(Reading time: 3 - 5 minutes)

03. விசித்திர உலகம் – அரசியலும்... பெண்களும்...

பெயரில் மட்டும் தான் அரசியல் ஆனால் நாம் இங்கே உண்மையான ‘அரசியல்’ பற்றி பேச போவதில்லை....

தலைப்பில் இருக்கும் இரண்டாவது பகுதி அதாவது பெண்களை பற்றி தான் பார்க்க போகிறோம்.

மெரிக்காவில இப்போது ரொம்ப பரபரப்பாக எங்கே பார்த்தாலும் டாக் ஆஃப் தி டவுனாக இருப்பது அடுத்த வருடம் நடக்க இருக்கும் அதிபர் தேர்தலில் அந்த நாட்டின் பிரதான கட்சிகளான ஜனநாயக கட்சி மற்றும் குடியரசு கட்சியின் அதிபர் தேர்தல் பிரதிநிதி யார் என்பது தான்.

இதற்காக அந்த இரண்டு கட்சிகளுக்குள்ளேயும் தனி தனியாக தேர்தல் விவாதங்கள் நடத்துகிறார்கள். கட்சிக்குள்ளேயே மாற்றி மாற்றி தாக்கி சண்டை போட்டு கொள்கிறார்கள்....

இந்த பரபரப்பில் நான் தெரிந்துக் கொண்டு ஆச்சர்யப்பட்ட ஒரு விஷயம் என்ன என்றால் அமெரிக்காவில் இதுவரை ஒரு பெண் அதிபர் கூட இல்லை.

அவ்வளவு ஏன் இதுவரைக்கும் இந்த நாட்டின் இரண்டு பிரதான கட்சிகளின் அதிபர் தேர்தல் பிரதிநிதியாக கூட பெண்கள் இருந்ததில்லை.

துணை அதிபராக வேண்டும் என்றால் பெண்கள் தேர்தலை சந்தித்திருக்கிறார்கள்.

இப்போது இருக்கும் அதிபர் ஒபாமா அந்த நாட்டின் நாற்பத்தி நான்காம் அதிபர்.

1789 முதல் இருக்கும் இந்த அரசியல் வழிமுறையில் ஒரு முறை கூட ஒரு பெண் அதிபர் ஆனதே இல்லை!!!!! அதிபர் என்ன, மேலே சொன்னது போல் தேர்தல் களம் கூட கண்டதில்லை.

உலகின் சூப்பர் பவர், பெரியண்ணன், ரொம்ப முற்போக்கான பழக்க வழக்கங்கள் கொண்ட நாடு என்றெல்லாம் சொல்ல படும் நாட்டில் இப்படி ஒன்று இருப்பது ஆச்சர்யமாக தான் இருக்கிறது.

யோசித்து பார்த்தால் 1947ல் சுதந்திரம் பெற்று 1966ல் பெண் பிரதமர் கொண்ட நம் இந்தியா இந்த விஷயத்தில் மிகவும் முன்னோடி தான்.

தாமதமாக என்றாலும் 2007ல் பெண் குடியரசு தலைவரையும் (பிரதீபா பட்டீல்) கண்டு விட்டோம்.

அவ்வளவு ஏன் இப்போது பாருங்கள்!

N – காஷ்மீரில் மெஹ்பூபா முப்தி அவர்கள்

E – மேற்கு வங்கத்தில் மம்தா பானர்ஜி அவர்கள்

W – குஜராத்தில் ஆனந்திபென் படேல் அவர்கள்

S – தமிழ் நாட்டில் ஜெயலலிதா அவர்கள்

என நான்கு திசையிலும் பெண்கள் நம் நாட்டில் முதல்வராக இருக்கிறார்கள்.

இவர்கள் நான்கு பேருமே திருமணம் செய்து கொள்ளவில்லை என்பது எக்ஸ்ட்ரா செய்தி.

தனால் நம் நாட்டில் பெண்கள் ரொம்ப முன்னேறி விட்டார்கள் என்றெல்லாம் சொல்லவில்லை. ஆனால் முன்னேறியும் இருக்கிறார்கள் என்று தான் சொல்ல வேண்டும்.

ஏதோ முன்னேற்றத்தின் சொருபமாக நாம் நினைக்கும் மேற்கத்திய நாடுகளை விட நம் நாட்டின் ரெகார்ட் இந்த விஷயத்தில் நல்லா தானே இருக்கு.

டுத்த முறை மேற்கத்திய நாடுகளுடன் ஒப்பிட்டு நம் நாட்டை குறைவாக சொல்லும் முன் ஒரு சில வினாடிகளேனும் சிந்தியுங்கள்.

meme

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.