நன்றி கூறி கைப்பேசியை வைத்தான் சாரங்கன்.

“ஹ்ம்ம் இந்த மாமா மூலமா அவனுக்கு சாதகமா நடக்கறா மாதிரி ஏதோ விஷயம் கிடைச்சிருக்கு... அதை நாம கண்டுபிடிச்சுட்டா, சுலபமா நாளைக்கு கோர்ட்ல அவனை மடக்கிடலாம்....”

“ஹே அந்த மாமா இங்க வேளச்சேரிலதான் இருக்கான்.... நம்ம மணியோட சொந்தக்காரங்க யாரோ இருக்காங்க இல்லை.... அவங்ககிட்ட இவனைப் பத்தி கேக்கலாம்....”

“பக்கி தாங்கள் அடிக்கடி மங்குனி மந்திரிதான் என்பதை நிரூபிக்கிறீரே.... வேளச்சேரில ஒரே ஒரு தெருதானா இருக்கு.... இருக்கற ஆயிரம் சந்துல இவன் வீடு எந்த சந்தோ....”,சாரங்கன் பாரதியை கலாய்க்க அவனை முறைத்தபடியே மணிக்கு அழைத்தாள் பாரதி.

“தங்கச்சி உனக்கு நூறு ஆயுசு.... இப்போதான் உன்னைப் பத்தி பேசிட்டு இருந்தேன்..... கரெக்டா கூப்பிடற... என்ன விஷயம் தங்கச்சி...”

“மணி எனக்கு ஒரு தகவல் வேணும்.... நான் உனக்கு ஒரு ஆளோட பேரு, விலாசம் எல்லாம் தரேன்... அவனைப் பத்தின முழு விவரமும் வேணும்... அவன் வேளச்சேரில இருக்கான்”

“நீ அனுப்பு தங்கச்சி... நம்ம மச்சான் ஒருத்தன் அந்த ஏரியாலதான் இருக்கான்..... விவரம் கேட்டுட்டு நானே உன்னைக் கூப்பிடறேன்...”

சொல்லியபடி அடுத்த அரைமணியில் அழைத்த மணி, அந்த ஆள் திரைப்பட நடிகர் ஒருவரின் உதவியாளராக வேலை செய்வதாகவும், அதைத் தவிர அந்த நடிகனின் நிழல் உலக வேலைகளுக்கும் உதவியாக இருப்பதாகவும் கூறினான்.  

“சாரங்கா அந்த நடிகன் பெரிய லெவல்ல influence இருக்கற ஆளு.... அவன்தான் இவங்களுக்கு உதவி செய்யணும்...”

“ஹ்ம்ம் நீ சொல்றது கரெக்ட் தான் பாரதி.... நாம நேராப் போய் அந்த மாமாவைப் பார்த்து பேசினா என்ன....”

“இப்போ நீதான் மங்குனி மாதிரிப் பேசற.... நீ போய் பேசின உடனே உனக்கு எல்லா விஷயத்தையும் சொல்லிட்டுதான் அவன் மறுவேலைப் பார்ப்பான்.... இந்த விஷயத்தை வேற விதமாத்தான் அணுகணும்.... நான் ஒரு பிளான் சொல்றேன், அது சரியா வருமா பாரு...”, பாரதி அவளுடைய திட்டத்தைக் கூற, அத்திட்டத்தின்படி இரவு  பதினோரு மணி அளவில் பாரதி கைதான பையனின் வீட்டிலும், சாரங்கன் நடிகனின் வீட்டிலும் சுவரேறிக் குதித்தார்கள்.

Hello Friends.... எப்படி இருக்கீங்க.... இந்த அப்டேட்ல பாரதி பிளான் முழுவதும் execute பண்ணனும்ன்னு நினைச்சிருந்தேன்.... அண்ணா family இங்க வந்திருக்கறதால அவங்களோட ரெண்டு வாரமா செம்ம ஊர் சுத்தல்... டைமே கிடைக்கலை அப்டேட் அடிக்க.... இன்னைக்கு அவசர அவசரமா இத்தனைதான் முடிஞ்சுது.... அடுத்த தபா பாரதியோட action sequence முழுவதும் பார்க்கலாம்.... ப்ளீஸ் அட்ஜஸ்ட் மாடி...

தொடரும்

Episode 05

Episode 07

{kunena_discuss:1100} 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.