(Reading time: 2 - 3 minutes)

சாபம் - சுதாகர்

 curse

விளையாட்டாய் ஒரு

சாபம்'

பலித்துவிட்டதா?

 

ஏமாற்றிவிட்டாள் என்று

நான் கொடுத்த

சாபம் பலித்துவிட்டதா?

 

வரமாய் வந்த என்

மகளை

கூட்டிக்கொண்டு

கோயிலுக்கு போனதும்

அங்கே

வரம் கேட்டு நின்றிருந்தால்

என் குழந்தையாய் இருந்தவள்

 

என் முதல் காதலி

என் முன்னாள் காதலி

 

எனக்கு குழந்தையாய்

இருந்தவள்

இன்று குழந்தை

வரம் வேண்டிக்கொண்டிருக்கிறாள்.

 

மறந்த காதலை(கண்ணீரை)

மகளுக்கு தரியாமல்

துடைத்துக்கொண்டேன்.

 

ஓயாமல் சிரித்துக்கொண்டே

இருடந்தவள்

கேட்கும்போதெல்லாம் சிரித்தவள்

'வாடாத மல்லிகை அவள்

எனக்காக மட்டும் வாசம்

வீசியவள்.

 

கவர்ச்சியை சிறிதும்

காட்டாதவள்

காமம் இல்லா காதலை

சொல்லித் தந்தவள்

 

முத்தம் அவள் கொடுத்ததும் இல்லை

நான் கேட்டதும் இல்லை

 

காலம் செல்ல பேச மறுத்தாள்

காரணம் கேட்டேன்

கூற மறுத்தாள்.

 

மறந்துவிடு என்றாள்

மாட்டேன் என்றேன்

"மன்னித்துவிடு

அவள் என்னிடம் சொன்ன 

கடைசி வார்த்தை.

 

அழைப்பு இல்லா அவள்

திருமணத்திற்கு

அழைப்பிதழோடு நான்

சென்று வந்தேன்.

 

எனக்கும் மணமானது

வந்தவள் போனவளை

மறக்கடுத்தாள்.

 

வரமாய் வந்த தேவதையை

கூட்டிக் கொண்டு

வரம் தந்தவனை காணச்சென்றேன்

அங்கே தான்

வரம் கேட்டுக்கொண்டு

இருந்தாள்

என் முன்னாள் காதலி.

 

நண்பனிடம் விளையாட்டாய்

சொன்ன

என் கண்ணிஸ் சாபம்

பலித்திவிட்டதோ?

 

திரும்பி நடந்தாள்

நான் ஒதுங்கிக்கொண்டேன்

 

யாரேன்று தெரியாமல்

என் மகளை

தூக்கி கொஞ்சினால்

பெயர் கேட்டால்

மகள் சென்னாள்

அவள் சிரித்தாள்

 

முத்தத்தை கொடுத்துவிட்டு

மகளுக்கு விடைகொடுத்தால்

 

என்னிடம் வந்த

என் மகள்

"அப்பா அவங்க எனக்கு

முத்தம் கொடுத்தாங்க" என்றாள்.

நானும் என் முத்தத்தை கொடுத்துவிட்டு

கிளம்பினோம்.

 

மகளுக்காக கோவிலுக்கு

சென்ற நான்

இனி அவளுக்காகவும்

கோவிலுக்கு செல்லப்போகிறேன்.

 

என் சாபம் விடுபட

அவள் வரம் பலித்திட.

{kunena_discuss:779} 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.