(Reading time: 9 - 18 minutes)

னக்கு ஏன் பொறாமை”

“ஐயே நான் அண்ணா அக்கா ரெண்டு பேருக்கும் செல்லமாக்கும்”

“ரஞ்சன் பொறாமை பட போறார். எப்படி இருக்கார் உன் ஹான்சம் கவ் பாய்”

“அவருக்கென்ன ஜம்முன்னு இருக்கார்”

“ஜம்முன்னு இருக்காரா.... அப்போ வீட்ல கம்முன்னு இருக்காருன்னு சொல்லு”

“உனக்கு கணேஷ் ராம்ன்னு பேர் வச்சதுக்கு பதிலா கணேஷ் அனுமான்னு பேர் வச்சிருக்கணும். அவ்ளோ வாலுடா நீ”

“உன்கிட்ட மட்டும் தான் என்னால இப்படி பேச முடியும் பூரி மசாலா. பிகாஸ் யூ ஆர் மை ஒன் அண்ட் ஒன்லி பெஸ்ட் பிரண்ட் மங்கி டாங்கி எல்லாம்”

 “நிஜமா...நீ அக்காவோட க்ளோஸ்ன்னு தான் எனக்கு எப்போவும் தோணும் தெரியுமா”

“ஷி இஸ் மை செர்ரி மை பிலாசபர் மை கைட்”

“ஐ மிஸ் அவர் குட் ஓல்ட் டேஸ். எவ்ளோ மெமொரீஸ் இல்ல”

“ஹ்ம்ம் மீ டூ “

“சரி நான் கெளம்பறேன். நாங்க காஞ்சிபுரம் போகணும். அவர் சைட் ரிலேடிவ் மேரேஜ் ஒன்னு அட்டன்ட் செய்ய தான் இந்தியா வந்தோம். அப்படியே மதுரை ராமேஸ்வரம் கன்னியாகுமரி போயிட்டு கொச்சில இருந்து ரிடர்ன் ப்ளைட்”

“உடனே கிளம்பறியா. வீட்டுக்கு கூட வராம”

“எல்லாம் வீட்டுக்கு போயிட்டு அம்மா அப்பாவ பார்த்துட்டு தான் வரேன். நீ தான் ஏதோ புது ஹாஸ்பிடல் ஓபனிங்க்கு போயிருக்க அப்படியே ஹாஸ்பிடல் வந்திருவன்னு சொன்னாங்க. அதான் சர்ப்ரைஸ் விசிட். எப்புடி” இல்லாத கலாரை தூக்கி விட்டுக் கொண்டாள்.

“ஹ்ம்ம்கும் நல்ல சர்ப்ரைஸ். சும்மாவே இங்க எங்க டீம்ல என்ன பத்தி நிறைய காசிப். இப்போ இன்னும் அதிகமா இருக்கும். எல்லோருக்கும் நீ யாருன்னு செம கியூரியாசிடியா இருக்கும்”

“இப்படி காசிப் லைம்லைட்ல இருக்கனும்னே கல்யாணம் செய்துக்கலையா நீ. நெக்ஸ்ட் டைம் நான் உன் கல்யாணத்துக்கு தான் இந்தியா வரணும் சொல்லிட்டேன்”

“ஹ்ம்ம் பார்க்கலாம் பார்க்கலாம். இந்த அதிகாரம் எல்லாம் என்கிட்டே மட்டும் தான் தூள் பறக்கும்”

“ஏதோ பொடி வச்சு பேசுற மாதிரி தெரியுதே” விட்டால் யுக யுகத்திற்கும் அவர்கள் அரட்டை அடித்துக் கொண்டே இருப்பார்கள். ஆனால் அதற்குள் அவளது மொபைல் சிணுங்கவும் அரக்க பறக்க டாட்டா பை பை சொல்லிவிட்டுப் பறந்து சென்றாள்.

“வாயாடி. அலை கூட ஓய்ந்து போயிரும். இவ வாயடிக்கிறது மட்டும் ஓயவே ஓயாது” தன் பிரியமான தோழியின் நினைவினில் புன்னகைத்தபடியே அன்று வந்த மெடிகல் ஜர்னலை புரட்டிக் கொண்டிருந்தான்.

அதில் ஒரு கட்டுரை அவனை மிகவும் கவரே யார் எழுதியது என்று பார்த்தவன் மனமும் இதழும் பெரிதாக மலர்ந்தன.

ஏனோ இன்று  மகிழ்வூட்டும் நிகழ்வுகள்  மழைச்சாரலாய் குளிர்வித்தது அவன் மனதினை.

பாலைவன பயணத்தில் திடீர் சோலையினுள் புகுந்துவிட்டதைப் போல ஒரு இதம்.

கண்மூடியவன் விழிகளில் அவள் சிரித்தாள். “காதல் ரோஜாவே எங்கே நீ எங்கே” அவன் உதடுகள் முணுமுணுக்க இன்று விழிகளுக்குள் இருந்தவள் கண்ணீராய் தப்பி ஓட முயற்சிக்கவில்லை. மாறாய் அவன் உள்ளுணர்வு அவள் மிகவும் அருகினில் இருப்பதாக அவனுக்கு உணர்த்துவதாக அவன் இமைகள் துடித்தன.

ணேஷிடம் பேசிவிட்டு அம்முவின் ரிபோர்ட் அனைத்தையும் எடுத்து வைக்க தனது அறைக்கு சென்றான் வருண்.

அவன் பின்னோடே வந்த வர்ஷினி ரிபோர்ட்களை புரட்டிப் பார்த்துக் கொண்டு இருந்தாள்.

“நீ கார்டியாலஜிஸ்ட் தானே. உனக்கு தெரியாதது வேற யாருக்கு அண்ணா தெரியப் போகுது”

“நான் முதல்ல உன் அண்ணன் அப்புறம் தான் டாக்டர் கார்டியாலஜிஸ்ட் எல்லாம்னு எத்தனையோ தடவை சொல்லிட்டேனே அம்மு”

“இல்ல நம்ம சிவகுமார் டாக்டர் கிட்ட தானே எப்போவும் காட்டுவோம். அவர் உனக்குமே புரபசர். அப்புறம் ஏன் இந்த டாக்டர்கிட்ட காட்டணும்னு சொல்ற”

இதை சொல்லும் போது அவள் மனம் மிகுந்த துயரத்துக்கு உள்ளானது. கணேஷை அவள் அலட்சியப் படுத்தும் விதமாக சொல்ல நேர்ந்த சூழ்நிலையை என்வென்று சொல்ல.

“சார் கிட்ட காட்டலாம் தான். ஆனா திட்டு விழும். நீயெல்லாம் என்ன கார்டியாஜி படிச்சன்னு கேப்பார். டாக்டர் கணேஷ் ரொம்ப திறமையனவர். ஹெச்.எஸ்.ஆர்ரோட ப்ரேத்யேக சிஷ்யன்”

“ஹெச் எஸ் ஆர் றா..யாரு அண்ணா”

“கார்டியக் சர்ஜன். பார்ன் டு பி சர்ஜன்ன்னு சொல்லலாம். அவர் கை வச்சாலே சர்ஜரி சக்சஸ்ன்னு சொல்லுவாங்க. யூஎஸ்ல ரெசிடன்சி செய்து அங்கேயே ஸ்பெஷாலிடி ப்ராக்டீஸ் செய்து இந்தியா ரிடர்ன் ஆனாங்க. யூஎஸ்ல கணேஷ் அவருக்கு ஜூனியர். முக்கியமான மெடிகல் ஜர்னல்ஸ்ல இவங்க ஆர்டிகல்ஸ் ரிசர்ச் நிறைய பப்ளிச் ஆகிருக்கு. இன்னமும் அவங்க FC டீம் நாலு பேர் பேருலேயும் தான் ஜர்னல்ஸ்ல ஆர்டிகல்ஸ் வருது. இப்போ வேற வேற இடத்துல ப்ராக்டீஸ் செய்தாலும் டச்ல தான் இருக்காங்க போல”

வருண் கதைகதையாக சொல்ல வர்ஷினிக்கு இந்த தகவல்கள் எல்லாம் புதிதாக இருந்தன.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.