(Reading time: 19 - 38 minutes)

திறந்த  மாடத்தை பார்த்த சாரங்கனுக்கு மிக வியப்பாக இருந்தது.... ஒன்றிரண்டு வெள்ளிப் பொருட்கள் இருந்தாலும் பெரிய அளவில் விலை மதிப்புள்ள பொருட்கள் இல்லை.... பின் எதற்காக இத்தனை பாதுக்காப்பு செய்ய வேண்டும்... இந்த இடத்தை நன்றாக ஆராய வேண்டும் என்று அங்கிருந்த கடவுள் படங்கள் அனைத்தையும் விலக்கிப்பார்க்க முதலில் ஒன்றும் பிடிபடவில்லை.... அங்கிருந்த வெங்கடாசலபதி படம் சிறிது வித்தியாசமான கோணத்தில் மாட்டப்பட்டிருக்க அதை எடுத்துப் பார்க்க ஒன்றும் பிடிபடவில்லை.... அந்த இடம் மற்ற இடங்களைப் போல் சாதாரணமாகவே இருந்தது.... அவன் திரும்ப அவனின் கை அருகில் இருந்த முருகர் சிலை மேல் பட, வெங்கடாசலபதி படத்திற்கு பின்னால் இருந்த வெற்றிடம் திறந்து ஒரு சிறிய பெட்டக அறை போல் காட்சி அளித்தது.

நடிகனுக்கு கோவிந்தா என்று பாடியபடியே சாரங்கன் அந்த இடத்திலிருந்த பொருட்களை ஆராய ஆரம்பித்தான்.... தங்க. வைர நகைகள், கட்டுகட்டாக பணம் என்று பத்மநாப ஸ்வாமி கோவில் பெட்டகத்தில் கிடைத்தது போல் இருந்தது... அனைத்தையும் தன் கைப்பேசியில் பதிவு செய்து கொண்ட சாரங்கன் அங்கிருந்த கோப்புகளை ஆராய்ந்தான்... நடிகன் செய்து வந்த அத்தனை நிழல் வேலைகளின் கோப்புகளும் அங்கு இருந்தன.... அனைத்தையும் ஸ்கேன் எடுக்க நேரமில்லாத காரணத்தால் மிக முக்கியமான இரண்டு கோப்புகளை மட்டும் எடுத்துக்கொண்டு மற்றதை அப்படியே எடுத்த இடத்தில் வைத்தான்.... மீண்டும் முருகர் சிலையைத் தொட அந்த இடம் மூடிக்கொண்டது.... பின்னர் அறையின் கதவை மூடி மாடிக்கு சென்று கதவின் அடியிலிருந்து பேனாவை எடுத்துக்கொண்டு வந்த வழியே வெளியில் செல்ல முடியாத காரணத்தால் பின் பக்க வழியாக வெளியில் சென்றான்...

நடிகனின் வீட்டை விட்டு வெளியில் வந்து அடுத்த தெருவிலிருந்த வண்டியை சாரங்கன் கிளப்பும்போது சரியாக பாரதி அந்தப் பையன் வீட்டிலிருந்து கிளம்புவதாக செய்தி  வந்தது... அதைப் பார்த்துவிட்டு அவளை அழைத்தான் சாரங்கன்....

“சொல்லு சாரங்கா......”

“பக்கி நாம இன்னைக்கு நரி முகத்துலதான் முழிச்சு இருக்கோம்ன்னு நினைக்கிறேன்.... செம்ம வேட்டை எனக்கு இங்க அந்தாள் வீட்டுல.....”

“என்னடா சொல்ற சப்பாணி.... உனக்குமா... இங்கயும் அப்படித்தான்.... அவனை தூக்குல ஏத்தும் அளவுக்கு விஷயம் கிடைச்சிருக்கு.....”

“ஓ சூப்பர் பக்கி.... நாம அப்போ நேரா மதி சார் வீட்டுக்குப் போய்டலாம்.... அவர்ட்ட கேட்டா அடுத்து நாம எப்படி ப்ரோசீட் பண்ணலாம்ன்னு கரெக்ட்டா சொல்லுவாரு..... அப்படியே சீனியருக்கும் ஃபோன் பண்ணி வர சொல்றேன்....”

“நடு ராத்திரி ரெண்டு மணி ஆகுது சப்பாணி.... இப்போ போய் அவரைத் தொந்தரவு பண்ண வேணாம்.... நாளைக்கு காலைல ஒரு அஞ்சு மணிக்குப் போவோம்.... சீனியருக்கும் அப்போ சொன்னாப் போதும்....”

“ஹ்ம்ம் நீ சொல்றதும் சரிதான்....  கேஸ் ஹியரிங் எப்படியும் பன்னெண்டு மணிக்குத்தானே..... நமக்கு நேரம் இருக்கு.... சரி வீட்டுக்கு வா.... எனக்கு கிடைச்ச விஷயத்தை எல்லாம் சொல்றேன்...”, என்று கூறி அலைபேசியை வைத்த சாரங்கன், அடுத்த நாள் விடியலில் நடக்கப்போகும் விஷயங்களை நினைத்து மிக உற்சாகமாக வண்டியைக் கிளப்பினான்.

ருவரும் வீட்டை அடைந்து தாங்கள் கொண்டு வந்த தகவல்களை பரஸ்பரம் பகிர்ந்து, அனைத்தையும் நகல் எடுத்து தங்கள் கணினியில் சேமித்து முடிக்க காலை நான்கு மணி ஆனது...

“ஒரு ஒன் ஹவர் தூங்கலாம் சப்பாணி.... இல்லைனா நாளைக்கு காலைல நாம கோர்ட்ல போய் தூங்கிடுவோம்....”

“பக்கி நாம இன்னும் அந்த நடிகன் நரேஷ் வீட்டுல எடுத்த வீடியோ பார்க்கவே இல்லையே....”

“எனக்குத் தெம்பே இல்லை சாரங்கா... எப்படியும் காலைல சீனியருக்கும், மதி சார்க்கும் போட்டுக் காட்டப் போறோம்... அப்போவே பார்த்துக்கலாமே.... பலான படம் பார்க்க அவ்ளோ ஆவலா இருக்க நீ... இரு இரு அம்மாக்கிட்ட சொல்றேன்....”

“ச்சே என்னப் பேச்சு பேசற நீ... Bad girl.... இப்படி பேசறதுக்கு உம்மாச்சி கண்ணைக் குத்தப் போகுது பாரு.... ஏதோ அந்தப் பொண்ணு அழுதா மாதிரி இருந்துதே அதுதான் என்னன்னு பார்க்கலாம்ன்னு நினைச்சேன்.... என்னைப் போய் எப்படி சொல்லிட்ட”,வராத கண்ணீரைத் துடைத்தான்.....

“ரொம்ப சுமார் சப்பாணி உங்களோட ஆக்டிங்.... நீங்க முதல் ரவுண்டு கூட தேற மாட்டீங்க.... ஸோ உங்க பெர்ஃபார்மன்ஸ ஸ்டாப் பண்ணிட்டு படுங்க....”,பாரதி கலாய்க்க அவளை முறைத்தபடியே படுத்தான் சாரங்கன்.

றுநாள் காலையில் சந்திரனுக்கும், மதிக்கும் செய்தி அனுப்பிவிட்டு அனைத்து கோப்புகளையும் எடுத்துக்கொண்டு இருவரும் மதியின் வீடு சென்றனர்....

“ஹலோ மதி சார்... சம்சார சாகரத்துல தொபுக்கடீர்ன்னு குதிச்சீங்களே.... எப்படி இருக்கீங்க... நீஞ்சி கரையேறிடுவீங்களா இல்லை அப்படியே மூழ்கிட்டீங்களா...”

“ஏண்டா டேய்.... கார்த்தாலயே எனக்கு சங்கூதற.... தேவிம்மா இவன் இப்படித்தான் காமெடி அப்படிங்கற பேருல கடிப்பான்னு உனக்குத் தெரியுமே.... இதை எல்லாம் நீ பெருசா எடுத்தாகாத செல்லம்.... இவன் பேச்சு நான் காய் விட்டு ரெண்டு நிமிஷம் ஆச்சு.....”,பின்னால் நின்றிருந்த தேவியைப் பார்க்காமல் பேசிய சாரங்கனுக்கு பதில் கூறினான் மதி.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.