(Reading time: 2 - 3 minutes)

திருமண அழைப்பு - சுதாகர் 

marriage Invitation

காலை முதல்
உள்ளுக்குள் ஏதோ
ஒரு எதிர்பார்ப்பு

யாரோ வரப்போகிறாற்கள்

அடிக்கடி நான்
வாசலை பார்க்கின்றேன்
சிறு சத்தம் கேட்டாலும்
ஓடிச்சென்று பார்க்கின்றேன்

என்று இல்லாத எதிர்பார்ப்பு
அப்பா அம்மா
வரப்போகிறார்களா?
இல்லை அவர்கள் வரப்போவதில்லை
பின்பு யாருக்காக இந்த எதிர்பார்ப்பு.....

சமயல் முடிந்து
கொஞ்சம் உட்கார்ந்தேன்
இளைப்பார
கணவன் இன்னும்
தூக்கம் கலையவில்லை
பிள்ளைகள் விளையாடிக்கொண்டு
இருக்கிறார்கள்.

வாசல் பக்கம்
யாரோ நிற்கிறார்கள்

யாரையும் அழைக்கவில்லை
ஏனோ தயக்கம் அவருக்கு

மெல்ல வாசலை தாண்டி
வந்தார்
என்னை கண்டதும்

அடையாளம் தெரிந்ததும்
அசையாமல் நின்றேன்
எத்தனை பிரியமான
முகம்
என்றுமே மறக்க மாட்டேன்
என்று நான் சத்தியாம் செய்த முகம்
இன்றும் மறக்கவில்லை

அவனே தான் 
என் நேசத்தை நிஜமாக்கியவன்
நிஜமாக வந்திருக்கிறான்.

கணவன் குறல் கேட்டு
உள்ளே அழைத்தேன்

சின்னதாய் அறிமுகம்
கூடப் படித்தவர் என்று.
பொய் சொல்ல வேண்டும்
என்ற கட்டாயத்தில்
நிஜத்தை மறைத்தேன்

அவர்கள் இருவரும்
பேசிக்கொண்டு இருக்க
என் கண்கள் அவனையே
பார்த்துக்கொண்டி இருந்தது.

மாறி விட்டான்
நிறைய மாற்றங்கள் அவனுள்
அவன் சிரிப்பை தவிர

என்னை விட அவன்
அதிகம் காதலித்தான்

அவன் திருமணத்திற்க்கு
அழைப்பிதல் கொடுக்க
வந்திருக்கிறான்.
அழைப்பிதழை வாங்கிப் பார்த்தேன்.
அவன் இன்னும் மாறவில்லை

அழைப்பே இல்லா என்
திருமணத்திற்க்கு அவன்
வந்தது எனக்கு தெரியும்.

மணமகள் பெயரை
தடவிப்பார்த்தேன்
கண்கள் குளமாகின
இமைகள் கனமாகின
நெஞ்சம் சுமையாகின

ஒரேமுறை என்னை பார்த்து
மறக்காமல் வந்துவிடுங்கள் என்றான்.

நிச்சயம் போகத்தான் போகிறேன்
நான் தோற்ற இடத்தை
நிறப்ப வந்தவளை வாழ்த்த.

 

{kunena_discuss:779} 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.