(Reading time: 19 - 38 minutes)

தொடர்கதை - சாத்திரம் பேசுகிறாய் .... கண்ணம்மா – 07 - ஜெய்

Saathiram pesugiraai kanamma

ணியிடம் பேசியபின் அவனின் சொந்தக்காரனின் கைப்பேசி எண்ணை வாங்கி, நேரடியாகத் தொடர்பு கொண்டு மேலும் பல கேள்விகளைக் கேட்டு பதில்களை வாங்கினர் சாரங்கனும், பாரதியும்... அதில் நடிகருக்கும் அந்தப் பையனின் மாமாவிற்கும் நெருங்கியத் தொடர்பு இருப்பது தெள்ளத் தெளிவாகத் தெரிந்தது.... நேரடி விசாரணையில் இறங்கினால் அவர்கள் உஷாராக வாய்ப்பிருப்பதால் நடிகரின் சட்டத்திற்கு புறம்பான செயல்களை கண்டுபிடித்து அதை வைத்து அவரை மிரட்ட திட்டமிட்டு சாரங்கனை அந்த நடிகனின் வீட்டை நோக்கி அனுப்பிவிட்டு பாரதி அந்தப் பையனின் வீட்டை நோக்கி போனாள்.....

நடிகனின் வீட்டின் மதில் சுவரை எகிறிக் குதித்த சாரங்கன் வீட்டின் உள் எப்படி செல்வது என்று சுற்றும் முற்றும் பார்த்தான்... இந்த மாதிரி பெரிய வீடுகளில் இரவில் நாய்களைக் காவலிற்கு வைக்கும் பழக்கமுள்ளதால் அவைகள் எங்கே இருக்கும் என்று பார்த்தபடியே வீட்டை சுற்றி வந்தான்.... அவனின் நல்ல நேரமா இல்லை நடிகனின் போறாத வேளையா எதுவோ ஒன்று, வாசலில் இருந்த கூர்க்கா நித்திரையில் இருக்க நாய்கள் தோட்டத்தின் இறுதியில் இருந்த அவைகளுக்கான வீட்டில் கட்டி வைக்கப்பட்டிருந்தன....

வீட்டினுள் எந்த அறையில் நுழைவது என்று மறுபடி ஒரு சுற்று வந்து பார்த்து அவன் ஏறுவதற்கு தோதாக ஒரு சன்ஷேட் இருக்க அதில் தாவி ஏறினான்.... அங்கிருந்த ஜன்னல் வழியாக  பாத்ரூம் வெண்டிலேட்டரை  அடைந்து அதைத் திறக்க சாரங்கன் முயலும்போது மிகச் சரியாக ஒரு கார் உள்ளே நுழைந்தது....  சடாரென்று மீண்டும் சன்ஷேடில் குதித்து இருளின் மறைவிற்கு வந்தான்..... அங்கிருந்தபடியே பார்க்க காரில் வந்தது வளர்ந்து வரும் இளம் நடிகை.... இந்த நேரத்தில் வர வேண்டிய அவசியம் என்ன  என்று எண்ணியபடியே பாரதிக்கு மெசேஜ் செய்ய, அடுத்த நொடி சாரங்கனை அழைத்தாள் பாரதி.

“சொல்லு சாரங்கா... எதுக்கு மெசேஜ் பண்ணின... நான் இப்போதான் இங்க வந்தேன்.... வீட்டுக்குள்ள எப்படி போறதுன்னு பார்த்துட்டு இருக்கேன்....”

“பாரதி.... ஒரு சென்சேஷனல் நியூஸ்... டிவி சீரியல்ல ஹீரோயினா நடிக்குமே  கீதான்னு ஒரு பொண்ணு.... அது இப்போ இங்க வந்து இருக்கு....”

“என்ன சொல்ற சாரங்கா.... இந்த நேரத்துல அந்தப் பொண்ணுக்கு என்ன வேலை அங்க... சரி நீ ஒண்ணு பண்ணு....  வீட்டுக்குள்ள எப்படியாச்சும் நுழைஞ்சு அவங்க என்ன பேசறாங்க அப்படின்னு பார்க்க முடியுதான்னு பாரு.... நீ உன்னோட பேனா காமெராவை எப்படியாவது அவங்க இருக்கற ரூம்க்குள்ள கொண்டு போயிட்டு ரெகார்ட் பண்ண முடியுதான்னு பாரு,....”

“சரி பாரதி நான் என்னால முடிஞ்ச எல்லா விஷயத்தையும் கலெக்ட் பண்ணிட்டு வரேன்.....”

“மணி இப்போ பன்னெண்டு... சரியா ரெண்டு மணி நேரம் எடுத்துக்கோ.... 2.30 க்கு வீட்டுக்கு வந்துடு.... அப்போதான் நாம எடுத்த விஷயங்களை வச்சு அடுத்து என்னப் பண்ணன்னு யோசிக்க அவகாசம் இருக்கும்....”

“ஓகே பாரதி.... நீயும் கவனமா இரு.... அங்க அந்தப் பையனோட அம்மா மட்டும்தான் இருக்காங்க.... இருந்தாலும் அவசரப்படாத...”

“சரி சாரங்கா ... உங்க வீட்டுல பார்க்கலாம்.....”

சாரங்கனிடம் பேசிவிட்டு கைப்பேசியை வைத்த பாரதி உள்ளே எப்படி நுழைய என்று பார்க்க.... முதல் மாடி பால்கனிக்கு அருகில் மரம் இருக்க, அதில்  ஏறி அதன் வழியே பால்கனியுள் தாவிக் குதித்தாள்.... அங்கிருந்த கதவை தன்னிடமிருந்த சிறு பேனாக்கத்தி மற்றும் ஸ்க்ரூடிரைவரால் திறக்க முயற்சிக்க, பத்து நிமிடப் போராட்டத்திற்குப்பின் ஒரு வழியாகத் திறந்தது.... அறையின் உள்நுழைய அது ஆள் இல்லாத அறையாக இருந்தது.... அந்த அறையில் இருந்த மர அலமாரிகளில் தனக்குத் தேவையான ஏதேனும் கிடைக்குமா என்று பாரதி தேட பலன் பூஜ்யம்.... அதற்கு அடுத்த அறையின் கதவு லேசாகத் திறந்திருக்க, பாரதி உள்ளே எட்டிப் பார்க்க அங்கு அந்தப் பையனின் அம்மா தூங்கிக் கொண்டிருந்தார்.... மூன்றாவது அறை கண்டிப்பாக அந்தப் பையனின் அறையாகத்தான் இருக்கும் என்ற அனுமானத்தில் பாரதி நுழைய அவளின் அனுமானம் சரியாக இருந்தது....

அங்கிருந்த அலமாரியில் புத்தகங்கள், சிடிக்கள் என்று நிறைய இருக்க, அவற்றின் அருகில் சென்று எடுத்துப் பார்க்க, மேலாக ஆங்கில நாவல்கள் இருக்க அதன் கீழ் இருந்தது எல்லாமே வேறு மாதிரியான புத்தகங்கள்.... அதேப்போல சிடிக்களும் வெளியிலிருக்கும் அட்டையில்  புகழ்பெற்ற படங்களின்  பெயர் இருக்க அங்கிருந்த VCD ப்ளேயரில் அதைப் பொருத்திப் பார்க்க, வந்த  படம்  மிக மோசமான மூன்றாந்தர  படம்.... பாரதிக்கு கொதித்துக் கொண்டு வந்தது....

மேலும் அந்த அலமாரியை நோண்ட ஒரு டைரி கிடைத்தது... அதில் சில கைப்பேசி எண்கள், பெயர்கள் மற்றும் தேதி என்று இருக்க முதலில் பாரதிக்குப் புரியவில்லை.... சரி எதற்கும் இருக்கட்டும் என்று அந்த விவரங்களை  தன்னுடைய கைப்பேசியில் புகைப்படம் எடுத்துக்கொண்டாள்.....

அடுத்ததாக அங்கிருந்த கணினியை இயக்க ஆரம்பித்தாள்..... கணினியின் கடவு சொல் தெரியாமல் அதை திறக்க முடியவில்லை.... அவளின் தோழிக்கு கைப்பேசி செய்து, அவளின் உதவியுடன் கணினியை ஆன் செய்து அதிலிருந்த ஃபைல்களை ஆராய பாரதிக்கு தலை சுற்றிக் கொண்டு வந்தது.... அதில் இருந்த காணொளிகள் அத்தனையும் மிக மோசமாக இருந்தன.... பெண்கள் குளிக்கும்போது, ஆடை மாற்றும்போது என்று எடுத்திருந்தது....  நிறைய காணொளிகளில் குழந்தைகள்தான் இருந்தார்கள்.... அதுவும் அக்குழந்தைகளை மிக மோசமான கோணத்தில் அவர்கள் விளையாடும் போது எடுத்திருந்தது.... குழந்தைகள் காணொளிகளில் மார்ஃபிங் வேறு....

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.