(Reading time: 4 - 8 minutes)

Health Tip # 53 - தொப்பை இல்லாமல், ஸ்லிம் ஆக ஆசையா? இதை படிங்க முதல்ல - விந்தியா

Vidhya

ன்றைய காலத்தில் பலரும் அவதிப் படும் obesity எனும் உடல் பருமன் பிரச்சனைக்கு பல காரணங்கள் இருந்தாலும், முக்கிய காரணமாக இருப்பது நம் வாழ்க்கை முறையே ஆகும்.

ஸ்லிம் ஆகவும், தொப்பையை கரைக்கவும் பல வழி முறைகள் இருக்கின்றன. தொடர்ந்து பிரத்தியேக உடற்பயிற்சிகள் செய்தால் நல்ல முன்னேற்றதை பார்க்கலாம்.

அதை தவிர நாம நம் அன்றாட வாழ்வில் சில மாற்றங்களை செய்தும் ஸ்லிம் ஆகலாம்.

எப்படி என்று தெரிந்துக் கொள்ள மேலே படியுங்கள்.

 

தண்ணீர் குடியுங்கள்!

ரோக்கியம் தொடர்பான எந்த கட்டுரையை நீங்கள் படித்தாலும் இதே விஷயத்தை நீங்கள் பார்க்கலாம்.

நம் உடலுக்கு தேவையான அளவிற்கு தண்ணீர் குடிப்பது மிக மிக அவசியம். ஆனால் நம்மில் பலரும் போதுமான அளவு நீர் குடிப்பதில்லை.

நம் உடம்பை சுத்தப் படுத்தும் தன்மை தண்ணீருக்கு உண்டு. அதுமட்டுமல்லாமல் செரிக்க முடியாத உணவுகளை தண்ணீர் வெளியே அனுப்பி விடும். அதே போல, உடம்பில் உள்ள தேவை இல்லாத கழிவுகளையும் வெளியே அனுப்பும் சக்தி கொண்டது தண்ணீர்.

தண்ணீரின் இந்த தன்மையினால் உடலில் கொழுப்பு சேர்வதை தவிர்க்க முடியும்.

மறக்காமல் குறைந்தது எட்டு கிளாஸ் தண்ணீர் தினமும் குடியுங்கள்.

 

சின்ன சின்ன உடற்பயிற்சியை வாழ்க்கையின் அங்கமாக்கி கொள்ளுங்கள்

டலை அதிகமாகி வருத்தி உடற்பயிற்சி செய்ய இயலவில்லை என்றாலும் பரவாயில்லை, ஆனால் வாக்கிங், ஜாகிங் என்று சிறிய அளவிலேனும் உடலுக்கு பயிற்சி கொடுங்கள்.

இதை உங்களால் இயன்ற அளவில் செய்யுங்கள் ஆனால் தினமும் செய்யுங்கள்.

நம் உடல் மிகவும் புதிசாலித்தனமானது, சிறிய அளவில் ‘இன்ஸ்ட்ரக்ஷன்’ கொடுத்தாலே கப்பென்று கற்றுக் கொள்ளும் தன்மைக் கொண்டது. எனவே தினமும் சிறிய அளவிலேனும் உடற்பயிற்சி செய்யுங்கள்.

 

கொழுப்பை கரைக்க உதவும் உணவு வகைகளை உண்ணுங்கள்

டல் பருமன் மற்றும் தொப்பைக்கு உணவு பழக்க வழக்கம் முக்கிய காரணமாகிறது.

எனவே உங்கள் உணவு பழக்கத்தை ஆராய்ந்து சீர் செய்யுங்கள்.

கேழ்வரகு (ராகி), காய்கறிகள், பாதாம், ஓட்ஸ், முட்டையின் வெள்ளை கரு, பிரவுன் பிரட் முதலியவற்றை உங்களின் உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள்.

இந்த உணவு பொருட்களில் உள்ள சத்துக்களும், கடினமான கார்போஹைட்ரேட்டும் உடலில் உள்ள கொழுப்பை கரைக்க உதவுகின்றன.

 

காலை உணவில் முழு தானியங்களுக்கு முக்கியத்துவம் கொடுங்கள்!

Whole grains எனப்படும் முழு தானியங்களை காலை உணவாக உட்கொள்ளுவது சிறந்தது.

இந்த உணவு பொருட்களை உட்கொள்ளும் போது நாம் வெகு நேரத்திற்கு பசி இல்லாமல் இருப்போம்.

அதற்கு காரணம், இவை நம் உடலில் இருக்கும் சக்தியை மெது மெதுவாக பயன்படுத்த உதவுவதே ஆகும் என்கிறார்கள் நிபுணர்கள்.

பசி எடுக்கும் நேரம் தாமதமாவதால் நாம் உட்கொள்ளும் உணவு அதுவும் குறிப்பாக நொறுக்கு தீனிகள் உட்கொள்வது குறையும்.

எனவே கேழ்வரகு (ராகி), கோதுமை, ஓட்ஸ், பிரவுன் ரைஸ் மற்றும் பிற முழு தானியங்களை காலை உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள்.

 

பழங்களை உண்ணுங்கள்!

ழங்களில் இருக்கும் நார்ச்சத்து உடலுக்கு மிகவும் நல்லது.

அதேப்போல பழங்கள் பொதுவாக நல்ல செரிமானத்திற்கும் உதவும். எனவே உடலில் உள்ள கழிவு பொருட்களை எளிதாக வெளியேற்றவும் உதவுகின்றன.

அந்தந்த சீசனில் கிடைக்கும் பழங்களை வாங்கி உண்டாலே உடலுக்கு நல்லது.

 

சாப்பிடும் நேரத்திலும் கவனமாக இருங்கள்

ரவில் உணவு உண்ட சிறிது நேரத்தில் தூங்க சென்றால் நம் வயிற்றில் இன்னமும் செரிக்கப்படாத உணவு இருக்கும். அதனால் கொழுப்புப் நமது வயிற்று பகுதியில் சேர்ந்து தங்கி விடும்.

உறங்குவதற்கு மூன்று மணி நேரங்களுக்கு முன்பே உணவை உண்டால், நாம் தூங்க போகும் நேரம் உணவு செரிமானமாகி இருக்கும்!

எனவே இரவு உணவின் நேரத்தை உங்கள் தூக்க நேரத்தை மனதில் கொண்டு மாற்றிக் கொள்ளுங்கள்.

அதே போல ஒவ்வொரு உணவு நேரத்திற்கு இடையேயும் குறைந்தது மூன்று மணி நேர இடைவெளி விடுங்கள்.

காலை ஏழு மணிக்கு காலை உணவை எடுத்துக் கொள்கிறீர்கள் என்றால், ஸ்னாக் நேரத்தை பத்து மணிக்கு மேல் இருக்குமாறு பார்த்துக் கொள்ளுங்கள். அதே போல மதிய உணவை ஒரு மணிக்கு மேல் உண்ணுங்கள். மாலை ஸ்நாக் நேரத்தை நான்கு மணிக்கும், இரவு உணவை ஏழு மணிக்கு உண்டு விட்டு, பத்து மணி அளவில் தூங்க செல்லுங்கள்.

 

மேலே கூறியவை எதுவுமே ஹை-பை விஷயங்கள் இல்லை. முன்பு நம் முன்னோர்கள் இயல்பாக செய்த விஷயங்கள் தான்.

மாறி விட்ட நம் வாழ்க்கை முறையினால் ஏற்பட்டிருக்கும் ஆரோக்கிய சீர்க்கேட்டினை சரி செய்ய, சிறிய அளவில் மாற்றங்கள் கொண்டு வந்தாலே நம் உடல் ஆரோக்கியத்தில் பெரிய அளவில் மாறுதல்களை காணலாம்.

முயற்சி செய்து பாருங்கள், உங்களை பார்த்து நீங்களே ஆச்சர்யப்படுவீர்கள்

மகளிர் மட்டும் ஸ்பெஷல்!

{kunena_discuss:747}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.