(Reading time: 11 - 21 minutes)

சீனியர் நம்ம நாட்டுல பெண்களுக்கு ஒரு சாபம் இருக்கு.... அது என்னன்னா எது நடந்தாலும் அதுக்கு காரணம் பெண்கள்தான்..... ஒரு இளம்பெண் கற்பழிக்கப்பட்டா  அதுக்கு அந்த ஆணையா குத்தம் சொல்றாங்க இல்லையே, மீடியாவும், மகளிர் அமைப்புகளும் வரிஞ்சு கட்டிட்டு அந்தப் பொண்ணு மேலதான பழி போடுது.... அவ போட்டுட்டு இருக்கற டிரெஸ்தான் காரணம்.... அது தூண்டி விடுறமாதிரி இருக்கறதாலதான் ஆண்களுக்கு தப்பு செய்ய தோணுது .... அப்படி இல்லைன்னா அவ வீட்டுக்குள்ளயே இருந்து இருந்தா இப்படி நடந்து இருக்குமா, அவ எதுக்காக வீட்டை விட்டு வெளிய வந்தா இப்படின்னுதான் பேசுவாங்க.... இளம்பெண்ணைக் கூட விட்டுடுங்க.... இப்போ கொஞ்ச நாள் முன்னாடி ஒரு சின்னக்குழந்தையை ஒரு பையன் கற்பழிச்சு கொலை பண்ணினானே... அப்போ இந்த ஜனங்க என்ன பேசினாங்க... அந்தப் பையனை கண்டிக்கலை.... அந்தக் குழந்தையோட அம்மா ஒழுங்கா பார்த்துக்கலைன்னுதான் சொன்னாங்க.... ஒரு பிஞ்சுக்குழந்தையை காமக் கண்ணோட பார்த்த கயவனை எல்லாம் கேசே இல்லாம போட்டுத் தள்ளணும் சீனியர்...”,பாரதி சொல்ல சாரங்கன் அவளை ஆறுதல் படுத்தினான்.

“இந்தக்கால குழந்தைகளுக்கு நாம பரதநாட்டியமும், பாட்டும் சொல்லித்தர்றதுக்கு பதிலா கண்டிப்பா ஏதானும் ஒரு தற்காப்புக்கலையை கத்துக்கொடுக்கணும்...”

“ரொம்ப சரி பாரதி.... சீனியர் நாங்க பண்ணினது சட்டப்படி தப்புதான்.... ஆனால் நீங்க சொன்னா மாதிரி மேல்முறையீடு போறோம்ன்னே வச்சுக்கலாம்.... அப்போ நாம நமக்கு கிடைச்ச ஆதாரத்தை எல்லாம் சமர்ப்பிக்கணும்.... அவன் எடுத்து இருக்கறது எல்லாம் அந்தப் பெண்களுக்கோ, இல்லை குழந்தைகளுக்கோ தெரியாமதான்... அப்படி இருக்கும்போது இந்தக் காணொளிகள் வெளிய வரும்போது அதுல இருக்கறவங்களுக்கு வரும்  பாதிப்புகள் எத்தனை.... இப்போ இருக்கற செய்தி ஊடகங்கள் இந்த மாதிரி நியூஸ் வந்தா அதுக்கு அப்படியே கதை, திரைக்கதை எழுதி டெவலப்  பண்ணிடுவாங்க... அதுவும் முழு காணொளிகளோட,,,, இப்போல்லாம் வரும் நியூஸ் ஒருத்தரோட படுக்கை அறையைக் கூட விடறதில்லை... அதுவும் அதை செய்தியா மட்டும் இல்லாம விஷுவலா வேற காட்டி கேவலப்படுத்தறாங்க.... அப்பறம் இந்த சமூகம்.... அது எப்படி அவங்களுக்கு தெரியாம எடுக்க முடியும்... அந்தப் பெண்களுக்கும், இந்தப் பையனுக்கும் என்ன லின்க்கோ, இப்படித்தான் பேசும்... இவங்க பேசறதெல்லாம் கேட்கும்போது அந்தப்பெங்களுக்கு எத்தனை மனவருத்தம்... தப்பே செய்யாம அவங்க பேச்சு கேட்கணும்... இதெல்லாம் வேண்டாம் அப்படின்னுதான் நாங்க எங்க வழில அவனை கவனிச்சோம்.....”

“நீங்க பண்ணினதை எத்தனை விதமா பேசி நியாயப்படுத்தினாலும் என்னால இதை ஒத்துக்க முடியலை.... இனி நாம வாதாடப்போற எந்த கேஸா இருந்தாலும் சரி சட்டப்படிதான் அதை அணுகணும்.... ரெண்டு பேரும் இனி ஒரு முறை உங்க கைல சட்டத்தை எடுக்கக்கூடாது....”

“சீனியர் கண்டிப்பா தேவையில்லாம நாங்க யாரையும் அடிக்க மாட்டோம்.... அதுக்கு உறுதி கொடுக்கறோம்....”

“ஏண்டா டேய் இத்தனை பேசறேன்... அப்பறமும் இப்படி பேசினா எப்படி சாரங்கா....”

“டென்ஷன் ஆகாதீங்க சீனியர்.... நாமல்லாம் வேலு நாயக்கர் மாதிரி... நாலு பேருக்கு நல்லது செய்யணும்ன்னா எதுவுமே தப்பே இல்லைன்னு சொல்லிட்டு போயிட்டே இருக்கணும்.....”

“கடைசில வேலு நாயக்கர் நிலைமை எப்படி ஆச்சுன்னு பார்த்த இல்லை....”

“ஆமாம் அவர் அடிச்ச சரக்குக்கு  வயசான காலத்துல அவரே போய் சேர்ந்திருப்பார்... அப்போ போய் அவரை சுட்டு ஒரு குண்டை  வேஸ்ட் பண்ணிட்டாங்க.....”

“அடங்கவே மாட்டீங்களாடா ரெண்டு பேரும்... சத்தியமா நாயகன் கிளைமாக்ஸ்க்கு இப்படி ஒரு அர்த்தம் யாரும் சொல்லி இருக்க மாட்டாங்க..... மொதல்ல வீட்டுல சொல்லி உங்க ரெண்டு பேருக்கும் கல்யாணத்துக்கு பார்க்க சொல்லணும்... அட்லீஸ்ட் வர்றவங்களாவது  உங்களை அடக்கறாங்களான்னு பார்க்கலாம்....”

“ஆ....  சீனியர் உங்களுக்கு புண்ணியமா போகும்... மொதல்ல அதை செய்ங்க.... நானும் நாலு இடத்துக்கு போய் பஜ்ஜி, சொஜ்ஜியை மொக்கிட்டு அப்படியே கண்ணுக்கு குளிர்ச்சியா பொண்ணை பார்த்துட்டு வருவேன்....”

“சப்பாணி உனக்கு இந்த மாதிரி ஆசையெல்லாம் வேற இருக்குதா..... சொல்லவே இல்லை.... உனக்கெல்லாம் ஒரு மயிலு மாட்டறதே குஷ்டம்.... இதுல வீடு வீடாப் போய் சாப்பிடப் போறியா.... பேராசை பெருநஷ்டம் கேள்விப்பட்டதில்லை....”

“அவனை விடு பாரதி.... உனக்கு எப்படி மாப்பிள்ளை வேணும்.....”

“ஹாஹாஹா சீனியர் டூ லேட்..... எனக்கு ஆல்ரெடி மணி அடிச்சு, பல்பு எறிஞ்சாச்சு....”,பாரதி கூற, ‘என்னது.....’,என்று அதிர்ச்சியுடன் இருவரும் அவளைப் பார்த்தார்கள்....

“எதுக்கு எதுக்கு.... இப்போ இத்தனை ஷாக் ரியாக்ஷன்....   எத்தனை பேர் காலேஜ் படிக்கும்போது எனக்கு லெட்டர் கொடுத்திருக்காங்க....என்னோட பெர்ஸனாலிட்டி தெரியாம பேசாதீங்க ...”

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.