(Reading time: 1 minute)

தீர்வு - ஷக்தி

solution

 

விதியின் சதியான குழப்பங்களில் 

 

தனிமை ஒன்று புரியவைக்க 

கடமை ஒன்று கணக்கு போட

சுற்றம் ஒன்று சுட்டி காட்ட 

உறவு ஒன்று உரிமை எடுக்க

காலம் ஒன்று கதை சொல்ல

கனவு ஒன்று பதில் அளிக்க 

நட்பு ஒன்று உடன் நிற்க 

தான் ஒன்று நினைக்க 

கண்ணீரும் கலங்கி நிற்க 

 

வாழ்க்கை வழக்கமாய் பாடம் சொல்லும் ,

அனுபவத்திற்கு அடிமையாகி போனேன்.. 

 

அனுபவமே தீர்வாகி போனதேன்..?

அத்தனை குழப்பங்களிலும்.. 

 

காலம் கடந்து காத்திருப்பேன் 

மற்றுமொரு அனுபவத்திற்கு....  

{kunena_discuss:779}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.