(Reading time: 4 - 7 minutes)

 

அன்பு ஆகாயம் என்றால்

அது முடிவில்லாமல் படர்ந்திருக்கும் !

 

அன்பு நீர் என்றால்

அது பிரிக்கும்போதும் இணையும் !

 

அன்பு நிலம் என்றால்

அது துயரங்களையும் தாங்கும் !

 

கண்ணன் நிலமானான்

ராதை அவன் மடியில் பாரம் இறக்கினாள்  !

 

கண்ணன் ஆகாயம் ஆனான்

ராதை நீலநிறத்தின்மீது ப்ரியம்கொண்டாள் !

 

கண்ணன் நீரானான்

ராதை அவனை கண்ணீராய்  மாற்றி கன்னங்களில் பிணைத்துகொண்டாள் !

 

கண்ணன் நெருப்பானான்

ராதை அவனுக்குள் குளிர் காய்ந்தாள்  !

 

இன்று ,கண்ணன் காற்றானான்

உருவமில்லாமலும் காதல் வாழும் என உணர்த்துகிறான் !

 

யார் ராதை ?

மானிட பெண்ணா ? தேவலோக மங்கையா ?

உன் ஆருயிர் தோழியா ? இல்லவே இல்லை!

ராதையே கண்ணன் .கண்ணனே ராதை !

 

சூரியனின் பிம்பமே சந்திரன்

கண்ணனின் பிம்பமே ராதை !

 

இரண்டும் ஒன்றாய் கலந்த நிலையிது

கண்ணன் நடத்தும் காதல் கலையிது

 

இதில் கேள்வி கேட்க நீ யார் ?

பதில் உரைக்க நானும் யார் ?

 

புரிந்து கொள்வாயாக !

சேர்ந்து பிரியும் , பிரிந்து சேரும் இதயங்களுக்கு பாலமும் தேவையா ?

 

கேட்டது புள்ளிமான் கேள்வியை

உணர்ந்தாள் அருந்ததி உண்மையை !

 

திரும்பி நடந்தாள்  நன்றி கூறி ,

அவள் பாதையை மறைத்தது காற்றில் பறந்துவந்த மயில்பிலி !

 

விக்கித்து திரும்பினாள்  ஆச்சர்யமாய்

நின்றான் கண்ணன் அங்கு திவ்யஉருவமாய் !

 

மனம் குளிர்ந்தேன் அருந்ததி

உன் நட்பின் ஆழத்தில் !

 

கோபியர் என்னை அன்பிற்கினியவனாய்  வேண்டினர்

நான் அன்பை வழங்கினேன் !

 

அண்ணன் என்னை சகோதரனாய் வேண்டினார்

நான் சகோதர பிணைப்பை வழங்கினேன் !

 

ராதை என்னை சரிபாதியாய் வேண்டினாள் 

நான் என்னையே வழங்கினேன் !

 

நீ உன் தோழியின் நேசத்திற்காக நட்புடன் என்னை வேண்டினாய்

நான் என் நட்பை தருகிறேன் !

 

வா என்று அழைக்குமுன்னே

 கண்ணன் உன் தோழனாய் துணையிருப்பேன் !

 

வழங்கினான் அருளை மாதவன்

சிலிர்த்தாள் அருந்ததி கண்ணீருடன் !

 

மயில்கள் நடனம் ஆடிட

வசந்தமாய் மாறியதே அவன் பாதம் பட்ட கானகம்!

 

அடுத்த அத்தியாயத்தில் சந்திப்போம்

Ratha Krishnan kathal - 06

Ratha Krishnan kathal - 08

{kunena_discuss:779}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.