1998ல் வெளியான அவள் வருவாளா படத்தில் இடம் பெற்றிருக்கும் ஒரு பாடல் இந்த “சிக்கி முக்கி உய்யாலா”. இது இன்றைக்கு நிறைய பேருக்கு தெரிந்திருக்காது (அ) நினைவில் இருக்காது. அந்தப் படத்தின் வேறு சில பாடல்கள் அளவிற்கு இது சூப்பர் ஹிட் ஆகலைன்னு தான் நினைக்கிறேன்.
எனக்கும் ரொம்ப ஸ்பெஷலா பிடிச்ச பாட்டுன்னும் சொல்ல முடியாது!
அப்புறம் எதுக்கு இந்த பாட்டுக்கு “எங்கே என் காதலி எங்கே எங்கே?” நாவலில் அவ்வளவு இம்பார்டன்ஸ் கொடுத்திருக்கேன்னு யாருக்காவது கேள்வி இருந்தால், என்னுடைய பதில் அது ப்ளான் செய்து செய்யலை என்பது தான்!
“எங்கே என் காதலி எங்கே எங்கே?” கதையில ஹீரோ கார்த்திக் சொல்வதுப் போல அவள் வருவாளா படத்தில் இருக்கும் “சேலையில வீடு கட்டவா” பாட்டு தேடப் போனப்போது தற்செயலாக கண்ணில் பட்ட பாட்டு தான் “சிக்கி முக்கி உய்யாலா”. [ நான் செய்ததை தான் கதையில ஹீரோ செய்ததா சொல்லிட்டார் ]
இந்தப் பாட்டுப் பேரை கண்ணில் பார்த்ததும், என் மைன்ட் பல வருஷம் பின்னாடி ரீவைன்ட் ஆகிப் போச்சு! நானே இந்தப் பாட்டை கேட்டு கொஞ்சம் வருஷம் ஆச்சு!
முதல் முதல் இந்த பாட்டை நான் கேட்டது, ஹுஹும் பாட்டு பத்தி நான் கேள்வி பட்டது என் பிரென்ட்ஸ் வழியாக.
எங்க கிளாஸ்ல நாங்க ஒரு கேம் விளையாடுவோம். அது சினிமா பாட்டு வரிகளை வைத்து விளையாடும் கேம். அந்தக் காலகட்டத்தில் வந்த பல பாடல் வரிகள் எனக்கு இன்னமும் நினைவில் இருப்பதற்கு முக்கிய காரணம் இந்த கேம் தான்!
அது pre-YouTube காலம். புது பாட்டு வந்தா ம்யூசிக் சானல்ல தான் பார்க்கனும்! எனக்கு அதுல ரொம்ப இன்ட்ரஸ்ட் இல்லை. ஆனால் என் கிளாஸ்ல நிறைய பேருக்கு பிடிச்ச பொழுதுபோக்கு அது.
Anyways, லாங் ஸ்டோரியை ஷார்ட்டா சொல்லனும்னா, ஒரு நாள் கேம் விளையாடும் போது இந்த “சிக்கி முக்கி உய்யாலா” பாட்டுல இருந்து லைனை ஒருத்தி சொல்ல, நான் பே பே பே ன்னு முழிச்சது இன்னும் ஞாபகம் இருக்கு!
இப்படி ஒரு பாட்டான்னு நான் நம்பவே இல்லை!
இன்ட்ரஸ்டிங்லி, என்னோட இன்னொரு பிரென்ட்க்கும் இந்த பாட்டு தெரிஞ்சிருந்தது!
எல்லோருக்கும் தெரிஞ்ச பாட்டு எனக்கு மட்டும் தெரியலையேன்னு நான் ரொம்ப நாள் தேடி காத்திருந்த கேட்ட பாட்டும் கூட!
இதெல்லாம் “எங்கே என் காதலி எங்கே எங்கே” நாவல்க்காக சேலையில வீடு கட்டவா பாட்டு தேடப் போய் எனக்கு ஞாபகம் வந்த ஓல்ட் மெமரீஸ்! கூடவே தானா ஒரு ச்மைளும் வந்ததுன்னு சொல்லனுமா என்ன!!!
சரி, கதைல பாட்டு தான் சேர்க்கிறோம், அதை இந்த பாட்டா வச்சிட்டு போயிடுவோம்னு, மாத்திட்டேன்!
இது தான் “எங்கே என் காதலி எங்கே எங்கே” நாவலின் “சிக்கி முக்கி உய்யாலா” ரகசியம்!!!
Bindu Vinod has written more than 31 Tamil series in Chillzee and many more Novels in Chillzee KiMo.