(Reading time: 1 - 2 minutes)

கனவுகள் - தாரணி

Dreams

கவின் மிகு 

இப்பூவுலகில் 

கனவுகளுக்கா  பஞ்சம் 

 

இல்லை காணும் 

மனிதர்களுக்கா பஞ்சம்......

ஏட்டுச் சுரைக்காய் போல் 

எதிர்மறை எண்ணங்களும் 

கற்பனை கனவுகளும் 

கானல் நீராகிறது ​​ ---

 

 பட்ட மரத்தை 

கண்கள் குளமென 

காத்துகிடந்து காக்கிறான் 

பசுமை போர்த்த காண்கிறான் 

ஏழை உழவனவன் ....

 

கடும் மழை குளிரில் 

பட்டினி போர்வை கொண்டு 

போவோரை பார்க்கிறான் 

சாலையோர சிறுவன் 

தானும் காண்கிறான் 

நாழிகை அவர்களை 

நின்று வியகவைபேன்  என ----

 

ஏமாற்றுவோன் காண்கிறான் 

ஏமாற்ற கோமாளிகள் 

பலருண்டு என-பாவம் 

எத்தனுக்கும் எத்தன் 

உண்டென உணராமல்...

 

நவநாகரீக அறிவாளிகள் 

உழவனை இகழ்கிறான் 

கான்கிரீட் காடுகள் 

புசிபதற்க்கு உகந்ததாக 

பகல் கனா கண்டு ....

 

உறவுகள் பொய்மை 

உணர்வுகள் மாயை 

தன்னலம் பொது உடைமை என

காண்கிறான் நம்-

மான்புமிகு மனிதன்...

 

உன் உயர்வு 

உன் கனவுகளின் 

உயிர்ப்பில் புதையுண்டு 

உயிர்ப்பிக்க காத்துக்கிடக்கிறது ..........

{kunena_discuss:779}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.