இந்த படத்துல இருக்கும் கேக் தான் நான் “கண்ணுக்குள்ளே உன்னை வைத்தேன் கண்ணம்மா” நாவல் எழுத காரணமாக இருந்தது என்று சொன்னால் அது மிகையில்லை, உண்மை!
இந்த கேக்ன்னா, இதே கேக் இல்லை 😊 இது போல வேற ஒரு கேக் 😊 ( ஹி ஹி ஹி! )
இதென்ன கதைன்னு கேட்குறீங்களா, சொல்றேன் கேளுங்க!
நான் இப்போது இருக்கும் இடத்தில் கேக்குக்கு எந்த பஞ்சமும் இல்லை 😊 பல, பல வெரைட்டியான கேக் கிடைக்கும். ஆனால் எனக்கு பெர்சொனல்லி ரொம்ப பிடித்தது இந்த டீ கேக் or சிம்பிள் ஃப்ரூட் கேக். நான் வேலைக்கு போகத் தொடங்கிய நாட்களில் இருந்து எப்போதுமே என்னோட இருந்த ஒரு ஸ்நாக் இது. எனக்கும் இந்த கேக்குக்கும் ரொம்ப ஓவர் அட்டாச்மென்ட்ன்னு வச்சுக்கோங்களேன்! ஹும்... இது மாதிரியான கேக் இங்கே கிடைக்காததால், இந்த கேக்கை ரொம்பவே மிஸ் செய்துட்டு இருந்தேன்.
திடீர்னு பார்த்தால் ஒரு நாள் சென்னையில் பிரபலமான ஒரு பேக்கரி என் கண்ணுல பட்டது! உடனே விசிட் கொடுத்தாச்சு! அங்கே என்னோட ஃபேவரைட்டான இந்த கேக்கும் கிடைச்சது! கேக்கை கையில வாங்கினதும் எனக்கு சந்தோஷம் தாங்கலை!
அந்த இன்ஸ்டன்ட்ல ஒரு புது கதைக்கான ஐடியா ஸ்ட்ரைக் ஆச்சு! இந்த பேக்கரி செட்டிங்க்ல ஹீரோ ஹீரோயின் மீட் செய்தா சரியா இருக்கும்ன்னு முடிவு செய்தேன். (அப்போ தானே என் கேக்கை நான் ஸ்பெஷலா ட்ரீட் செய்ததா இருக்கும் 😉 )
இப்படி ஆரம்பித்த கதை தான் “கண்ணுக்குள்ளே உன்னை வைத்தேன் கண்ணம்மா ஆக உருவானது. அந்தக் கதை என்டர்டெயினிங் & இன்ட்ரஸ்டிங் ஆக வந்ததில் எனக்கு டபிள் சந்தோஷம்! அப்புறம், என் கேக் கோவிச்சுக்காதா 😉
ஸோ, உங்களுக்கு நம்ம நான்ட்ஸ் – எஸ்.கே ஸ்பெஷல் “கண்ணுக்குள்ளே உன்னை வைத்தேன் கண்ணம்மா” கதை பிடித்திருந்தா, நீங்களும் என் ஸ்பெஷல் கேக்குக்கு தேங்க்ஸ் சொல்லிடுங்க 😊
Bindu Vinod has written more than 31 Tamil series in Chillzee and many more Novels in Chillzee KiMo.
Copyright © 2009 - 2023 Chillzee.in. All Rights Reserved.
One of my favourite series mattum illai my all time favourite couple 😍😍😍 Semma jodi!!
Thank you.