(Reading time: 14 - 27 minutes)

தொடர்கதை - சாத்திரம் பேசுகிறாய் .... கண்ணம்மா – 05 - ஜெய்

Saathiram pesugiraai kanamma

ட்டோ வாசலில் வந்து நிற்பதற்கும், ராஜா வெளியில் கேட் அருகில் வருவதற்கும் சரியாக இருந்தது. ஆட்டோவின் பின்னால் வந்த பாரதி,  ராஜாவின் கம்பீரம் மற்றும் அழகைப் பார்த்து ஆவென வாயைப் பிளந்து நின்றாள்.  ராஜா பார்பதற்கு நல்ல உயரமாக ஆஜானுபாகுவான தோற்றத்துடன், நல்ல சிவந்த நிறமாக இருந்தான்.  கல்லூரிப் பேராசியராக இருப்பதால் உள்ளுக்குள் பயந்த சுபாவமாக இருந்தாலும், வெளிப் பார்வைக்கு ரிம்லெஸ் கண்ணாடியுடன் செம்ம கெத்தாகத் தெரிவான்.  மொத்தத்தில் தளபதி அரவிந்த்சாமியை கற்பனை செய்து கொள்ளுங்கள்.  வெளித் தோற்றத்தை வைத்து பாரதி அவனை சைட் அடித்ததில் தவறில்லை.

ஆட்டோவின் பின்னாலேயே ஸ்கூட்டி வந்து பிரேக் அடித்து நிற்க, அதிலிருந்து ஒல்லியாக நெடுநெடுவென்று உயரத்துடன் இறங்கிய பாரதியை  யார் என்பது போல் பார்த்தான் ராஜா.

அதற்குள் சுகுணா அவனை அழைக்க ஆட்டோவின் உள் எட்டிப் பார்த்த ராஜா சுகுணாவின் நிலை பார்த்து அதிர்ந்துவிட்டான்.

“என்ன ஆச்சும்மா...”, ராஜா பதறியபடி கேட்க,

“ஆட்டோவைக்  கட் பண்ணிட்டு, நான் உள்ள வர்றதுக்கு ஹெல்ப் பண்ணு ராஜா... விவரமா சொல்றேன்...”,என்று சுகுணா கூற, இடையிட்டாள் பாரதி.

“சார், நீங்க ஆன்ட்டியைக் கூட்டிட்டு உள்ள போங்க, நான் ஆட்டோக்கு பணம் கொடுத்துட்டு வரேன்...”

(மக்களே இங்க ஒண்ணை நீங்க நோட் பண்ணனும்.... இத்தனை நேரம் சுகுணாவை அம்மா என்று அழைத்த பாரதி,  ராஜாவைப்  பார்த்தவுடன் ஆன்ட்டி என்று மாற்றிவிட்டாள்... படு உஷார் பாரதி நீ... )

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

வசுமதியின் "சர்வதோபத்ர... வியூகம்...!!!" - சாகசம் + கற்பனை + நகைச்சுவை கலந்த தொடர்...

படிக்க தவறாதீர்கள்..

“நீங்க....”

“எல்லாம் உங்களுக்கு ரொம்பத் தெரிஞ்சவங்கதான் சார்... கவலைப்படாம போங்க...”, என்று பாரதி சொல்ல, ராஜா சுகுணாவைப் பார்த்தான்.

“எனக்கு ரொம்பத் தெரிஞ்சவதான்ப்பா.... அவளுக்கு அப்பறமா பணத்தைக்  கொடுத்துடலாம்....”, சுகுணா கூற, பாரதிக்கு ஒரு நன்றிப் பார்வையை செலுத்திவிட்டு சுகுனாவைத் தூக்கிக்கொண்டு வீட்டினுள் சென்றான் ராஜா.

இதைப் பார்த்தவுடன் பாரதிக்கு பேக்கிரௌண்டில் ‘அம்மா என்றழைக்காத உயிரில்லையே’, என்ற பாட்டு கேட்க, ‘ச்சே ச்சே பாவம்... பண்டரிபாய் நிலைமை ஆன்ட்டிக்கு வரவேண்டாம் என்று இன்ஸ்டன்ட்டாக ஒரு வேண்டுதலை கடவுளிடம் வைத்தாள்.

பாரதி ஆட்டோவைக் கட் செய்துவிட்டு வீட்டினுள் செல்ல, அங்கு ராஜா சுகுணாவை சோஃபாவில் உட்காரவைத்துவிட்டு அங்கிருந்த டேபிளின் மேல் காலைத் தூக்கி வைத்தான்.

“வாம்மா பாரதி.... வந்து உக்காரு... ராஜா இது பாரதி....”, சுகுணா அறிமுகப்படுத்த, பாரதியைப் பார்த்து ஒரு சிறிய தலையசைப்புடன் சுகுணாவை கவனிக்க ஆரம்பித்து விட்டான் ராஜா.

“என்னம்மா ஆச்சு... நல்லாத்தானே போனீங்க...”

“இல்லைப்பா கோவில்ல பாசி இருந்திருக்கு... அதைப் பார்க்காம காலை வச்சதுல,  வழுக்கி கீழ விழுந்துட்டேன்... நல்ல வேளை இந்தப் பொண்ணு பின்னாடியே வந்ததால  டக்குன்னு என்னைத் தூக்கி விட்டுடுச்சு.... கால் பிசகி இருந்ததால் என்னால எழும்ப முடியலை... பாரதிதான் என்னை டாக்டர்க்கிட்ட கூட்டிட்டுப் போய் காட்டி உதவி  பண்ணினா...”

“ஏம்மா விழுந்த உடனேயே எனக்கு ஃபோன் பண்ணி இருக்கலாம் இல்லை... நான் உடனே வந்திருப்பேனே... ரொம்ப தேங்க்ஸ் மேடம்.... மிகப்பெரிய உதவி செய்திருக்கீங்க....”, ராஜா மேடம் என்று கூபிடுவதைக் கேட்பதற்கு படு பேஜாராக இருந்தது பாரதிக்கு... நாம அவனை எந்த ரேஞ்சுல வச்சிருக்கோம் இப்படி மேடம்ன்னு சொல்லிட்டானே என்று  மிக சோகமாகிவிட்டாள் பாரதி.

“அச்சோ தேங்க்ஸ் எல்லாம் எதுக்கு சார்... யாரா இருந்தாலும் இந்த மாதிரி உதவி  பண்ணி இருப்பாங்க....”, பாரதிக்கு ராஜாவை பேர் சொல்லிக் கூப்பிட ஆசை இருந்தாலும், அவன் அவளை மேடம் என்று கூப்பிட்டதால் வேறு வழி இல்லாமல் அவளும் சார் போட்டாள்.

“டாக்டர் என்ன சொன்னாங்க மேடம்....”

“சார் கணுக்கால்ல லெகமென்ட் டேர் ஆகி இருக்கு... ஒரு இரண்டு வாரம்  ரெஸ்ட் எடுக்க சொல்லி இருக்காங்க... வலிநிவாரணி கொடுத்து இருக்காங்க... வலி ரொம்ப அதிகமா இருந்தா மட்டும் கொடுங்க சார்... Pain killers நிறைய எடுத்துக்கறது நல்லதில்லை... ரெண்டு வாரம் கழிச்சு செக் அப் வர சொல்லி இருக்காங்க..... மறுபடி எக்ஸ்ரே எடுத்துப் பார்த்துட்டு ப்ரோக்ரஸ் சொல்றேன்னு சொன்னார்...”, என்று கூறிவிட்டு சுகுணாவின் எக்ஸ்ரே மற்றும் மருந்து அடங்கிய கவரை ராஜாவிடம் கொடுத்தாள் பாரதி.

“ராஜா, பாரதிக்கு காபி போட்டுட்டு வாப்பா....”

“அச்சோ அதெல்லாம் வேண்டாம் ஆன்ட்டி....”, பாரதி மறுத்துக் கொண்டிருக்கும்போதே அவளின் கைப்பேசி அழைத்தது.... அழைத்திருந்தது கைப்பிள்ளையான  சாரங்கன்.

பாரதி கைப்பேசியை எடுத்து, “சொல்லுங்க சாரங்கன்....”, என்க அந்தப்பக்கம் சாரங்கன் நெஞ்சைப் பிடித்துக் கொண்டு நாற்காலியில் விழுந்தான்.

“டேய்... சாரங்கா என்னடா ஆச்சு....”, அவன் விழுவதைப் பார்த்து பதறியபடி கேட்டார் சந்திரன்.

“நம்ம பக்கிய பேய் அடிச்சுடுச்சு சீனியர்...”

“என்னடா உளர்ற....”

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.