(Reading time: 11 - 21 minutes)

டியேய் அதெல்லாம் உன் தோழிகளுக்கு கொடுக்க சொல்லி கொடுத்த லெட்டர்ஸ்... உன்னை பத்தி தெரிஞ்ச பிறகும் எவனாச்சும் உனக்கு லெட்டர் கொடுப்பான்....  அதை விடு,   உன்கிட்ட மாட்டின அந்த அப்பிராணி யாரு....”

“அவரைப் பத்தி சாதாரணமா நினைக்காத சப்பாணி.... காலேஜ் லெக்சரர்.... என்னா கலரு..... என்னா ஃபிகரு.....”

“ஆ தாங்கலையே... இதெல்லாம் அவர் சொல்ல வேண்டிய டயலாக் பக்கி.... நீ சொல்ற.... இந்த லவ்ஸ் வந்தா கட்டவிரலால கிணறு தோண்டிட்டே வெக்கமெல்லாம் படுவாங்களே பக்கி... அந்த மாதிரி ஒரு அறிகுறியும் உன்கிட்ட இல்லையே... அதுவும் இல்லாம சாப்பிடப் பிடிக்காது, தூக்கம் வராது அப்படினெல்லாம் சொல்வாங்க.... நீ நேத்துகூட அம்மா பண்ணின பிரியாணியை மூணு வாட்டி போட்டு முக்கு முக்குன்னு முக்கிட்டு, நல்லாக் குப்புறப்படுத்து தூங்க வேற செஞ்ச.....”

“லவ் என்ன வியாதியா.... பசி. தூக்கம்  இல்லாம இருக்க..... அது ஒரு ஃபீல் சப்பாணி.... அனுபவிச்சாதான் தெரியும்.... ஆராய்ஞ்சு பார்த்தா தெரியாது.....”

“ஆவ்வ்வ்வ்..... மம்மி மிடில.... இருந்தாலும் எனக்கு சந்தேகமா இருக்கு,,,, மெய்யாலுமே வாத்தியாரு உன்கிட்ட லவ்ஸை சொன்னாரா....”

“அவர் எங்க சொன்னாருன்னு சொன்னேன்... நான்தானே எனக்கு பல்பு எரிஞ்சு மணி அடிச்சுதுன்னு சொன்னேன்....”

“பாரதி குழப்பாம சொல்லு... விளையாட்டுக்கு சொல்றியா இல்லை உண்மையாவே சொல்றயா....”

“இதோ இங்க இருக்கற சப்பாணி மேல சத்தியமா சொல்றேன் சீனியர்.....”

பாரதி சாரங்கன் தலையில் அடித்து சத்தியம் செய்ய வர அவன் அவளிடமிருந்து தப்பித்து ஓடினான்.

“ஏய் நிறுத்து.... இப்போதான் சைட் அடிக்கவே ஆரம்பிச்சு இருக்கேன்.... இன்னும் என் வாழ்க்கைல எத்தனை நல்லது நடக்கணும்..... இப்படி என் தலைல அடிச்சு என்னை ஒரேடியா போட்டுத் தள்ளப் பார்க்கறியே....”

“டேய் அடங்கி உக்காருங்கடா ரெண்டு பேரும்... பாரதி யார் அந்தப் பையன், எங்கப் பார்த்த அப்படின்னு விவரமா சொல்லு....”, சந்திரன் கேட்க பாரதியும் சுகுணாவை, கோவிலில் பார்த்ததில் ஆரம்பித்து அனைத்தையும் கூறினாள்.

“பக்கி நீ உன் லவ்ஸ்க்கு இப்போவே சமாதி கட்டிடு.... நீ ரவுண்டு கட்டி அடிச்சதை பார்த்த பிறகும் அந்த அம்மா எப்படி தன் மகனோட வாழ்க்கைல விளையாடுவாங்க.... சான்ஸே இல்லை....”, இவர்கள் பேசிக்கொண்டிருக்கும்போது பாரதியின் செல் அடித்தது.

“சொல்லுங்க ஆன்ட்டி.... எப்படி இருக்கீங்க.... உங்க கால் பரவாயில்லையா....”, குயிலினும் இனிய குரலில் பாரதி பேச, சாரங்கன் அவள் குழைவான குரலைக் கேட்ட அதிர்ச்சியில் நெஞ்சைப் பிடித்துக்கொண்டு உட்கார்ந்து விட்டான்.....

“பாரதி பிஸியா இருக்கியாம்மா... பேசலாமா...”

“ஒண்ணும் பிரச்சனை இல்லை.... சொல்லுங்க ஆன்ட்டி....”

“இல்லை அப்பறம் வீட்டுக்கு வரேன்னு சொன்ன.... ஆளையும் காணும், போன்கூட பண்ணலையேன்னுதான் கூப்பிட்டேன்....”

“ஓ இல்லை ஆன்ட்டி.... நீங்க ரெஸ்ட்ல இருக்கணும்,,,, நான் வந்தா உங்களுக்குத் தொந்தரவா இருக்கும் அப்படின்னுதான் வரலை ஆன்ட்டி....”

“ச்சே ச்சே நீ வந்தா எனக்கு சந்தோஷம்தான்ம்மா.... இன்னைக்கு நீ ஃப்ரீன்னா வீட்டுக்கு வாயேன்.... சாயங்காலமா வர்றியா”

“கண்டிப்பா வர்றேன் ஆன்ட்டி... நீங்க ரெஸ்ட் எடுங்க..... சாயங்காலம் பார்க்கலாம்...”,என்று கூறி கைப்பேசியை வைத்த பாரதியை சாரங்கனும், சந்திரனும் வேற்று கிரக வாசியைப் போல பார்த்தார்கள்.

“என்ன அப்படி ஒரு லுக்கு...”

“நீயாப் பேசியது.... பக்கி நீயாப் பேசியது....”, சாரங்கன் நெஞ்சைப் பிடித்தபடியே பாட, சந்திரன் சிரிக்க ஆரம்பித்தார்.

“சீனியர் இதெல்லாம் ரொம்ப ஓவர்.... இவன் பண்ற இந்த மொக்கை காமெடிக்கெல்லாம் சிரிக்கறீங்க....”

“பாரதி ஜோக்ஸ் அபார்ட்... இதெல்லாம் விளையாடற விஷயம் இல்லை... விளையாட்டுத் தனமா ஏதானும் பண்ணி பேரைக் கெடுத்துக்காத.....”

“ச்சே ச்சே என்ன சீனியர்... அப்படி எல்லாம் என்னோட கெத்தை விட்டுட்டு ஜொள்ளு விட மாட்டேன்.... இப்போத்தானே மணி அடிச்சிருக்கு.... அது ஆலய மணியா இல்லை அபாய மணியான்னு confirm ஆகட்டும்.... அப்பறம்தான் எல்லாம்...”

“உனக்கு ஆலய மணிதான்.... ஆனா உன்கிட்ட மாட்டப்போற தியாகசெம்மல் இருக்கார் பாரு அவருக்குதான் அது அபாய மணி....”

“பொறாமைல பொசுங்காத சப்பாணி... சீனியர் வருங்கால மாமியார் கூப்பிட்டு இருக்காங்க.... போயிட்டு வர்றேன்....”,என்று கூறிவிட்டு ராஜாவின் வீட்டை நோக்கி கிளம்பினாள் சண்டிராணி.

தொடரும்

Episode 07

Episode 09

{kunena_discuss:1100} 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.