(Reading time: 1 minute)

கவிதை - நமக்காக நாம் - மது

Sinthai mayanguthadi unnale

உனக்காக நான் விட்டுக் கொடுத்து
எனக்காக நீ அனுசரித்து நடந்து

உனக்காக நான் என் அடையாளம் தொலைத்து
எனக்காக நீ உன் இலட்சியங்கள் மறந்து 

உனக்காக நான் என் கனவுகளை இழந்து
எனக்காக நீ உன் நினைவுகளை மறைத்து

உனக்காக நான் என் உறவுகளை துறந்து
எனக்காக நீ உன் நேசங்களை தவிர்த்து

உனக்காக நானும் எனக்காக நீயும் என
சுயமிழந்து தான் நிரூபிக்க வேண்டுமோ  

நானாக  நானும் நீயாக  நீயும் என்றிருந்து 
நமக்காக நாம் என்பதிலே வாழும் நம் காதல்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.