(Reading time: 11 - 21 minutes)

தொடர்கதை - சாத்திரம் பேசுகிறாய் .... கண்ணம்மா – 08 - ஜெய்

Saathiram pesugiraai kanamma

கேஸ் முடிந்து மூன்று  நாட்கள் கழித்து சாவகாசமாக சந்திரனின் அறைக்குள் நுழைந்த சாரங்கனையும், பாரதியையும் முறைத்தபடியே  அமர சொன்னார் . அவர்களும் எதுவுமே நடக்காதது போல வந்து அமர்ந்தனர்.

“எங்க ரெண்டு நாளா ஆளையே காணும்.... ஃபோன் பண்ணினாலும் எடுக்க முடியாத அளவு அப்படி என்ன வேலை ரெண்டு பேருக்கும்....”

“இல்லை சீனியர்... அந்தக் கேஸ்க்காக ராவா பகலா ரொம்ப உழைச்சோமா.... ஸோ செம்ம டயர்ட்.... அதுதான் லீவ் எடுத்துட்டோம்.....”

“எனக்கு ஒரு வயசா இருக்கும்போதே எங்க மாமா மடியில வச்சுக் காது குத்திட்டாங்க... அதனால நீ வேற புதுசா குத்தாம உண்மைய சொல்லு....”

“அது என்ன அப்படி ஒரு பெருந்தனம் உங்க வீட்டாளுங்களுக்கு ... எங்களை மாதிரி ரெண்டு பேர்  ஜூனியரா சேர்ந்து உங்களுக்கு காது குத்துவோம்ன்னு முன் கூட்டியே  தெரிஞ்சுக்காம அவங்களை யாரு காது குத்த சொன்னது... உங்க வீட்டு பெரியவங்க கிட்ட அவங்க பண்ணினது சரியில்லைன்னு சொல்லி வைங்க.....”

“டேய் சாரங்கா.... எனக்கு கொலைவெறியைக் கிளப்பாத... அந்தப் பையனுக்கு எப்படிடா  அப்படி அடி பட்டுச்சு.....”

“என்னது பையனுக்கு அடி பட்டுச்சா.... என்ன சொல்றீங்க சீனியர்.... யார் அந்தப் பையன்... வாடா சாரங்கா நாம போய் பார்த்து ஆறுதல் சொல்லிட்டு வரலாம்....   சீனியர் அட்ரஸ் சொல்லுங்க”

“நடிக்காத பாரதி.... மூணு நாள் முன்னாடி கேஸ் நடந்துச்சே... அதுல விடுதலை ஆன பையன்.... மரண அடியாம்... பேச்சு மூச்சில்லாம இப்போ ICU-ல அட்மிட் பண்ணி இருக்காங்க....”

“அவன் செஞ்ச வேலைக்கு அந்த ஆண்டவனே கூலியைக் கொடுத்திருப்பான் சீனியர்.... எத்தனை பேர் வயித்தெரிச்சலை கொட்டிட்டு இருப்பான்... அதான் அந்தக் கடவுள் இப்படி தண்டனைக் கொடுத்திருக்கார்...”

“பொய் சொல்றதை நிறுத்து சாரங்கா.... நீங்க ரெண்டு பேரும்தான் இந்த வேலையைப் பண்ணி இருக்கீங்கன்னு எனக்குத் தெரியும்.... எதுக்காக இப்படி பண்ணினீங்க....”

“ஆமாம் சீனியர் நாங்கதான் பண்ணினோம்.... நியாயப்படி கோர்ட் இந்த தண்டனையை கொடுத்து இருக்கணும்..... அவங்கதான் சட்டம், சாட்சி அப்படின்னு சொல்லி அவனை விடுதலை பண்ணிட்டாங்களே....”

“பாரதி மறுபடி மறுபடி என்னை சொல்ல வைக்காத.... நீ ஒரு வக்கீல்... நீயே சட்டத்தை மதிக்கலைனா எப்படி... நம்ம நாட்டு சட்டம் பல குற்றவாளிகள் தப்பிச்சாலும் ஒரு நிரபராதிக்கூட தண்டிக்கப்படக்கூடாதுன்னுதான் சொல்லுது.... அதுக்கேத்தா மாதிரிதான் சட்டங்களும் இருக்கு.... அதுல இருக்கற ஓட்டையைப் பயன்படுத்தி ஒருத்தன் வெளிய வந்துட்டா உடனே நீங்க நீதிபதியா மாறி தண்டனை தருவீங்களா... மேல்முறையீடுன்னு ஒண்ணு எதுக்கு இருக்கு... அதைப் பண்ணி அவனுக்கு தண்டனை வாங்கித் தந்திருக்கலாமே....”

“நீங்க சொல்றது ரொம்ப கரெக்ட் சீனியர்.... அப்படி தப்பிக்கும் குற்றவாளிகள் வெளிய வந்து திருந்தி மகான்களா வாழறாங்களா.... இல்லை மேல்முறையீடு செய்யும் எல்லா வழக்கும் நல்ல முறைல தீர்ப்பு வருதா.... கண்டிப்பா இல்லைன்னுதான் சொல்லணும்.... இதுக்கு எத்தனயோ வழக்கு உதாரணங்களை சொல்லலாமே.... ஏன் இப்போ சல்மான்கான் குற்றவாளின்னு இந்தியா முழுக்க எல்லாருக்கும் தெரியும்...  ஆனா வழக்கை நடத்தின வக்கீலுக்கும், தீர்ப்பு கொடுத்த நீதிபதிக்கும் மட்டும் தெரியலை... அது எப்படி...”

“ஏதோ ஒண்ணு, ரெண்டு கேஸ் வச்சுட்டு ஒட்டுமொத்தமா அப்படித்தான்னு சொல்லாத பாரதி....”

“சரி சீனியர் நீங்க சொல்ற மாதிரி வச்சுக்கலாம்.... நம்ம நாட்டு நீதி மன்றங்கள்ல நடக்கற வழக்குகள்ள  கண்டிப்பா பெரிய ஆளுங்களோட தலையீடு இல்லைன்னு உங்களால  உறுதியா சொல்ல முடியுமா.... கண்டிப்பா முடியாது .... இன்னும் சொல்லப்போனா நீங்க சொல்ற ஒண்ணு ரெண்டு கேஸ்லதான் உண்மையான தீர்ப்பு வருது.....”

“இப்போ நீ என்ன சொல்ற சாரங்கா.... அவங்க தப்பு பண்றாங்க அதுனால நாங்களும் பன்றோம்ன்னு சொல்றயா...”

“இல்லை சீனியர்... அவங்களை நிறுத்த சொல்லுங்க... நாங்களும் நிறுத்தறோம்ன்னு சொல்றோம்.....”

“டேய் விளையாடதடா.... மைனர்  பையன்டா... பதினேழு வயசு..... இன்னும் எத்தனை காலம் உயிரோட இருக்கப்போறானோ... அது வரைக்கும் நரகம்தான்,,,,,”

“அந்தப் பையன் பண்ணினதும் மைனர் பண்ற வேலைதான் சீனியர்.... அந்த வீடியோ, ஃபோட்டோ எல்லாம் பார்த்த பிறகும் எப்படி உங்களால அவனைப் பார்த்து பரிதாபப்பட முடியுது சீனியர்.....”

“நீங்க என்ன சொன்னாலும், என்னால ஒத்துக்க முடியலை பாரதி... நாம சுப்ரீம்கோர்ட்ல அப்பீல் பண்ணி இருக்கலாம்.....”

“தீர்ப்புல ஏதானும் மாற்றம் வரும்ன்னு நினைக்கறீங்களா....”

“முயற்சியே  பண்ணாம பேசாத பாரதி....”

“நாம கண்டுபிடிச்ச விஷயங்களை வச்சு அவனுக்கு கண்டிப்பா தண்டனை வாங்கிக் கொடுத்திருக்கலாம்.... ஆனா அதனால என்ன பிரயோஜனம்.... இப்போ இந்த சின்ன குழந்தையை பற்றி பேசறவங்க நாளைக்கு அந்த வீடியோ, போட்டோல இருக்கறவங்களையும் பேசுவாங்க....”, பாரதி பேச அதில் உண்மை இருப்பதால் சந்திரனால் எதுவும் சொல்ல முடியவில்லை.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.