(Reading time: 1 - 2 minutes)

பிடிக்கும் - சுதாகர்

 couples

நம் திருமணம் முடிந்து பல வருடம் ஆகிவிட்டது இப்போது  சொல் என்னிடம் உனக்கு என்ன பிடிக்கும்

 

நீ தொட்டு பேசும்

அந்த கூச்சம் பிடிக்கும்

நீ கொஞ்சி பேசும்

அந்த வார்த்தை பிடிக்கும்

 

உன்னை கட்டிக் கொண்டு

தூங்கும் அந்த

போதை பிடிக்கும்

நீ முத்தம் வைத்து கண்

விழிக்கும் காலை பிடிக்கும்

 

நான் அடிக்கடி முத்தம்

வைக்கும்

உன் கண்ணம் பிடிக்கும்

ரகசியமாய் என்னை

ரசிக்கும் உன் எண்ணம்

பிடிக்கும்

 

சரி, இப்போது நீ சொல் உன் மனைவியான என்னிடம் உனக்கு அதிகம் பிடித்தது!!!!!!!!!!!

 

நீ அடிக்கடி முத்தம்

வைக்கும்

இதழ்கள் பிடிக்கும்

உன்னை விடாமல்

கட்டிக்கொண்டு பேச பிடிக்கும்

 

கட்டிலில் ஓயாமல்

சிணுங்கும் உன்

கொலுசை பிடிக்கும்

தினமும் உன்னை

பார்க்கப் பிடிக்கும்

 

உன்னை விட்டுக்கொடுக்காமல்

இருக்க பிடிக்கும்

உன்னை விட்டுப்பிரியாமல்

இருக்க பிடிக்கும்

 

உன் அழகை ரசிக்க பிடிக்கும்

நீ அறியாமல் உன்னை

அணைக்க பிடிக்கும்.

{kunena_discuss:779} 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.