(Reading time: 14 - 27 minutes)

ம்மா உண்மைய சொல்லுங்க... நிஜமாவே கீழ விழுந்தீங்களா... இல்லை இப்போ வந்த இந்தப் பொண்ணு உங்களைத் தள்ளி விட்டுதா....”

“அடப்பாவி உதவி செஞ்சவளைப் போய் இப்படி பேசறியே... அந்தப் பொண்ணு பாவம், அதோட வேலையெல்லாம் விட்டுட்டு வந்து எனக்காக இத்தனை நேரம் இருந்தது.....”

“அதுனாலதான் எனக்கு டவுட் வருது... சரி இனிமே ரெண்டு வாரத்துக்கு எந்த வேலையும் நீங்க செய்யக்கூடாது... நான் காலேஜ்க்கு லீவ் சொல்லிட்டு உங்களைப் பார்த்துக்கறேன்....”

“அதெல்லாம் வேணாம்டா... காலைல மட்டும் எதுனா பண்ணி வச்சுட்டு போய்டு... நான் சமாளிச்சுக்கறேன்... பரிட்சை நேரம்... இப்போ லீவ் போட்டேன்னா பசங்களுக்கு கஷ்டம் ஆகிடும்...”

“அம்மா அதெல்லாம் நான் பார்த்துக்கறேன்... நீங்க கவலைப்படாதீங்க... அப்பறம் இன்னைக்கு வந்த பெண்ணை உங்களுக்கு ரொம்ப நாளாத் தெரியுமா...”

“எதுக்கு கேக்கற... இன்னைக்குதான் பார்த்தேன்....”

“அப்போ கொஞ்சம் டிஸ்டன்ஸ்லையே இருங்க... ஃபோன் பண்ணி பேசறதெல்லாம் வேண்டாம்... அவங்க வேற வக்கீலாம்... எதுக்கு தேவை இல்லாம அவங்களோட எல்லாம் வச்சிக்கணும்...”, என்று ராஜா கூற,  சுகுணா இப்படி பயந்த  ஒருவனுக்கு பாரதியைப் போல் தைரியமான பெண் துணையாக வந்தால் எத்தனை நன்றாக இருக்கும் என்று யோசித்தார்.

(S௦ sad பாரதி... நீ என்னவோ ராஜா கூட டூயட் பாடற ஐடியால இருக்க... ஆனா அவன் உன்னை வீட்டுக்குள்ள சாதாரணமா தெரிஞ்சவங்களா கூட விடமாட்டான் போலவே....)

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

சித்ரா Vயின் "உன் நேசமதே.. என் சுவாசமாய்..!!" - காதல் கலந்த குடும்பத் தொடர்

படிக்க தவறாதீர்கள்..

நேற்று இல்லாத மாற்றம் என்னது....’, என்று பாடியபடியே சந்திரன் இருக் கும் அறையுள் நுழைந்தாள் பாரதி... பாடியபடி நுழைந்த அவளை சாரங்கனும், சந்திரனும் வேற்று கிரக வாசிகள்போல் பார்த்தனர்...

“Why  looking me..... any attachment on my head...”, என்று படு கேவலமான இங்கிலீஷில் பாரதி  கேட்க, சாரங்கன் அவளை வாயை மூடு என்பது போல் சைகை செய்தான்...

“நாளைக்கு எவ்ளோ முக்கியமான கேஸ்னு உனக்குத் தெரியுமில்லை... உன்னை எத்தனை மணிக்கு வர சொன்னேன்.... ஆடி அசைஞ்சு வந்ததும் இல்லாம  படு கேவலமான குரல்ல பாட்டு வேற....”

“சீனியர் இதெல்லாம் ரொம்ப அநியாயம்... இந்த சப்பாணி காக்கா குரல்ல பாடறதை ஏதானும் சொல்றீங்களா.... நான்னா உங்களுக்கு எப்பவுமே இளக்காரம்தான்....”, வராத கண்ணீரை துடைத்தபடி பாரதி பேச, காண்டானான் சாரங்கன்.

“ஓய்   சீனியர் கேட்ட  கேள்விக்கு மட்டும் பதிலை சொல்லு.... தேவையில்லாம என்னை இழுக்கற வேலையெல்லாம் வச்சுக்காத.... எங்க போய் யாரை வம்பிழுத்துட்டு லேட்டா வர....”

“ச்சே ச்சே என்ன சப்பாணி இது.... என்னையப் பார்த்து இப்படி ஒரு கேள்வி கேட்டுட்ட... வம்பா நானா.... அப்படின்னா என்னன்னு கூட எனக்குத் தெரியாது.....”, பாரதி வசனம் பேச இதெல்லாம் நாங்க கண்ணாம்பா காலத்துலேயே பார்த்துட்டோம் லுக் கொடுத்தார்கள் சாரங்கனும், சந்திரனும்.  

“சத்திய சோதனை...  என்ன உலகமடா இது... நல்லவங்க சொல்லுக்கு இப்போ மதிப்பே இல்லாம போச்சு.... சீனியர் நிஜமாவே ஒரு அம்மா கீழ விழுந்துட்டாங்க.... அவங்களை டாக்டர் வீட்டுக்கு கூட்டிட்டுப் போயிட்டு அவங்க வீட்டுல விட்டுட்டு வர  லேட் ஆகிடுச்சு....”

பாரதி பேசிக்கொண்டிருக்கும்போது சந்திரனின் கைப்பேசி அழைக்க, அதை எடுத்து பேச ஆரம்பித்தார்...  அந்தப் பக்கமிருந்தவர் பேசப்பேச சந்திரனின் முகம் கொஞ்சம் கொஞ்சமாக மாற ஆரம்பித்தது.  ‘நான் நடந்ததைப் பத்தி விசாரிக்கறேன்...’,என்று கூறி கைப்பேசியை வைத்த சந்திரன் பாரதியை ‘குற்றம், நடந்தது என்ன’  என்ற லுக்கில் பார்த்தார்.  சந்திரனின் பார்வையைப் பார்த்த சாரங்கன் படு குஷியாகிவிட்டான், இன்றைக்கு பாரதிக்கு டின்னுதான் என்று.

“யார் சீனியர்  ஃபோன்ல, உங்களுக்கு வேண்டாதவங்க யாரானும் பண்ணினாங்களா... முகம் இப்படி மாறுது....”,ஒன்றும் தெரியாதது போல் பாரதி கேட்க......

“ஆங் நீ அடிச்சுட்டு வந்தியே மச்சான்க , அதுங்களைப் பெத்த மாமனுங்க பேசினாங்க... இன்னும் ஒரு வாரத்துக்கு எழும்ப முடியாத அளவுக்கு உள்காயமாம்.... டாக்டர் கம்ப்ளீட் ரெஸ்ட்ல இருக்க சொல்லி இருக்காங்களாமாம்....”

“சீனியர் நீங்க ஏதோ நான் வேணும்ன்னே போய் அவங்களை அடிச்சா மாதிரி சொல்றது ரொம்பத் தப்பு சொல்லிட்டேன்... அவனுங்க அந்த ஆன்ட்டியை இடிச்சு தள்ளிட்டு நிக்கக் கூட இல்லை.... என்கிட்ட கூட நக்கலா பேசினானுங்க... அதான் வச்சு வாங்கினேன்...”

“தப்பு செஞ்சாங்கன்னா அதை வாயால கேளு... அது என்ன எல்லாத்துக்கும் கை ஓங்கறது.... வக்கீலா இருந்துட்டு நீயே இப்படி பண்ணலாமா.... அப்பறம் பப்ளிக்கை கேள்வி கேக்க உனக்கு என்ன அருகதை இருக்கு...”

“சீனியர் சும்மாத் திட்டாதீங்க... நான் ஒண்ணும் வேணும்ன்னே அடிக்கலை.... அவங்க என்னை அடிக்க வந்தாங்க அதை நான் தடுத்தேன்  அவ்வளவுதான்... வக்கீல்னா யார் அடிச்சாலும் திருப்பி அடிக்காம வாங்கிக்கணுமா.... நல்ல கதையா இருக்கே...”

‘இந்தம்மா பெரிய வேலு நாயக்கர்..... அநியாயத்தை கண்டா அப்படியே பொங்கி எழுந்து அநியாயம் பண்றவங்களுக்கு  போகி கொண்டாடாம விட மாட்டாங்க.....,’, சாரங்கன்  முனக, ‘நாலு பேருக்கு நல்லது நடக்கும்ன்னா எதுவுமே தப்பில்லை...’, என்று கமல் வாய்ஸில் பாரதி பேச  கடுப்பானார் சந்திரன்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.