Chillzee சமையல் குறிப்புகள் - செட்டிநாடு ஸ்பெஷல் - பால் பணியாரம் - ராஜி
தேவையான பொருட்கள்
பச்சரிசி - 200 கிராம்
உளுந்தம்பருப்பு - 200 கிராம்
பால் - அரைலிட்டர்
ஏலக்கா - 4
சக்கரை - 100 கிராம்
உப்பு - 1 சிட்டிகை
எண்ணெய் - தேவையான அளவு
செய்முறை
- முதலில் பச்சரிசி உளுந்தம்பருப்பு இரண்டையும் ஒன்று சேர்த்து தண்ணீர் விட்டு நன்றாக அலசி 2 - 21/2 மணி நேரம் ஊறவைக்க வேண்டும்.
- பிறகு அதனை சிறிதளவு தண்ணீர் சேர்த்து நைசாக அரைத்துக்கொள்ளவும். அரைத்த மாவுடன் உப்பு கலந்த்து வைக்கவும்.
- அடுப்பில் பணியாரக்கல் வைத்து எண்ணெய் விட்டு சூடாக்கவும்.
- சூடானதும் மாவை கரண்டியில் எடுத்து பணியாரக்கல்லில் ஊற்றவும்.
- ஒருபக்கம் சிவக்க வெந்தவுடன் மறுபுறம் திருப்பி சிவக்க வெகவைத்து தனியாக எடுத்து வைத்துக்கொள்ளவும்.
- அடி கனமான பாத்திரத்தில் பாலை ஊற்றி காய்ச்சவும். ஏலத்தை பொடி செய்து சேர்துக்கொள்ளவும்.
- இறுதியாக சக்கரையையும் சேர்த்து நன்றாக காய்ச்சி இறக்கி வைத்துக்கொள்ளவும்.
- பால் கொஞ்சம் ஆறியவுடன் சுட்டெடுத்த பணியாரங்களை அதனுடன் சேர்த்து ஊற விட்டு சிறிது நேரம் கழித்து பரிமாறவும்
இது குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த உணவு வகை & மை ஃபேவரைட் ரேசிப்பி டூ ஹி........ஹி.........