(Reading time: 19 - 38 minutes)

ல்லை மதி சார்... அவனுக்கு சாதகமான தீர்ப்புதான் வரும்.... வரணும்... அவன் வெளில வரட்டும்... ஏண்டா வெளில வந்தோம்ன்னு கதறனும் அவன்.... செய்யப்போறது சட்டத்துக்கு புறம்பான செயல் அப்படினாலும் மனசாட்சிப்படி அதுதான் சரியான  தண்டனை மதி சார்... அந்த குழந்தைங்க படத்தைப் பார்க்க பார்க்க அப்படி எரியுது உள்ள எனக்கு.... இவனை எல்லாம் உள்ள வச்சு அரசாங்க செலவுல சோறு போட்டு உடம்பை வளர்க்கணுமா... வெளிய வரட்டும் இருக்கு அவனுக்கு.....”

பாரதியின் வாக்குப்படியே தீர்ப்பு அந்த பையனுக்கு சாதகமாக அமைந்தது..... சாட்சி தடாலடியாக அன்று கண்ணாடி போடாத காரணத்தால், தான் பார்த்தது இவன்தானா என்று சரியாகத் தெரியவில்லை என்று கூறி விட்டான்.  சரியான சாட்சிகள் இல்லாத காரணத்தால் அவன் விடுதலை செய்யப்பட மிக சந்தோஷமாக வீட்டிற்கு சென்றான்... அடுத்த இரண்டாவது நாள்  நள்ளிரவு நேரத்தில் அவனைக் கடத்திய பாரதியும், சாரங்கனும்  ஊருக்கு ஒதுக்குப்புறத்தில்  இருந்த மயானத்திற்கு இழுத்து சென்றனர்...

“யாரு யாரு நீங்க... எதுக்காக என்னை இங்க கூட்டிட்டு வந்துருக்கீங்க.....”, கடத்தும்போதே கண்கள் கட்டப்பட்டு இருந்ததால் அவனால் கடத்தியவர்களைப் பார்க்க முடியவில்லை...

அவன் பேச பேச அவன் பின்னால் நாய் ஊளை இடுவது போல, பலர் சிரிப்பது மற்றும் அழுவது போல் மாற்றி மாற்றி ஒலிகள் கேட்க ஆரம்பிக்க பயப்பட ஆரம்பித்தான் அவன்.

“ஹலோ என்ன விளையாடறீங்களா.... நான் யாருன்னு தெரியலை உங்களுக்கு.... மரியாதையா என்னை வீட்டுல கொண்டுபோய் விட்டுடுங்க....”, அவன் கூற அமானுஷ்யக் குரல் ஒன்று கேட்டது.

“ஏண்டா நாயே பண்ற அத்தனை அயோக்கியதனத்தையும் பண்ணிட்டு நீ பாட்டுக்கு கமுக்கமா வந்து படுத்துப்பியா.... உனக்கு சங்கூத ஸ்பெஷல் பெர்மிஷன் எம தர்ம ராஜா கொடுத்து எங்களை அனுப்பி வச்சிருக்கார்.... கும்பிபாகம், அக்னிகுண்டம் இல்லை அந்தகுபம் எந்த method உனக்கு  ஓகேன்னு  சொல்லு.... அதையே செய்துடலாம்”

“ஏய் யாரு யாரு நீ.... எதுக்கு ஏதோ மாதிரி ஒரு குரல்ல பேசற....”

“இவனுக்கு சல்மாலி தான் கரெக்ட்டு மச்சி... இந்த மாதிரி ஆளுங்களுக்கு எல்லாம் கருட புராணத்துல அந்த தண்டனைதான் போட்டிருக்கு...”,என்று கூறியபடியே சாரங்கன் தன் கையில் இருந்த சாட்டையால் ஒரு அடி அடித்தான்.... வலியில் துடித்து நிமிர்ந்தான் அந்தப்பையன்.....

“ஐயோ வலிக்குதே... ப்ளீஸ் ப்ளீஸ் என்னை விட்டுடுங்க... உங்களுக்கு எத்தனை பணம் வேணும்னாலும் கொடுக்கறேன்.... உங்களைப் பத்தி கம்ப்ளைன்ட் கூட கொடுக்கலை.... தயவு செய்து விட்டுடுங்க”

“வலிக்குதா .... ஒரு அடிக்கே அலறினா எப்படி இன்னும் எத்தனை இருக்கு.... வித விதமா உன்னை வச்சு செய்யற ஐடியால இல்லை இருக்கோம்”, என்று கூறிய பாரதி தன் கையில் இருந்த முள் போன்ற சாட்டையால் அந்தப் பையனின் மர்மப் பிரதேசத்தில் ஒரு அடி அடித்தாள்.  அதில் அவன் சுருண்டு விழ மாற்றி மாற்றி சாரங்கனும், பாரதியும் அவனை பின்னி எடுத்து விட்டார்கள்... அவன் தப்பித்து ஓடப் பார்த்து தடுக்கி கீழே விழ அங்கிருந்த கல்லில் மிகச்சரியாக அவனின் இடுப்புப் பாகம் நச்சென்று மோதியது.... அதில் அவன் மயங்கி விழுந்தான்...

அவனை இழுத்துக்கொண்டு சென்று அவனின் வீட்டின் வாசல்படியில் போட்டுவிட்டு சந்தோஷமாக பாரதியும், சாரங்கனும் வீட்டிற்கு சென்று நிம்மதியாகத் தூங்கினார்கள்.  

றுநாள் அவனை கண்டு அலறிய அவனின் தாயார் மருத்துவமனையில் சேர்க்க, மருத்துவர்களின் கண்காணிப்பில் ஆறு மாதம் இருந்தபின்னும் கழுத்திற்கு கீழே ஒரு விதமான அசைவும் இல்லாத நிலைக்குத் தள்ளப்பட்டான்.... பாரதி அவன் கழுத்தில் மிதித்ததால் அவனின் குரலும் போய்விட்டது.... உயிர் இருந்தும் பிணமான நிலை.... அவனால் யாரையும் அடையாளம் காட்ட முடியாத காரணத்தால் போலிசாலும் எதையும் கண்டு பிடிக்க முடியாமல் போனது.

ஹலோ friends, தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள் எல்லாருக்கும்... மிக அவசரமாக அடித்த அப்டேட்.... so spelling errors இருந்தா ப்ளீஸ் மன்னிச்சு விட்டுடுங்க.... நிறைய பேருக்கு அந்த பையனுக்கு கொடுத்த தண்டனை ஒத்துக்கொள்ள முடியாம இருக்கலாம்... நிஜத்தில் நடத்த முடியாத விஷயத்தை கதையிலாவது செய்யலாமே என்ற ஆதங்கத்தில் எழுதியது... இந்த அப்டேட்டிற்கு நெகடிவ் கமெண்ட்ஸ் இருந்தாலும் பரவாயில்லை வந்து சொல்லிட்டு போங்க.... நன்றி

தொடரும்

Episode 06

Episode 08

{kunena_discuss:1100} 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.