எனக்காக
வறண்ட பூமி!
தேதி பார்த்து வரும் வசந்தம்!
காலை உதித்து மாலை சாயும்
சூரியன்!! - அலுப்புட்டுகிறது!!!!
வயதாக அக வாழ்வோடு
விவாகரத்து - பிடிக்கவில்லை!!!
வானமே கூரையாக
கைவிரித்து கூத்தாடும்
சுதந்திரமுடன் தெருவெங்கும்
ஓடி திரிய விடுமுறை
பத்திரம் இல்லாது- பட்டாம்பூச்சி
பிடித்து விளையாட என்று
என் நீண்ட கனவு நிறைவேற
ஒரு சுதந்திரப் போராட்டம்
எனக்காக - நடத்துங்கள் மகாத்மாவே!!!