(Reading time: 9 - 18 minutes)

04. துடிக்கும் இதயம் உனதே உனது!!! - மது

Thudikkum ithayam unathe unathu

பெண்ணின் இதயம் ஆணின் இதயத்தை விட அதிகமாகத் துடிக்கும் இயல்பைக் கொண்டதாகும்

காதல் ரோஜாவே எங்கே நீ எங்கே கண்ணீர் வழியுதடி கண்ணே” கணேஷின் மொபைல் உருகிக் கரைந்து இசைத்துக் கொண்டிருந்தது.

“ஹலோ..... டாக்டர் கணேஷ் ராம் ஹியர்”

“ஹலோ டாக்டர் திஸ் இஸ் டாக்டர் வருண்”

“ஓஹ் சாரி டாக்டர் வருண். லேன்ட்லைன் நம்பர்ல இருந்து கால் வந்ததால நீங்க தான்னு தெரியல”

“தட்ஸ் ஓகே டாக்டர் கணேஷ். உங்ககிட்ட ஒரு முக்கியமான விஷயம் பத்தி பேசணும். மே ஐ டாக் நவ்”

அருகில் அவனையே உற்றுப் பார்த்தபடி நின்று கொண்டிருந்தவளிடம் 5 மினிட்ஸ் என்று சைகை காண்பித்து விட்டு வசதியாக சோபாவில் சென்று அமர்ந்து கொண்டவன்

“சொல்லுங்க டாக்டர் வருண். இப்போ ப்ரீயா தான் இருக்கேன். அண்ட் பை தி வே. வி ஆர் அல்மோஸ்ட் சேம் செட். என்னைய கணேஷ்ன்னு கூப்பிடலாமே. ஐ வுட் லைக் தட்” புன்னகைத்தபடியே அவன் கூறவும் அங்கே அவனது அறையை ஆராய்ந்து கொண்டிருந்தவளும் மெல்ல புன்னகைத்தாள்.

“நான் வேணும்னா வெளியில் இருக்கவா” சத்தம் எழுப்பாமல் அவனிடம் அவள் கேட்க “அதெல்லாம் வேண்டாம் இங்கேயே இரு” என்று அவனும் அவள் பாணியிலேயே பதிலுரைத்தான்.

மறுபக்கம் வருண் கூறியதை கவனத்துடன் கேட்டவன், “ ஒகே வருண் நாளைக்கு மார்னிங் ஒரு சுவிட்ச் ஆபேரஷன் இருக்கு. ஐ ஷுட் பி ப்ரீ அரவுண்ட் 11. வில் சி யூ தென்” என்று சிரித்த முகமாகவே பதில் சொல்லி மொபைலை அணைத்தான்.

“ஹப்பாடா....இப்போ தான் பழைய கணேஷை பார்ப்பது போல இருக்கு. எப்போ இருந்து டா நீ சிடுமூஞ்சி ஆன”

“அடிங்க்க் நானா சிடுமூஞ்சி. நீ தான் இஞ்சி தின்ன குரங்கு மாதிரி உர்ர்ன்னு இருந்த”

“அதெல்லாம் அப்போ. அந்த காலத்துல”

“ஆமாமாம் ஹரப்பா மோஹன்ஜதாரோ காலத்துல தானே”

“உன்ன நல்லா மொத்தணும். போன் செய்தா எடுக்கிறது இல்ல. மெயிலுக்கும் ரிப்ளை இல்ல. நீ சென்னை வந்ததில் இருந்தே காண்டக்ட் இல்ல. என்ன தான் ஆச்சு உனக்கு”

“அதான் இந்த அதிரடி விசிட்டா. மோன் செர்ரி (mon Cherie)  வேலையா” ((mon Cherie என்றால் பிரஞ்சு மொழியில் மை ஹனி என்று அர்த்தம்)

“இரு இரு அண்ணாகிட்டேயே போட்டுக் கொடுக்குறேன்”

“சொல்லிக்கோ அவர் முன்னாடியே சொல்லுவேனே. அவர் மட்டும் தான் ஹனின்னு கூப்பிடலாமா என்ன. என் செர்ரி சப்போர்ட் எப்போவும் எனக்கு தான் தெரியும்ல”

“அப்புறம் ஏண்டா அக்கா கால் செய்தாலும் எடுக்க மாட்டேன்ற. அண்ணா கிட்ட மட்டும் பேசுறியாம். அக்கா பேசினா வேலை இருக்கு அப்புறம் பேசுறேன்னு மழுப்புரியாம்”

“அதான் துப்பறியும் பூரி மசாலாவை அனுப்பியிருக்காங்களாக்கும்” விளையாட்டுப் போல சொன்னாலும் கணேஷ் மனம் மிகவும் வேதனையுற்றது. ஆனால் அவன் உதடுகளோ கேலியையும் சிரிப்பையும் விட்டுவிடாமல் பற்றிக் கொண்டிருந்தது.

“ஒரு ஹலோவிலேயே என் வேதனையைக் கண்டுகொள்வாளே. என்ன ஏதுன்னு நானா சொல்ற வரை ஒரு வார்த்தை கேட்க மாட்டாள். ஆனால் எனக்காக அவளும் வருந்துவாள். நம்மள சுத்தி இருக்கவங்களுக்கு முடிந்த வரை சந்தோஷத்தை மட்டுமே குடுக்க முயற்சி செய்யணும் ராம். அவள் சொல்லிக் கொடுத்த பாடம் அல்லவா. அதான் என் வேதனையை எனுக்குள்ளேயே புதைத்துக் கொண்டிருக்கிறேன்” 

அத்தனையையும் மனதிலே நினைத்தவன் எதிரில் அவன் முகத்தையே மீண்டும் மீண்டும் உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தவளை செல்லமாக அடித்தான்.

“ஏய் சைகோ டாக்டர். இந்த உற்றுப் பார்த்து ஹிப்னாடைஸ் பண்ற வேலை எல்லாம் என்கிட்டே பலிக்காது மேடம்”

“நீ ரொம்ப மாறிட்ட டா  கணேஷ். நீ ரவுண்ட்ஸ் பண்ண லட்சணத்தை தான் பார்த்தேனே. முன்னாடி எல்லாம் எவ்வளவு கலகலப்பா இருப்ப.. ராம் பார்த்து கத்துக்கோன்னு அக்கா எனக்கு சொல்லுவாங்க”

“ஹ்ம்ம் அப்போ ஜூனியரா இருந்தேன். பொறுப்பு எல்லாம் பாஸ்  பார்த்துக்கிட்டார். இப்போ நானும் பொறுப்பான டாக்டர் ஆகிட்டேனாக்கும்”

“அண்ணா இஸ் சோ ப்ரௌட் ஆப் யூ. உன்னோட சர்ஜிகல் ச்கில்ஸ் ரொம்ப நல்லா இருக்கு. நல்ல ரிசல்ட்ஸ் கணேஷ் ரொம்ப நல்லா பண்றான்னு சொன்னார்.

“உன்கிட்ட எப்போ சொன்னார்”

“போன மாசம் மொரீசியஸ் வந்த போது. உன்ன பத்தி தான் பேசிட்டே இருந்தோம்”

“குரு எவ்வழியோ சிஷ்யனும் அவ்வழியே. ஆனா பாஸ் என்கிட்டே ஒரு தடவை கூட வெரி குட்ன்னு சொன்னதே இல்ல தெரியுமா”

“அதான் பொழுதுக்கும் அக்கா உன்ன பாராட்டிட்டே இருப்பாங்களே”

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.