(Reading time: 3 - 5 minutes)

Health Tip # 52 - தினமும் நடந்தாலும், உடல் எடை குறைய மாட்டேன்கிறதா? இதோ உங்களுக்காக 10 கிலோ குறைய ஒரு ரகசியம்!!!

walk to weight loss

நானும் தினமும் நடக்கிறேன் ஆனால் உடல் எடை குறையவே மாட்டேன் என்கிறது

எனும் புகார் உங்களிடம் இருக்கிறதா???

அப்படி என்றால் இந்த கட்டுரை உங்களுக்காகவே தான்...!

இதில் கொஞ்சம் இனிப்பான செய்தியும் இருக்கிறது, கசப்பான செய்தியும் இருக்கிறது...

முதலில் கசப்பான விஷயத்தை பார்த்து முடித்து விடுவோம்...!

ஒரு நாள் அரை மணி நேரமோ, ஒரு மணி நேரமோ நடப்பதாலோ, ஒரே ஒரு வாரம் தொடர்ந்து நடப்பதாலோ உங்கள் உடல் எடையில் பெரிய அளவில் மாற்றங்களை பார்க்க முடியாது!

டனே மனதை தளர விட்டு விடாதீர்கள்... மேலே படியுங்கள்...!

ஒரு பவுன்ட் எடை குறைய உங்கள் உடலில் இருந்து 3500 கலோரிகளை செலவிட வேண்டும் என்று உடல் நல வல்லுனர்கள் சொல்கிறார்கள்....

அதாவது ஒரு கிலோ குறைய தோராயமாக 7716 கலோரிகள் செலவாக வேண்டும்....!

உங்களின் உடல் எடை 70 கிலோ என்று வைத்துக் கொள்வோம். நீங்கள் ஒரு மணி நேரத்தில் மூன்று கிலோமீட்டர் நடக்கின்றீர்கள் என்றால், அந்த ஒரு மணி நேரத்தில் உங்கள் உடலில் இருந்து 162 கலோரிகள் செலவாகிறது!

அப்படி என்றால் இதே போல 48 மணி நேரங்கள் நடந்தால் மட்டுமே உங்க உடல் எடையில் இருந்து ஒரே ஒரு கிலோ குறையும்!!!

தனால் தான் உடற்பயிற்சியுடன் உணவு கட்டுப்பாடும் வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுரை செய்கிறார்கள்!

உணவு வழி வரும் கலோரியும் குறைந்து, இது போல் நடப்பதினாலும் கலோரிகள் செலவானால், உடல் எடை சற்றே வேகமாக குறைய வாய்ப்புள்ளது.

அதே போல முடிந்த அளவில் ‘ஆக்டிவ்’ ஆக இருப்பதும் நம்மை சுறுசுறுப்பாக வைப்பதுடன் உடல் எடை குறையவும் உதவுகிறது.

மேலும், உங்களால் முடிந்தால் உங்களின் நடை வேகத்தையும் அதிகரித்து அதிக கலோரிகளை செலவிடலாம்.

உதாரணமாக மேலே சொன்ன அதே 70 கிலோ எடை உள்ள நபர், ஒரு மணி நேரத்தில் 3.5 கிலோமீட்டர் தூரம் நடந்தால் உடலில் இருந்து 219 கலோரிகள் கரையும்.

அதே போல 35 நாட்கள் நடந்தாலே உடல் எடை ஒரு கிலோ குறையும்!

ஓரு கிலோ குறைய இவ்வளவு நாட்களா என்று எல்லாம் நினைக்காதீர்கள்!

ஒரே மாதிரியான உணவு பழக்கத்துடன் இதே போல தொடர்ந்து நீங்கள் நடந்தால், ஒரு வருடத்தில் கிட்டத்தட்ட பத்து கிலோ குறைத்து விடலாம்!!!!

கூட்டி கழித்து பார்த்தால் கணக்கு சரியாக வருகிறதா??? smile

னவே ஒரு சில நாட்கள் மட்டும் நடந்து விட்டு எடையில் மாற்றமில்லை என்று புலம்பாமல், நடக்கும் பழக்கத்தை உங்கள் வாழ்வின் அங்கமாக்கி கொள்ளுங்கள்!

இயல்பாக & சுலபமாக உடல் எடையை பராமரியுங்கள்!

பெண்களை பொறுத்தவரை, நடப்பது உடலை சீராக்கி, அழகை மேம்படுத்தி காட்டும் என்பது கூடுதல் நலன் cool.

மகளிர் மட்டும் ஸ்பெஷல்!

{kunena_discuss:747}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.