தாகம் - ப்ரியா
பாலைவன வாழ்வின்
நிதர்சனம் அறியாமல்
தேடும் இடமெங்கும்
சோலை வேண்டி
காணும் இடமெங்கும்
கானல் தாண்டி
தாகத்துடன் அலையும் பயணங்கள்...
படிப்பு பாசம்
சொந்தம் சொத்து
காதல் கடமை
கல்யாண கலைகள்
குழந்தை வரன்கள்
குடும்பம் வேலை..
ஒவ்வொரு கானலிலும்
நீரை தேடி ஓடி
பாய்ந்து ஓய்ந்து
இறுதியாய் மரண கானலில்
மோட்சம் வேண்டி
தொடக்கம் முதல்
இறுதி வரை
தீராமல் போகும் தாகம்..!!
{kunena_discuss:779}