(Reading time: 1 - 2 minutes)

காதல் மொழி - அனு.ஆர்

எங்கோ மொட்டவிழும் சலனம்.

நீ புன்னகைத்திருப்பாய் என புரிகின்றது.

சட்டென தோன்றும் பூமி முழுவதும் பூக்கள்

வாய்விட்டு சிரித்திருப்பாய்.

கூந்தலில் முல்லைச் சரம் கொண்டாயோ?

இங்கு குளிர்கிறதடி எனக்கு.

 

மழை துளியின் சிணுங்கல்.

கொலுசதிர தரை தொட்டன  உன் பாதங்கள்

மனகண்களில்.

இடியோடு மழை

என்னடி கோபம் உனக்கு?

 

காண்பவை எல்லாம் நீ!!

 

இருநூறு மலைகளும்,

இரேழு கடல்களும் பிரித்து நின்றாலும்

இடைவிடாது இம்சிக்கிறாய்.

இருப்பினும் உன் இருப்பிடம்

ஒன்றே இலக்காயிருக்கிறது.

 

பாதாதி கேசம் பந்தாடப் பட

பாவையிடம் பலியாக

பறக்க தொடங்கிவிட்டேன்.

 

என்னவனின்

“தொடங்கிவிட்டேன்”

குறுஞ் செய்திக்கு

அவன் தந்த முழு விளக்கம்.

 

என்னைப் போல் நீ

காதல் கொள்ளவில்லை.

உன் ஒற்றை வார்த்தை

உரையாடல்கள் சாட்சி!

என் சிணுங்கலுக்கு

அவன் பதில்;

 

சொல்லாத வார்த்தையில்

சொல்லுக்குட்படாத காதலுண்டு.

வார்த்தையில் தேடாதே

வாழும் முறைமையில்

காதல் காண்.

 

செய் செயலே

காதல் மொழி.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.