(Reading time: 2 - 3 minutes)

அழகிய தமிழ் மகள் - மது

பன்னிரு கன்னிகைகள் ஒய்யார அணிவகுப்பு

பட்டம் யாருக்கு உங்களிடமே இறுதி முடிவு

 

பொங்கலும் துள்ளலுமாய் வருபவள்  தை - இவள்

பிறந்த நாள் ஊரெங்கும் அறுவடைத் திருநாள்.

 

மாசி மங்கை அடிவைத்தால் கெட்டி மேளம் முழங்கும்

மகா மகம் மகா சிவா ராத்திரி என பக்தி மணம் கமழும்

 

வசந்த காலத்தோடு கை கோர்த்தாள் பங்குனி

உத்திர நாளன்று வீதியெங்கும் கரகோஷ காவடி

 

சித்திரைக்குப் பொலிவு தரும் புத்தாண்டு தொடக்கம்

கத்திரி வெயிலிலும் மீனாட்சி  திருக்கல்யாணம்  கலை கட்டும்

 

சுப முகூர்ந்தங்கள் தாங்கி வந்தாள் வைகாசி

விசாகமும் சேர்ந்து விட்டால் அடிக்கும் யோகா ராசி 

 

ஆனி அமைதியாக சாதித்து நிற்பவள்

பருவ மழை பொழிந்து மகிழ்ச்சி தருபவள்

 

 வெள்ளி தோறும்  அம்மன் புகழை பாடி வந்தாள் ஆடி

பதினெட்டாம் பெருக்கு, தள்ளுபடி விற்பனை என இவள் அதிரடி

 

ஆவணி அன்பு மகள் குழந்தைகளுக்கு செல்லமிவள்

கொழுக்கட்டையும் பட்சணமும் ஊட்டி மகிழ்பவள்

 

முன்னோரை போற்றும் பக்தி பாவை புரட்டாசி

கொலுவும் சுண்டலும் ஒன்பது நாள் நவராத்திரி

 

ஐப்பசி அடைமழையுடன் உற்சாகமாய் பிரவேசிப்பாள்

பட்டாசும் புத்தாடையும் தீபாவளியில் ஜொலித்திடுவாள்

 

தீபங்கள் ஊர்வலமாய் மிளிர்ந்திடுவாள் கார்த்திகை

ஜோதி வடிவ தத்துவம் சொல்லிடும் இவள் வருகை

 

மார்கழி மலர்ந்தாள் - இவள் கண்ணனின் பிரிய தோழி

பனிக்காலமும் பாவை நோன்பும் சங்கீதம் இவள் மொழி

 

உங்கள் வாக்கு யாருக்கோ!!!

 "அழகிய தமிழ் மகள் " பட்டம் அவளுக்கே!!!

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.